மேலும் அறிய

கட்ட பொம்மனுக்கு எட்டயபுரம் அரசர் துரோகம் செய்தாரா? தவறான தகவலை நீக்க வலியுறுத்தல்

10ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் சுதந்திரப் போராட்ட மாவீரர் வீரபாண்டிய கட்ட பொம்மனுக்கு எட்டயபுரம் அரசர் துரோகம் செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வரலாற்று பிழையை விளக்கி, பாடப்புத்தகத்தில் இருந்து நீக்குமாறு அமைச்சர் அன்பில் மகேஸை எட்டயபுரம் சமஸ்தானத்தின் 42 வது ராஜா வலியுறுத்தி உள்ளார்.

தமிழ்நாடு பள்ளிக்கல்வி மற்றும் பயிற்சி வாரியம் (SCERT) சார்பில் வெளியிடப்பட்ட 10ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் சுதந்திரப் போராட்ட மாவீரர் வீரபாண்டிய கட்ட பொம்மனுக்கு எட்டயபுரம் அரசர் துரோகம் செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இது முற்றிலும் தவறான தகவல் ஆகும். இந்த வரலாற்று பிழையை உரிய தரவுகளோடு விளக்கி, பாடப்புத்தகத்தில் இருந்து நீக்குமாறு தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸை எட்டயபுரம் சமஸ்தானத்தின் 42 வது ராஜா சந்திர சைதன்யா நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து  உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

இதுகுறித்து சந்திர சைதன்யா வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாடு தனிப்பெரும் நாகரிகமும், வரலாறும் கொண்ட மண். இந்த மண்ணின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்கிறது எங்களின் எட்டயபுரம் சமஸ்தானம். மகாகவி சுப்பிரமணிய பாரதியார், உமறுப் புலவர், இசை மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் என வரலாற்று ஆளுமைகள் பலரும் வாழ்ந்த மண் எங்கள் எட்டயபுரம்.

இத்தகையோரின் பெருமைமிகு வரலாறுகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வேளையில், ஏற்கனவே உள்ள சில வரலாற்றுப் பிழைகளை திருத்தும் பணியும் காலத்தின் கட்டாயமாக மாறி இருக்கிறது. தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆய்வு மற்றும் பயிற்சி வாரியம் (SCERT) சார்பில் வெளியிடப்பட்ட 10ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் சுதந்திரப் போராட்ட மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு எட்டயபுரம் அரசர் துரோகம் செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது முற்றிலும் தவறான தகவல் ஆகும்.

இந்த தவறான தகவலை பாடப்புத்தகத்தில் இருந்து நீக்குமாறு, தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தோம். நமது பாடப் புத்தகத்தில் உள்ள வரலாற்றுப் பிழை குறித்தும் தரவுகளுடன் விளக்கினோம். நாங்கள் தெரிவித்த தகவல்களை பொறுமையுடன் கேட்டுக் கொண்ட அமைச்சர், இதுகுறித்து சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

வரலாற்றுப் பிழைகளை திருத்தி உண்மையான வரலாற்றை நம் பிள்ளைகள் கற்க வேண்டும் என்பதற்காக, நாங்கள் கேட்ட உடன் கடும் பணிச்சுமைக்கு இடையிலும் நேரம் ஒதுக்கி எங்களின் கோரிக்கைக்கு செவி மடுத்த அமைச்சர் அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
Modi Putin Meet: கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
Pakistan Asim Munir CDF: அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
ED Vs Anil Ambani: அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
Modi Putin Meet: கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
Pakistan Asim Munir CDF: அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
ED Vs Anil Ambani: அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
Udhayanidhi Stalin: ''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
Top Searched People: ஒரு நிமிஷம்.. இவங்கல்லாம் யாரு?.. 2025ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள்!
Top Searched People: ஒரு நிமிஷம்.. இவங்கல்லாம் யாரு?.. 2025ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள்!
Live-In is not illegal: “18 வயதை கடந்தவர்கள் லிவ்-இன் முறையில் வாழ சட்டப்படி தடை இல்லை“ - ராஜஸ்தான் நீதிமன்றம் அதிரடி
“18 வயதை கடந்தவர்கள் லிவ்-இன் முறையில் வாழ சட்டப்படி தடை இல்லை“ - ராஜஸ்தான் நீதிமன்றம் அதிரடி
Kanimozhi Slams BJP: ''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
Embed widget