மேலும் அறிய

Tuberose (Sampangi) Flower: தர்மபுரி : தொடர் மழையால் சம்பங்கி கிலோ ரூ.20-க்கு விற்பனை.. விவசாயிகள் வேதனை..

தொடர் மழையால் சம்பங்கி விளைச்சல் மற்றும் வரத்து அதிகரிப்பு-கிலோ ரூ.20-க்கு விறபனையாவதால் விவசாயிகள் கவலை.

தருமபுரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் சம்பங்கி விளைச்சல் மற்றும் வரத்து அதிகரிப்பு-கிலோ ரூ.20-க்கு விறபனையாவதால் விவசாயிகள் கவலை.

தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், காரிமங்கலம், மாரண்டஅள்ளி, பொம்மிடி, கடத்தூர், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 1500க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் சம்பங்கி பூ சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. சம்பங்கி பூ சாகுபடி செய்வதில் பூச்சிக்கொல்லி மருந்து பூச்சி தாக்குதல் உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் இல்லாமல் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் வருமானத்தை கொடுக்கிறது. இது ஒரு ஏக்கருக்கு 5 முதல் 6 டன் வரை பூ சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் சாகுபடி செய்கின்ற சம்பங்கி பூக்கள் சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, ஓசூர், சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. மேலும் தருமபுரி நகரப் பேருந்து நிலையத்தில் உள்ள உள்ளூர் மார்க்கெட்டில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக கோடை மழை பெய்து வருகிறது. இதனால் சம்பங்கி பூ விளைச்சல் அதிகரித்து, பூக்கள் சந்தைக்கு விற்பனைக்கு வரத்தும் அதிகரித்துள்ளது. ஆனால் கடந்த சில வாரங்களுக்கு முன் முகூர்த்த நாட்கள், கோவில் திருவிழாக்கள் இருந்ததால், பூக்களின் ஏற்றுமதியும்,  உள்ளூர் தேவையும் அதிகரித்தது. இதனால் உள்ளூர் மார்க்கெட்டிற்கு பூக்களின் வரத்து குறைந்தது. இதனால் சம்பங்கி பூக்களின் விலை உயர்ந்து கிலோ ரூ.70-க்கு விற்பனையானது. இதனால் சம்பங்கி பூக்கள் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்ர்.  இந்நிலையில் தொடர் கோடை மழையால், தருமபுரி மாவட்டத்தில் சம்பங்கி பூக்களின் விளைச்சல் அதிகரித்து,  மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரித்தது. ஆனால் இன்று சம்பங்கி பூ விலை கடுமையாக சரிந்து, கிலோ ரூ.20-க்கு விற்பனையகிறது. தருமபுரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், விளைச்சல் அதிகரித்து, விலை குறைந்துள்ளது. இதனால் போதிய வருவாய் கிடைக்கவில்லை, அறுவடை கூலி கூட கொடுக்க முடியவில்லை என விவசாயிகள் மிகுந்த வேதனையடைந்துள்ளனர். ஏற்கனவே கொரோனா காலத்தில் விலையில்லாமல் பேரிழப்பை சந்தித்து வந்தனர். கடந்த சில வாரங்களில் விலையுர்ந்ததால், மகிழ்ச்சியடைந்துனர். ஆனால் தற்போது திடீரென விலை கடுமையாக சரிந்ததால், விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Assembly: அதானி விவகாரம், பதில் சொல்வரா? முதலமைச்சர் ஸ்டாலின் - இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை
TN Assembly: அதானி விவகாரம், பதில் சொல்வரா? முதலமைச்சர் ஸ்டாலின் - இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை
வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
விசிகவில் இருந்து தூக்கி எறியப்படும் ஆதவ் அர்ஜுனா? சாட்டையை சுழற்றிய திருமா!
விசிகவில் இருந்து தூக்கி எறியப்படும் ஆதவ் அர்ஜுனா? சாட்டையை சுழற்றிய திருமா!
என் கூட குடும்பம் நடத்த முடியாது; ஆனால் ரோகித் நடத்துவார்: எப்படின்னு விவரிக்கும் அன்னபூரணி அரசு அம்மா
என் கூட குடும்பம் நடத்த முடியாது; ஆனால் ரோகித் நடத்துவார்: எப்படின்னு விவரிக்கும் அன்னபூரணி அரசு அம்மா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK Vs TVK | Aloor Shanavas: என்னது விஜய் கூத்தாடியா? உங்க தலைவர் திருமா யாரு? ஷா நவாஸை பொளக்கும் பிரபலங்கள்!Aadhav Arjuna: VCK Issue : ஆதவ் பற்றவைத்த நெருப்புகோபத்தில் விசிக சீனியர்ஸ்! கட்சியை காப்பாற்றுவாரா திருமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: அதானி விவகாரம், பதில் சொல்வரா? முதலமைச்சர் ஸ்டாலின் - இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை
TN Assembly: அதானி விவகாரம், பதில் சொல்வரா? முதலமைச்சர் ஸ்டாலின் - இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை
வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
விசிகவில் இருந்து தூக்கி எறியப்படும் ஆதவ் அர்ஜுனா? சாட்டையை சுழற்றிய திருமா!
விசிகவில் இருந்து தூக்கி எறியப்படும் ஆதவ் அர்ஜுனா? சாட்டையை சுழற்றிய திருமா!
என் கூட குடும்பம் நடத்த முடியாது; ஆனால் ரோகித் நடத்துவார்: எப்படின்னு விவரிக்கும் அன்னபூரணி அரசு அம்மா
என் கூட குடும்பம் நடத்த முடியாது; ஆனால் ரோகித் நடத்துவார்: எப்படின்னு விவரிக்கும் அன்னபூரணி அரசு அம்மா
சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை: கஸ்தூரி வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை! 
சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை: கஸ்தூரி வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை! 
"பக்திமானா இருப்பார் போல" பெட்ரோல் பங்கில் சாமியை கும்பிட்டுவிட்டு ஆட்டைய போட்ட திருடர்!
"அவங்களுக்கு தகுதி இருக்கு" மம்தா தலைமையில் இந்தியா கூட்டணி? பயங்கர வியூகமா இருக்கே!
Vijay - Seeman:
Vijay - Seeman: "திருமாதான் வேண்டும்" சீமானை கண்டுகொள்ளாத விஜய்! அப்செட்டில் அண்ணன்!
Embed widget