Chennai Air Quality Index: ஒவ்வொருவரும் 45 சிகெரெட்டுகள் புகைத்தால்!? அதுதான் சென்னை! பட்டாசின் தீபாவளி பரிசு!
சென்னை: தீபாவளி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்ட சுழலில் சென்னையில் காற்றின் தரம் மிக மோசமான நிலைக்கு சென்றுள்ளது.
தீபாவளி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்று குறைந்ததை அடுத்து மக்கள் சர்வசாதாரணமாக வெளியில் உலாவின் பட்டாசு வெடித்தனர். பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றமும், தமிழ்நாடு அரசும் வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்திருந்தாலும் மக்கள் அதனை பெரும்பாலும் பின்பற்றவில்லை.
Tiruvannamalai : பட்டாசு இல்லா தீபாவளி.. வெளவால்களை தெய்வமாக பார்க்கும் கிராமம்!
மக்கள் சாலைகளிலும், வீதிகளிலும் பட்டாசுகள் வெடித்ததன் காரணமாக வானத்தில் பறக்கும் பறவையிலிருந்து வாகனத்தில் செல்லும் மனிதர்கள்வரை அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். சாலை எங்கும் புகை மண்டலமாக காட்சியளித்ததால் சென்னையில் இருக்கிறோமா இல்லை போர்க்களத்தில் இருக்கிறோமா என்ற எண்ணம் பலரிடம் எழுந்தது.
இந்நிலையில் நேற்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு வெடிக்கப்பட்டதால் சென்னையில் காற்றின் தரம் மிக மோசமான நிலைக்கு சென்றுள்ளது. மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட தகவலின்படி சென்னையில் இன்று காலை 6 மணி நிலவரப்படி காற்று தரக்குறியீடு 153ஆக அதிகரித்துள்ளது.
தீபாவளிக்கு வெடித்த பட்டாசால் சென்னையில் ஒருவர் 45 சிகரெட் பிடித்த அளவுக்கு காற்று மாசு அடைந்ததுhttps://t.co/wupaoCQKa2 | #Deepavali | #ChennaiPollution | #Diwali pic.twitter.com/XIgPW2jMdD
— ABP Nadu (@abpnadu) November 5, 2021
சாதாரண நாட்களில் 50 முதல் 80வரை காற்று தரக்குறியீடானது இருக்கும். எனவே, இது வழக்கத்தைவிட அதிகமானது. இதேபோல், சென்னையில் ஒவ்வொரு பகுதிவாரியாகவும், காற்று மாசு அளவினை மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
அதன்படி, அதிகபட்சமாக பெருங்குடியில் 213 என்ற தரக்குறியீட்டில் காற்று மாசு அளவு பதிவாகியுள்ளது. இதேபோல், அரும்பாக்கம்-191, ராயபுரம்-160, மணலி-164, ஆலந்தூர்-121, வேளச்சேரி-53 என காற்று மாசு பதிவாகியுள்ளது. மாசு தரக்குறியீட்டை பொறுத்தவரை 0-50 என்ற அளவில் இருந்தால்தான் நல்லது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஏற்பட்டிருக்கும் காற்றின் மாசு சென்னையில் ஒருவர் 45 சிகரெட்டுகள் புகைத்ததற்கு சமமானது.
காற்று மாசு அளவின் விவரம்:
0 - 50வரை - ஆரோக்கியமானது
51 - 100வரை - காற்று சுவாசிக்க ஏதுவானது.
101 - 150வரை - உடல்நலக்குறை ஏற்படுபவர்கள், சுவாசப் பிரச்சினை உள்ளவர்கள் சுவாசிக்க உகந்தது இல்லை
151 - 200வரை - ஆரோக்கியமான காற்று இல்லை.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: Sadhguru on Crackers Ban | பட்டாசுக்கு தடை? மாசு குறித்து கவலைப்படுபவர்களே கார் ஓட்டாதீர்கள் - சத்குரு ஜக்கி காட்டம்