மேலும் அறிய

வெண்ணமலை பிரச்னை; 441 ஓட்டு வித்தியாசத்தில் வென்றவர் 420 ஆக வேலை செய்கிறார் - செந்தில் பாலாஜி

வெண்ணமலை பிரச்னை தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் ஒரு குழு அமைத்து இதற்கான தீர்வை கூடிய விரைவில் தீர்வு காணப்படும்.

2026-லும் தி.மு.க தலைமையிலான கூட்டணிதான் மகத்தான வெற்றி பெறும் என்று கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

கரூர், திருவள்ளூர் விளையாட்டு மைதானத்தில் கரூர் மாவட்ட திமுக சார்பில் மாநில இளைஞரணி செயலாளர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 49 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, கரூர் மாவட்ட அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான சிலம்பம் போட்டியை கரூர் மாவட்ட செயலாளர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.

முதல் நாள் போட்டிகளில்,  பெண்களுக்கான போட்டியை சட்டமன்ற உறுப்பினர் துவக்கி வைத்தார். இந்தப் போட்டியில் 14 முதல் 19 வயது வரை பெண்கள் கலந்து கொண்டனர் மற்றும் பொது பிரிவு, வயது வரம்பு கிடையாது பெண்களும் கலந்து கொண்டனர்.

இந்தப் போட்டியில் முதல் பரிசு 25 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசு ரூ.20 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.15 ஆயிரம் என மொத்தம் 7 லட்சத்து 20 ஆயிரம் பெண்களுக்கான பரிசுத் தொகையை வழங்க உள்ளனர்.

கரூர் மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே போட்டியில் கலந்து கொண்டனர். முதல் சுற்று நாக் அவுட் முறையில் வெற்றி பெற்றவர்களுக்கு பிக்சர்ஸ் போடப்பட்டு தொடர்ந்து போட்டிகள் நடைபெறும் என்று தெரிவித்தனர்.

வெண்ணமலை பிரச்னை; 441 ஓட்டு வித்தியாசத்தில் வென்றவர் 420 ஆக வேலை செய்கிறார் - செந்தில் பாலாஜி

போட்டியை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த  சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி கூறியதாவது:

வெண்ணமலை நிலப்பிரச்னை

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இந்து அறநிலை துறைக்கு சார்ந்த இடங்கள் கையகப்படுத்தப்படவில்லை. ஆனால், கரூர் மாவட்டத்தில் முக்கியமாக கரூர் சட்டமன்ற தொகுதியை மட்டும் குறிவைத்து சேலத்தை சார்ந்த  திருத்தொண்டர் அறக்கட்டளை ராதாகிருஷ்ணன் அவர்களை வைத்து அதிமுக நிர்வாகிகளை வைத்து செயல்பட்டு வருகிறார்கள். 2018 - 19 அதிமுக ஆட்சிக்காலத்தில் பல்வேறு அரசு  அலுவலர்களின் குளறுப்படிகளால் இந்த சட்ட பிரச்சனை ஏற்பட்டுள்ளது. 441 ஓட்டு வித்தியாசத்தில் வென்றவர் 420 ஆக வேலை செய்கிறார். இவரால்தான், வெண்ணமலையில் இனாம் நிலம் பிரச்சினை ஏற்பட்டது. அதிமுக ஆட்சி காலத்தில் இருந்த குளறுபடி ஒன்றும் தெரியாதவர்கள்போல், அதிமுக சார்ந்தவர்கள் மக்களுக்கு நல்லது செய்கிறேன் என்று மீண்டும் தெரிவித்து வருகின்றனர். வெண்ணமலை பிரச்னை தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் ஒரு குழு அமைத்து இதற்கான தீர்வை கூடிய விரைவில் தீர்வு காணப்படும். 2026-லும் தி.மு.க தலைமையிலான கூட்டணிதான் மகத்தான வெற்றி பெறும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

‘விஜய் மீதான விவாகரத்து வழக்கை சங்கீதா வாபஸ் பெற்றது ஏன்?' பின்னணியில் நடந்த பாசப்போராட்டம்..!
‘விஜய் மீதான விவாகரத்து வழக்கை சங்கீதா வாபஸ் பெற்றது ஏன்?' பின்னணியில் நடந்த பாசப்போராட்டம்..!
தமிழகத்தில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை? சென்னை? - வானிலை ரிப்போர்ட்
தமிழகத்தில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை? சென்னை? - வானிலை ரிப்போர்ட்
15 நிமிட காணொளி விசாரணை! வழக்கு வாபஸ்! முதல்வர் விஜய் விவகாரத்தில் மனைவி சங்கீதா செய்த காரியம்!
15 நிமிட காணொளி விசாரணை! வழக்கு வாபஸ்! முதல்வர் விஜய் விவகாரத்தில் மனைவி சங்கீதா செய்த காரியம்!
மெடிக்கல் படிக்க ஆசையா? - புதுச்சேரி நீட் மருத்துவப் படிப்பு விண்ணப்ப காலக்கெடு நீட்டிப்பு
மெடிக்கல் படிக்க ஆசையா? - புதுச்சேரி நீட் மருத்துவப் படிப்பு விண்ணப்ப காலக்கெடு நீட்டிப்பு

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Chennai Power Cut: சென்னைல ஆகஸ்ட் 8-ம் தேதி சனிக்கிழமை எங்கெங்க மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? லிஸ்ட் இதோ
சென்னைல ஆகஸ்ட் 8-ம் தேதி சனிக்கிழமை எங்கெங்க மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? லிஸ்ட் இதோ
Japanese SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
Embed widget