Pa. Ranjith On Dmk: ”ஆம் நாங்கள் ரவுடிகள் தான்; காவல்துறைக்கு எச்சரிக்கை விடுக்கிறேன்” - இயக்குனர் பா. ரஞ்சித் ஆவேசம்
Pa. Ranjith On Dmk: மறைந்த ஆம்ஸ்ட்ராங் பற்றி திமுக அவதூறு பரப்புவதாக, இயக்குனர் பா. ரஞ்சித் குற்றம்சாட்டியுள்ளார்.
![Pa. Ranjith On Dmk: ”ஆம் நாங்கள் ரவுடிகள் தான்; காவல்துறைக்கு எச்சரிக்கை விடுக்கிறேன்” - இயக்குனர் பா. ரஞ்சித் ஆவேசம் director pa.ranjith slams dmk it wing over there comment on bsp chief armstrong Pa. Ranjith On Dmk: ”ஆம் நாங்கள் ரவுடிகள் தான்; காவல்துறைக்கு எச்சரிக்கை விடுக்கிறேன்” - இயக்குனர் பா. ரஞ்சித் ஆவேசம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/21/c1a9c7912b70c591931a755a94d2604a1721531762317732_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Pa. Ranjith On Dmk: மறைந்த ஆம்ஸ்ட்ராங் பற்றி திமுக அவதூறு பரப்புவதாக, இயக்குனர் பா. ரஞ்சித் குற்றம்சாட்டியுள்ளார்.
ஆம்ஸ்ட்ராங்க் நினைவேந்தல் பேரணி:
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த 5ம் தேதி கூலிப்படை கும்பலால் சென்னை பெரம்பூரில் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பினரும் திமுக அரச்ன் மீது ஏராளமான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். குறிப்பாக, சட்ட-ஒழுங்கை பேணுவதில் அரசு தோல்வி கண்டுவிட்டதாகவும் சாடினர். இந்நிலையில், தான் இயக்குனர் பா. ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில், சென்னையில் நேற்று ஆம்ஸ்ட்ராகின் நினைவேந்தல் பேரணி நடைபெற்றது.
திமுக மீது பா. ரஞ்சித் குற்றச்சாட்டு:
பேரணியின் முடிவில் பேசிய இயக்குனர் பா. ரஞ்சித், “ஆம்ஸ்ட்ராங் அண்ணன் கொல்லப்பட்ட உடனே அவரை ரவுடி என சிலர் எழுதினர். ஆம்ஸ்ட்ராங் அண்ணனை ரவுடி என குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் எழுதிய அயோக்கியர்கள் யார்? முற்போக்குவாதிகள் அசல் முற்போக்குவாதிகள் தான் அப்படி எழுதினர். ஆம்ஸ்ட்ராங் தவறான நபர் என முதலில் பாஜக எழுதியது. உடனே மற்றொரு கும்பல் களமிறங்கியது. அது திமுக ஐடி விங். அவர்கள் சமூக வலைதளங்கள் முழுவதும் ஆம்ஸ்ட்ராங் பற்றி தவறான கருத்துகளை பரப்பினர். இவர்களுக்கு எல்லாம் கொஞ்சமும் யோசனையே கிடையாதா? அதிகாரத்திற்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் ரவுடிகள் என்றால்? ஆம் நாங்கள் ரவுடிகள் தான்.
காவல்துறைக்கு எச்சரிக்கை:
காவல்துறைக்கு எச்சரிக்கை விடுக்கிறேன். ஆம்ஸ்ட்ராங்கின் இந்த படுகொலையை மிக எளிதாக கையாண்டு விட்டு சென்று விடலாம் என மட்டும் நினைத்து விடாதீர்கள். அண்ணல் அம்பேத்கர் கற்றுக் கொடுத்த சட்ட வழிமுறைப்படி நடப்பவர்கள் நாங்கள். 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தலித்துகளை ஒன்று திரட்டி அவர் வன்முறையை நோக்கி நகர்த்தவில்லை. பவுத்தம் என்ற அறவழியை நோக்கி நகர்த்தியவர் தான் எங்கள் அம்பேத்கர். அவர்கள் வழியில் நாங்கள் போராடிக்கொண்டு இருக்கிறோம். எங்களிடன் சரியான சட்ட வழிமுறை உள்ளது. நாங்கள் போராடுவோம். இதை எளிதாக விட்டுவிடமாட்டோம். ஆம்ஸ்ட்ராங்கின் படுகொலைக்கு பின்னாள் இருக்கும் அயோக்கியர்களை கண்டுபிடிக்காத வரை நாங்கள் உங்களை சும்மா விடமாட்டோம்” என இயக்குனர் பா. ரஞ்சித் பேசினார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)