சிறப்பு பேருந்துகளை இயக்கும் முடிவை எடுத்தது ஏன்? - தமிழக அரசுக்கு டி.டி.வி தினகரன் கேள்வி
கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில், சிறப்பு பேருந்துகளை இயக்கும் முடிவை அரசு எடுத்தது ஏன்? என்று தமிழக அரசுக்கு அ.ம.மு.க. பொதுச்செயலாளர் தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு ஊரடங்கு மேலும் எந்த தளர்வுகளும் இன்றி ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்று மற்றும் இன்று மட்டும் அனைத்து கடைகளும் திறக்கவும், வெளியூர்களில் சிக்கியுள்ள நபர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லவும் தமிழக அரசு அனுமதித்துள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவும், எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, அ.ம.மு.க. பொதுச்செயலாளர் தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழகம் முழுவதும் கடைவீதிகளில் அலைமோதும் மக்கள் கூட்டத்தை பார்க்கும்போது கொரோனா பாதிப்பு இன்னும் அதிகரிக்குமோ என்ற அச்சமும் கவலையும் ஏற்படுகிறது. நோயின் பாதிப்பு அதிகமாகிறது என்று சொல்லிவிட்டு, எல்லாக் கடைகளையும் ஒன்றரை நாள் முழுமையாக திறக்க எப்படி அனுமதித்தார்கள்?
தமிழகம் முழுவதும் கடைவீதிகளில் அலைமோதும் மக்கள் கூட்டத்தை பார்க்கும்போது கொரோனா பாதிப்பு இன்னும் அதிகரிக்குமோ என்ற அச்சமும் கவலையும் ஏற்படுகிறது. நோயின் பாதிப்பு அதிகமாகிறது என்று சொல்லிவிட்டு, எல்லாக் கடைகளையும் ஒன்றரை நாள் முழுமையாக திறக்க எப்படி அனுமதித்தார்கள்? 1/4
— TTV Dhinakaran (@TTVDhinakaran) May 23, 2021
சிறப்பு பேருந்துகளை இயக்கும் அவசர முடிவை எடுத்தது ஏன்? நகரங்களில் இருக்கும் அதிக பெருந்தொற்று பாதிப்பு எல்லா ஊர்களுக்கும் பரவி விடாதா? ஏற்கனவே காலை 10 மணி வரை கடைகள் திறந்து இருந்த நிலையில், அதன் பிறகு அவசியமின்றி வெளியில் வந்தவர்களை முழுமையாக கட்டுப்படுத்தாமல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சரியான திட்டமிடுதல் இன்றி இப்படி குழப்புவது ஏன்? கடந்த ஆட்சியாளர்கள் செய்த அதே தவறுகளை தற்போதைய தமிழக அரசும் செய்வது எங்கே போய் முடியும் என்று தெரியவில்லை.
சிறப்பு பேருந்துகளை இயக்கும் அவசர முடிவை எடுத்தது ஏன்? நகரங்களில் இருக்கும் அதிக பெருந்தொற்று பாதிப்பு எல்லா ஊர்களுக்கும் பரவி விடாதா? ஏற்கனவே காலை 10 மணி வரை கடைகள் திறந்து இருந்த நிலையில், அதன் பிறகு அவசியமின்றி வெளியில் வந்தவர்களை முழுமையாக கட்டுப்படுத்தாமல்,.....2/4
— TTV Dhinakaran (@TTVDhinakaran) May 23, 2021
சிறப்பு பேருந்துகளை இயக்கும் அவசர முடிவை எடுத்தது ஏன்? நகரங்களில் இருக்கும் அதிக பெருந்தொற்று பாதிப்பு எல்லா ஊர்களுக்கும் பரவி விடாதா? ஏற்கனவே காலை 10 மணி வரை கடைகள் திறந்து இருந்த நிலையில், அதன் பிறகு அவசியமின்றி வெளியில் வந்தவர்களை முழுமையாக கட்டுப்படுத்தாமல்,.....2/4
— TTV Dhinakaran (@TTVDhinakaran) May 23, 2021
இதன் பிறகாவது ஆட்சியாளர்கள் பொறுப்போடு நடந்து கொள்வார்களா? மக்களும் மிகுந்த கவனத்தோடு நடந்துகொண்டு தாங்களும் பாதிக்கப்படாமல், மற்றவர்களும் பாதிப்படைவதற்கு காரணமாகிவிடாமல் இருந்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இதன் பிறகாவது ஆட்சியாளர்கள் பொறுப்போடு நடந்து கொள்வார்களா? மக்களும் மிகுந்த கவனத்தோடு நடந்துகொண்டு தாங்களும் பாதிக்கப்படாமல், மற்றவர்களும் பாதிப்படைவதற்கு காரணமாகிவிடாமல் இருந்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.4/4
— TTV Dhinakaran (@TTVDhinakaran) May 23, 2021
No point in blaming the govt for spike in covid cases when we the people behave in such a irresponsible manner. Pls read the lockdown rules.
— KhushbuSundar ❤️ (@khushsundar) May 23, 2021
மேலும், பா.ஜ.க. நிர்வாகியும், ஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்ற பா.ஜ.க. வேட்பாளரான நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில், “ மக்கள் பொறுப்பற்ற முறையில் நடந்துகொள்ளும்போது கொரோனா தொற்று அதிகரிப்பதற்கு அரசை குறைகூறுவதில் எந்த அர்த்தமும் இல்லை. ஊரடங்கு விதிகளை கண்டிப்பாக படியுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.