திண்டுக்கல்: துணி காயப்போடும் போது மின்சாரம் தாக்கியதில் தந்தை மற்றும் 2 மகன்கள் உட்பட 3 பேர் உயிரிழப்பு
’’மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை மற்றும் 2 மகன்கள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை’’
திண்டுக்கல் அருகே உள்ளது செட்டியபட்டி கிராமம் இக்கிராமத்தை சேர்ந்தவர் திருப்பதி (45). இவர் விவசாய கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டிற்கு எதிரே உள்ள தெருவிளக்கு கம்பத்தில் துணிகளை காயப்போட இரும்பு கம்பியை கொண்டு கொடிகட்டி உள்ளார். இந்நிலையில் திண்டுக்கல் மற்றும் சுற்று வட்டார பகுதியில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது. இன்று 01.10.21 காலை திருப்பதி குளித்துவிட்டு ஈரத்துண்டை வீட்டிற்கு வெளியே உள்ள இரும்பு கொடி கம்பியில் காய போட்டுள்ளார் அப்பொழுது மின்சாரம் தாக்கி திருப்பதி துடித்துள்ளார் இதனைப் பார்த்த அவரது மகன்கள் சந்தோஷ்குமார் (15) ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார், விஜயகணபதி (17) 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். இருவரும் தந்தையை காப்பாற்ற சென்றுள்ளனர்
அவர்களையும் மின்சாரம் தாக்கியுள்ளது இச்சம்பவத்தை பார்த்த அருகில் உள்ள வீட்டில் வசித்துவரும் முருகன் அவரது மனைவி சூரிய 3 பேரையும் காப்பாற்ற சென்று உள்ளனர் அவர்களை மின்சாரம் தாக்கி உள்ளது இந்நிலையில் திருப்பதி அவரது மகன்கள் சந்தோஷ்குமார், விஜய் கணபதி ஆகியோர் சம்பவ இடத்திலேயே மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர் காப்பாற்ற சென்ற முருகன் மற்றும் அவரது மனைவி சூர்யா பலத்த காயமடைந்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து அம்பத்தூரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.