மேலும் அறிய

ஆளுநரை விமர்சித்து முரசொலியில் வந்த கட்டுரை.. பழமொழியின் அர்த்தம் தெரியுமா..?

பெரியண்ணன்’ மனப்பான்மையோடு அரசியல் செய்ய நினைத்தால், “கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா..” - எனும் பழங்கதை மொழியை ஆளுநருக்கு நினைவுபடுத்த விரும்புகிறோம்.

“கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா..” - எனும் பழங்கதை மொழியை அவருக்கு நினைவுபடுத்த விரும்புகிறோம்; அதாவது, இது நாகாலாந்து அல்ல; தமிழகம் என்பதை அவர் உணர்ந்திட வேண்டும்! என்று முரசொலியில் ஆளுநரை விமர்சித்து கட்டுரை வெளியிடப்பட்டது. தற்போது முரசொலி பயன்படுத்திய பழமொழியின் கதையை குறித்து தெரிந்துகொள்ளலாம்.

பதினெண் சித்தர்களுள் ஒருவரான கொங்கணர் ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். கொங்கணர் திருப்பதியில் ஜீவ சமாதி அடைந்ததாக சொல்லப்படுகிறது. போகரின் சீடர் ஆவாராம். காடுகளில் தவம் மேற்கொள்வதை கொங்கணர் விரும்புவார். ஒரு முறை ஆழ்ந்த தவத்தில்  கொங்கணர் இருந்தபோது, மரக்கிளையில் அமர்ந்திருந்த கொக்கு ஒன்று அவர் மீது எச்சமிட்டது. இதனால், கொங்கணரின் தவமும் கலைந்தது. 

இதானால் கோபமடைந்த அவர், தனது கோபத்தீயில்  கொக்கை எரித்து சாம்பலாக்கினார். சாம்பலாய் கிடந்த அந்த கொக்கை கர்வத்துடன் பார்த்த கொங்கணர், அங்கிருந்து அதே மமதையுடன் புறப்பட்டார்.

கொங்கனர் மிக நீண்ட தவத்தில் இருந்ததால் பசி அவரை வாட்டியது. கொக்கை எரித்த கர்வத்துடன் இருந்த அவர், பசியுடனும் திருவள்ளுவர் வீட்டுக்கு யாசகம் கேட்டுச் சென்று  நின்றுள்ளார்.

கொங்கணர் யாசகம் கேட்டு வீட்டு வாசலில் இருந்து அழைத்தாலும், கணவருக்கு பணிவிடை செய்துக்கொண்டிருந்ததால் சற்று தாமதமாகவே வாசுகி அவருக்குப் பிச்சை  போட்டுள்ளார்.

இதனால் கோபமடைந்த கொங்கணர், "உனக்கு என்ன ஒரு அலட்சியம்” என்று வாசுகியை எரிப்பது போல பார்த்தார். ஆனால், வாசுகிக்கு எதுவும் ஆகவில்லை.

மாறாக, தன்னை எரிக்கும் நோக்கத்தில் பார்க்கும் கொங்கணரை பார்த்து மெல்லிய புன்னகையுடன், ”என்னை கொக்கென்று நினைத்தாயா கொங்கணவா?’ என்று வாசுகி அம்மையார் திரும்பிக்கேட்க சற்றே அதிர்ந்து போனார்.

எங்கோ நடந்த சம்பவம் வாசுகிக்கு எப்படி தெரியும் என்ற கேள்வியுடன் அவரை எதிர்கொள்ள முடியாமல் தலை கவிழ்ந்து நின்றார்.

சினம் தனிந்த கொங்கணர் ஒரு உண்மையை உணர்ந்தார். அவரவர் தர்மப்படி கடமையைத் தவறாமல் செய்வது, தன்னடக்கத்துடன் இருப்பது ஆகியவைகள் மனிதனை எந்த சக்தியும் ஒன்று செய்ய முடியாது என்பதை உணர்ந்து கொண்டார். இந்த கதையை தான் ஆளுநருக்கு திமுகு கூறியுள்ளது முரசொலியின் மூலமாக.

இன்று, முரசொலியில் வெளியான அந்த கட்டுரை கீழே:

தமிழக ஆளுநர் பொறுப்பேற்றுள்ள ரவி அவர்கள், சில நேரங்களில் தனது அதிகார எல்லை மீறி செயல்படத் தொடங்கியுள்ளாரோ என எண்ணிடத் தோன்றுகிறது! இன்றைய தமிழக ஆளுநர் மேதகு ரவி, தமிழக ஆளுநராகப் பொறுப்பேற்கு முன் நாகாலாந்தின் ஆளுநராகப் பொறுப்பேற்றுப் பணியாற்றிய போது, நடந்து கொண்ட விவகாரங்கள் பெரும் விமர்சனத்துக்கு ஆளாகின!

நாகாலாந்தின் தேசியவாத ஜனநாயக கட்சியின் தலைவர் சிங்வாங் கோன்யாக் (Chingwang Konyak) அங்கு ஆளுநராகப் பணியாற்றிய திரு.ரவி குறித்து கருத்தறிவிக்கையில், “ஆளுநர் ரவியின் செயல் பாடு மகிழ்ச்சி தருவதாக இருந்ததில்லை... மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் செயல்பாடுகளில் அவரது குறுக்கீடு அதிக மிருந்தது” - என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டியிருந்தார்! நமது ஆளுநராக வந்துள்ள ரவியின் அத்துமீறல்கள், நாகாலாந்து அரசு நிர்வாகத்தின்மீது மட்டுமல்ல; அங்குள்ள ஊடகவியலாளர்கள் மீதும் இருந்துள்ளது!

நாகாலாந்து ஆளுநர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, தமிழக ஆளுநராக அவர் நியமிக்கப்பட்ட நேரத்தில், ஆளுநர் ரவிக்கு அந்த அரசு சார்பில் ஒரு பிரிவு உபச்சாரக் கூட்டம் நடத்தப்பட்டது; அப்போது பத்திரி கையாளர்கள் ஒட்டுமொத்தமாக ஆளுநர் ரவிக்குத் தரப்பட்ட பிரிவு உபச்சார விழா வைப் புறக்கணித்துள்ளார்கள்! அந்தப் பிரிவு உபச்சார விழாவில் கலந்து கொள்ளுமாறு பத்திரிகையாளர்களுக்கு பல வேண்டுகோள்கள் வைத்தும், அவை களை ஏற்க அவர்கள் முன்வரவில்லை; அந்தச் செய்தியாளர்களை அந்த அளவு தான் கவர்னராக நாகாலாந்தில் இருந்த காலத்தில் புண்படுத்தியுள்ளார் ரவி! இத்தகைய வரலாற்றுப் பின்னணிக ளோடு தமிழக ஆளுநராக நியமிக்கப் பட்டுப் பொறுப்பேற்றுள்ளார் ரவி!. ஆளுநர் திரு.ரவி அவர்கள் அரசியல்வாதியாக இருந்து, அரசியல் தட்ப வெப்பங்களை உணர்ந்து, அனு பவங்கள் பல பெற்று ஆளுநர் ஆன வரில்லை; அவர் ஒரு காவல் துறை அதிகாரியாக இருந்து, ஓய்வுக்குப் பின் கவர்னராக அமர்த்தப்பட்டவர்! மிரட்டல் உருட்டல் பாணிகள் காவல் துறைக்குத் தேவை ; பல நேரங்களில் அந்த பாணி கைகொடுக்கும் ஆனால் அது அரசியலில் எடுபடாது என்பதை அவர் உணர்ந்திட வேண்டும்! 


ஆளுநரை விமர்சித்து முரசொலியில் வந்த கட்டுரை.. பழமொழியின் அர்த்தம் தெரியுமா..?


குடியரசு தின விழாவை ஒட்டி ஆளுநர் ரவி விடுத்துள்ள செய்தி - அவர் தனது பொறுப்புணராது தமிழக மக்களின் தன் மானத்தை உரசிப்பார்க்க நினைப்பதாகவே தோன்றுகிறது! ‘நீட்'டுக்கு எதிராக தமிழகச் சட்ட மன்றம் ஒரு மனதாகத் தீர்மானம் நிறை வேற்றி அதனை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி மாதங்கள் சில கடந்தும், அது கிடப்பிலே கிடக்கிறது; அதன் நிலை என்ன என்று தெரியாத நிலையில், ‘நீட்’ வருவதற்கு முன், இருந்த நிலையை விட 'நீட்' வந்தபின் அரசுப் பள்ளி மாண வர்களின் மருத்துவப் படிப்பு சேர்க்கை அதிகரித்துள்ளது என்று கூறியிருக்கிறார்!

ஒட்டுமொத்தத் தமிழகமுமே (ஒருசில சங்கிகளைத் தவிர) நீட்டை எதிர்த்து நிற்கும் நிலையில், தமிழகத்தின் சட்டப் பேரவையே அதனை எதிர்த்து ஒருமித்துத் தீர்மானம் நிறைவேற்றியுள்ள வேளையில்; அதுவும் அவரது பரிசீலனையில் இருக்கும் கால கட்டத்தில், ஒரு ஆளுநர் இப்படி அறிவிப்பது – எந்த வகை நியாயம் ? மேதகு ஆளுநர் ரவியின் குடியரசு தினச் செய்தி இன்று ஊடகங்களில் விவாதப் பொருளாகியுள்ளது. ஆளுநரின் கருத் துக்கு உரிய எதிர்ப்பை தமிழக தொழிற் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்!

மேதகு ரவி, ஆளுநர் பொறுப்பேற் றுள்ள தமிழ்நாடு, மற்ற இந்திய மாநி லங்களைப் போன்றது அல்ல; என்பதை முதலில் அவர் உணர வேண்டும்! இந்த மண், அரசியலில் புடம் போடப்பட்ட மண்! இங்கே குக்கிராமங்களில் வசிப்பவர்கள் கூட அரசியல் தெளிவு மிகுந்தவர்கள். ஆளுநர் ரவி எத்தகைய கருத்தையும், தெரிவிக்குமுன் தமிழகத் தைப் புரிந்து கொண்டு - அதன் வரலாற்றைத் தெளிவாகத் தெரிந்து கொண்டு கூறுவது, அவரது பதவிக்குப் பெருமை சேர்க்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஏறத்தாழ 7 கோடி தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அடங்கிய தமிழகச் சட்ட மன்றம் ஒருமனதாக நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பிய தீர்மானத்தின் மீது எந்தக் கருத்தும் தெரிவிக்காது - சட்டத்தின் சந்து பொந்துகளில் பதுங்கிக் கொண்டு இருப்பது எந்தவித நியாயம் என்பதை ஆளுநர் ரவி தெரிவிக்க வேண்டும்!

ஒரு கட்சி தனது கொள்கைகளைச் சொல்லி, மக்களிடம் வாக்குப் பெற்று ஆட்சிப் பீடம் ஏறுகிறது! மக்களும் அவர் கள் எண்ணத்தை ‘அந்தக் கட்சி நிறை வேற்றும்' என்று எண்ணி வாக்களிக்கிறார்கள்! அந்த மக்களின் எதிர்பார்ப்பை - தீர் மானமாக்கி அனுப்பும் போது, அதை ஒரு ஆளுநர் அலட்சியப்படுத்துவது என்பது, சுமார் 7 கோடி மக்களை அவமதிப்பது என்பதை உணர வேண்டும்! தமிழகம், அரசியலில் பழுத்த பழங்களை ஆளுநராகக் கண்ட மாநிலம்!

ஸ்ரீபிரகாசா, உஜ்ஜல்சிங், கே.கே.ஷா, பி.சி. அலெக்சாண்டர், பர்னாலா, பட்வாரி, சென்னா ரெட்டி, ரோசையா, புரோகித் என அரசியல் வாதிகளையும், அதிகாரிகளையும் ஆளுநர்களாகப் பார்த்த மாநிலம் தமிழ்நாடு! அரசியல் சட்டம் அவர்களுக்கு அளித்த அதிகாரத்தை மதித்துப் புகழ் பெற்றவர்களும், மிதித்து களங்கங்களாக விளங்கியவர்களும் உண்டு!

ஆளுநர், ஒன்றிய அரசின் பிரதிநிதி என்பதை ஏற்கிறோம்; அவருடைய தலையாயக் கடமை, தான் பொறுப்பேற்றிருக்கும் மாநில மக்களின் ஒட்டுமொத்தக் கருத்தை ஒன்றி யத்துக்குத் தெரிவித்து அவர்களுக்கு உண்மை நிலையை உணர்த்த வேண்டுமே தவிர, ஒன்றிய அரசின் முடிவை மக்கள் மீது திணிப்பது அல்ல; அதனை முதலில் தமிழக ஆளுநர் ரவி உணர வேண்டும்!

தமிழக அரசியல்வாதிகள் பல கருத்துக் களில் ஒன்றுபடுவதில்லை; ஆனால் பல ஜீவாதார உரிமைகளில் அவர்கள் ஒன்று பட்டு நிற்பார்கள்! அங்கே கட்சி வேறுபாடு களைக் காண முடியாது. அப்படிப்பட்ட உரிமை களில் ஒன்றுதான் ‘நீட்' வேண்டாம் என்பது! தமிழகத்தைப் பொறுத்தவரை இரு மொழிக் கொள்கைதான் ; இதிலே ஆளும் கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் மாறுபட்ட கருத்தில்லை. பல பிரச்சினைகளில், எதிரும் புதிருமாக இருந்தாலும்; தமிழகத்தின் சில பிரச்சினைகளில் ஒட்டுமொத்தத் தமிழகமும் ஒன்றிணைந்து நிற்கும்! அதிலே ஒன்று, இருமொழிக் கொள்கை; மற்றொன்று 'நீட்' வேண்டாமென்பது!

ஆளுநர் ரவி இதனை உணர்ந்து - உரிய தகவலை மோலிடத்துக்குத் தந்து – ஒட்டு மொத்தத் தமிழகத்தின் உரிமைக் குரலுக்கு அங்கீகாரம் வாங்கித் தர முயற்சி செய்ய வேண்டும்! அதனை விடுத்து இங்கே 'பெரியண்ணன்’ மனப்பான்மையோடு அரசியல் செய்ய நினைத்தால், “கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா..” - எனும் பழங்கதை மொழியை அவருக்கு நினைவுபடுத்த விரும்புகிறோம்; அதாவது, இது நாகாலாந்து அல்ல; தமிழகம் என்பதை அவர் உணர்ந்திட வேண்டும்! - என அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
Embed widget