மேலும் அறிய

Vijayakanth Discharged: 23 நாட்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்..

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று காலை வீடு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை பூரண குணமடைந்து வீடு திரும்பியதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vijayakanth Discharged: 23 நாட்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்..

தே.மு.தி.க. தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்த், கடந்த 18- ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்ட நிலையில், அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்ட நிலையில், கடந்த வாரம் விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லை என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. இதனால் திரையுலகினரும், தொண்டர்களும் அவரது கவலையடந்தனர். ஒரு சிலர் மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தனர்.

இதற்கிடையே யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் விஜயகாந்த்தின் உடல்நிலை குறித்த வதந்திகள் பரவத்தொடங்கின.  இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார், “கேப்டன் நன்றாக உள்ளார். ஏன் வதந்திகளை தொடர்ந்து பரப்புகிறீர்கள். அவரை பற்றி தவறான செய்தியை போடுவதற்கு முன்னால் எங்களிடம் ஒரு வார்த்தை கேட்கலாமே. விஜயகாந்த் நன்றாக உள்ளார். அவர் விரைவில் வீடு திரும்புவார். அவரை பற்றிய வதந்தியான செய்தி ஒரு மனைவியாக எந்த அளவுக்கு எனக்கு பாதிப்பை ஏற்படுத்தும்..? நல்லா இருக்கும் கேப்டனை அந்த அளவுக்கு கேவலப்படுத்தி விட்டீர்கள். அவர் மேல் எதற்கு இத்தனை வன்மம்? அவர் நன்றாக உள்ளார். இரண்டு, மூன்று நாட்களில் வீட்டிற்கு வந்துடுவார். அதை அறிவித்துவிட்டு தான் நாங்கள் வீட்டிற்கு செல்வோம். நீங்கள் யாரும் அவருடன் இல்லை. கேப்டன் கூட நான் ஒரு ஆள் தான் இருக்கிறேன். அவர் நலமுடன் இருப்பதை நான் தான் கூறமுடியும். அவரை பற்றிய வதந்திகளால் மனவருத்தம் அடைந்துள்ளேன். தயவு செய்து யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம்” என கேட்டுக் கொண்டார். 

அதுமட்டுமின்றி வதந்திகள் பரவிவந்த நிலையில், விஜயகாந்த் உடன் இருக்கும் புகைப்படத்தை பிரேமலதா வெளியிட்டார். கிட்டத்தட்ட 23 நாட்கள் தேமுதிக தலைவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலை இன்று காலை அவர் பூரண குணமடைந்து வீடு திரும்பியதாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
Personal Loan வாங்கப் போறீங்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? மாசம் EMI எவ்வளவு?
Personal Loan வாங்கப் போறீங்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? மாசம் EMI எவ்வளவு?
Tamilnadu Headlines: நெல்லையில் முதலமைச்சர்... சென்னையில் வாக்காளர் சிறப்பு முகாம் - 10 மணி சம்பவங்கள்
Tamilnadu Headlines: நெல்லையில் முதலமைச்சர்... சென்னையில் வாக்காளர் சிறப்பு முகாம் - 10 மணி சம்பவங்கள்
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
Personal Loan வாங்கப் போறீங்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? மாசம் EMI எவ்வளவு?
Personal Loan வாங்கப் போறீங்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? மாசம் EMI எவ்வளவு?
Tamilnadu Headlines: நெல்லையில் முதலமைச்சர்... சென்னையில் வாக்காளர் சிறப்பு முகாம் - 10 மணி சம்பவங்கள்
Tamilnadu Headlines: நெல்லையில் முதலமைச்சர்... சென்னையில் வாக்காளர் சிறப்பு முகாம் - 10 மணி சம்பவங்கள்
Teacher Job: ஆசிரியர்களுக்கு குஷி.! மாதம் ரூ.1.25 லட்சம் சம்பளம் - சூப்பரான வாய்ப்பை அறிவித்த தமிழக அரசு
ஆசிரியர்களுக்கு குஷி.! மாதம் ரூ.1.25 லட்சம் சம்பளம் - சூப்பரான வாய்ப்பை அறிவித்த தமிழக அரசு
காவல் உதவி ஆய்வாளர் தேர்வு... 4 மையங்கள்: 4200 விண்ணப்பதாரர்கள் எழுதுகின்றனர்
காவல் உதவி ஆய்வாளர் தேர்வு... 4 மையங்கள்: 4200 விண்ணப்பதாரர்கள் எழுதுகின்றனர்
Maruti Suzuki: பட்ஜெட்டில் கார் வேண்டுமா? 5+ புது மாடல்களுக்கு ப்ளூ-ப்ரிண்ட் ரெடி - மாருதி அதிரடி, ரெண்டே வருஷம்
Maruti Suzuki: பட்ஜெட்டில் கார் வேண்டுமா? 5+ புது மாடல்களுக்கு ப்ளூ-ப்ரிண்ட் ரெடி - மாருதி அதிரடி, ரெண்டே வருஷம்
Shubman Gill: ஸ்கெட்ச் போட்டு கில்லை தூக்கிய பிசிசிஐ? வார்னிங்கில் கேப்டன் சூர்யகுமார்? - கடைசி நேர ட்விஸ்ட்
Shubman Gill: ஸ்கெட்ச் போட்டு கில்லை தூக்கிய பிசிசிஐ? வார்னிங்கில் கேப்டன் சூர்யகுமார்? - கடைசி நேர ட்விஸ்ட்
Embed widget