மேலும் அறிய

Vijaya prabhakaran: ‛அரசியலில் நேருக்கு நேர் மோதுங்க... குடும்பத்திடம் வராதீங்க...’ - விஜயகாந்த் மகன் உருக்கம்!

குடும்பத்தை  தொந்தரவு செய்வது தேவையற்ற மன உளைச்சலை தருகிறது - விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் வேதனை

தனது தந்தையைக் குறித்து தேவையற்ற தகவல்களை பரப்பி வருவதாகக் கூறி தேமுதிக தலைவர் விஜயாகாந்த் மகன்  விஜயபிரபாகரன் வேதனை அடைந்தார்.  

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் கட்சி நிர்வாகி இல்லத் திருமண விழாவை விஜயபிரபாகரன் கலந்து கொண்டார். பின்னர், மணமக்களை வாழ்த்தி பேசிய அவர், " உடல்நிலை பாதிப்பால் தனது தந்தை படும் கஷ்டத்தை அனைவரும் அறிந்துள்ளனர்.    அரசியலில் நேருக்கு நேராக மோதிப்பார்க்க வேண்டும். அதை சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், குடும்பத்தை  தொந்தரவு செய்வது தேவையற்ற மன உளைச்சலை தருகிறது" என்று தெரிவித்தார். 

திமுக, அதிமுக என்ற இரண்டு பெரிய திராவிட கட்சிகளுக்கு மாற்றாக விஜயகாந்த் அரசியல் பேசப்பட்டது. விஜயகாந்த் நல்ல உடல்நலத்துடன் இருக்கும்போது 3 வது பெரிய கட்சியாக உருவெடுத்தது. 2011 சட்டமன்றத் தேர்தலில் திமுகவை விட அதிக தொகுதிகளை வென்று  எதிர்கட்சியாக வளர்ந்தது. 

2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்தார் விஜயகாந்த். இந்த முடிவை ஏற்காத தேமுதிகவின் பல முக்கிய நிர்வாகிகள் அப்போதே கட்சியிலிருந்து விலகத் தொடங்கினர். அந்த தேர்தலில் தேமுதிக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. அதன் பின்னர் தொடர் சரிவை சந்திக்கத் தொடங்கியது தேமுதிக.

2016 தேர்தலில் மக்கள் நலக்கூட்டணிக்கு தலைமை தாங்கிய தேமுதிகவுக்கு பெரிய அடி விழுந்தது. விஜயகாந்தின் உடல் நிலை மோசமானதால் பிரேமலதா விஜயகாந்தும், அவரது தம்பி சுதீஷும் கட்சியை நிர்வகித்து வந்தனர். ஆனால், தவறான வியூகங்கள் காரணமாக தே.மு.தி.க. தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. பல நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலகி வருகின்றனர். 

2019 மக்களவைத் தேர்தலில் அதிமுக – பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக கட்சி, 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் தொகுதிப் பங்கீட்டில் திருப்தி இல்லாத காரணத்தால் அந்த கூட்டணியில் இருந்து விலகியது. பின்னர் அமமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட தேமுதிக ஒரு இடத்தில் கூட வெற்றிபெற முடியாமல் படுதோல்வியை சந்தித்தது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தும் மிக மோசமாக தோல்வி அடைந்தார்.

தேமுதிக துவங்கி 16 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், தற்போது அதன் அரசியல் இருத்தலே கேள்விக்குறியாகி உள்ளது.    முன்னதாக, தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்த விஜயகாந்த், " 100 ஆண்டுகள் ஆனாலும் தேமுதிகவை யாராலும் அழிக்க முடியாது.
நமது கழகம் என்றென்றும் தமிழகத்தில் வேரூன்றி இருக்கும்.  
கழகத்தின் மீது அவதூறு பரப்புபவர்களின் வார்த்தைகளை தொண்டர்கள் யாரும் நம்ப வேண்டாம்.நமது கழகம் வளர்ச்சி பாதையை நோக்கி செல்வதற்கு தொண்டர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்" என்று பதிவிட்டார்.

"தேமுதிக அதே எழுச்சியோடுதான் செயல்படுகிறது .வெற்றி தோல்வி என்பது வந்து போகும். மீண்டும் தேமுதிகவை தூக்கி நிறுத்துவோம். மக்கள் எங்களை தேர்தல் நேரத்தில் அங்கீகரிக்காததால் தேர்தலில் தோல்வியுற்றோம். வாக்கு சதவீதம் அப்படியே உள்ளது. தொண்டர்கள் அப்படியேதான் இருக்கிறார்கள்.வருங்காலத்தில் தேமுதிக ஆரம்பித்ததன் லட்சியம் நோக்கி பயணிப்போம்" என விஜயபிரபாகரன் முன்னதாக செய்தியாளர்களிடம் தெரிவித்து இருந்தார்.     

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண  

மேலும் வாசிக்க: ‛பொறுக்கித் தனம் அது....’ நீர் வீழ்ச்சியில் தாய் சேயை காப்பாற்றிவரிடம் போனில் பேசிய கமல்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK cadres joins TVK |துரைமுருகன் கோட்டையில் ஓட்டை!தவெகவிற்கு பாயும் திமுகவினர்!விஜய் பக்கா ஸ்கெட்ச்Maipi clarke | கிழித்தெறியப்பட்ட மசோதா! ஹக்கா நடனமாடிய பெண் MP! வாயடைத்து போன நாடாளுமன்றம்Tindivanam train | ரயிலில் சிக்கிய 7 மாத குழந்தை! ஓடிவந்து காப்பாற்றிய மக்கள்! திக் திக் நிமிடங்கள்5th Class Student Question to Nirmala Sitharaman | கேள்வி கேட்ட சிறுவன்..அசந்து போன நிர்மலா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
Kubera Glimpse : அருணாச்சலம் பட கதை மாதிரி இருக்கே.. தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இதோ
Kubera Glimpse : அருணாச்சலம் பட கதை மாதிரி இருக்கே.. தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இதோ
"இரவு நேரங்களில் அவசர தேவைனா.. GH போங்க" அலட்சியமாக பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன்
TNPSC Telegram Channel: தமிழக போட்டித் தேர்வர்களே, உங்களுக்குத்தான்...! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
TNPSC Telegram Channel: தமிழக போட்டித் தேர்வர்களே, உங்களுக்குத்தான்...! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
தமிழே படிக்காத கல்வி அமைச்சர் மகன்..! ”இதுதான் உங்க மொழிப்பற்றா?” பொளக்கும் எதிர்க்கட்சிகள்!
தமிழே படிக்காத கல்வி அமைச்சர் மகன்..! ”இதுதான் உங்க மொழிப்பற்றா?” பொளக்கும் எதிர்க்கட்சிகள்!
Embed widget