மேலும் அறிய

Diwali Special Bus: 14 ஆயிரம் பேருந்துகள்! தீபாவளிக்கு ஊருக்குப் போறீங்களா? புறப்படத் தயாராகுங்க!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 14 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். இதன் காரணமாக சென்னை, திருச்சி, கோவை, மதுரை, சேலம், நெல்லை உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பண்டிகைக்காக செல்வது வழக்கம். இதற்காக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். 

14 ஆயிரம் சிறப்பு பேருந்துகள்

இதையடுத்து, சென்னையில் இருந்து அரசு சார்பில் 11 ஆயிரத்து 176 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இந்த பேருந்துகள் வரும் 28ம் தேதி முதல் 31ம் தேதி வரை இயக்கப்பட உள்ளது.  மொத்தமாக தமிழ்நாடு முழுவதும் 14 ஆயிரத்து 16 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. நவம்பர் 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை 9 ஆயிரத்து 441 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. கிழக்கு கடற்கரை வழியாக செல்லும் பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட உள்ளது. 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் 28ம் தேதி முதல் 30ம் தேதி வரை சென்னையில் இருந்து தினசரி இயக்கக்கூடிய 2 ஆயிரத்து 92 பேருந்துகளுடன்  4 ஆயிரத்து 900 சிறப்பு பேருந்துகள் என தொடர்ந்து 3 நாட்களுக்கும் சேர்த்து 11 ஆயிரத்து 176 பேருந்துகளும், பிற ஊர்களில் இருந்து 3 நாட்களுக்கு 2 ஆயிரத்து 910 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 14 ஆயிரத்து 86 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.  

தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர் பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு வரும் பயணிகளுக்காக நவம்பர் 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை தினசரி இயங்கக்கூடிய 2 ஆயிரத்து 92 பேருந்துகளுடன் 3 ஆயிரத்து 165 சிறப்பு பேருந்துகள் என தொடர்ந்து 3 நாட்களுக்கு மொத்தமாக 9 ஆயிரத்து 441 பேருந்துகள் ஏனைய பிற முக்கிய ஊர்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 3 ஆயிரத்து 165 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 12 ஆயிரத்து 606 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது.

28ம் தேதி முதல் 30ம் தேதி வரை தீபாவளிக்காக இயக்கப்படும் பேருந்துகள்:

28ம் தேதி ( திங்கள் கிழமை)

தினசரி இயக்கப்படும் பேருந்துகள் – 2 ஆயிரத்து 092

சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் – 700

மற்ற ஊர்களில் இருந்து   - 330

29ம் தேதி ( செவ்வாய்)

வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகள்  - 2 ஆயிரத்து 92

சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் – 2 ஆயிரத்து 125

மற்ற ஊர்களில் இருந்து பேருந்துகள்     - 1, 130

30ம் தேதி (புதன்கிழமை)

வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகள் – 2 ஆயிரத்து 92

சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் – 2 ஆயிரத்து 75

மற்ற ஊர்களில் இருந்து பேருந்துகள் – 1 ஆயிரத்து 450

இந்த 3 நாட்களில் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளான 6 ஆயிரத்து 276 பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகளாக 7 ஆயிரத்து 740 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

கிளாம்பாக்கத்தில் 7 முன்பதிவு மையங்களும், கோயம்பேட்டில் 2 முன்பதிவு மையங்களும் என மொத்தம் 9 முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.  பயணிகள் முன்பதிவு செய்வதற்கு ஏதுவாக www.tnstc.in இணையதளம் மூலமாகவும், tnstc official app மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget