மேலும் அறிய

Dhanush Rolls Royce Car: ரோல்ஸ் ராய்ஸ் கார் வரி பாக்கியை 48 மணிநேரத்திற்குள் செலுத்த வேண்டும் - நடிகர் தனுஷிற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சொகுசு காரான ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான நுழைவு வரி பாக்கியான ரூபாய் 30.30 லட்சத்தை அடுத்த 48 மணிநேரத்திற்குள் செலுத்த வேண்டும் என்று நடிகர் தனுஷிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காரான ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான நுழைவு வரி பாக்கியான ரூபாய் 30 லட்சத்தை செலுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் நடிகர் தனுஷிற்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், அந்த நுழைவு வரி பாக்கியை அடுத்த 48 மணிநேரத்திற்குள் செலுத்த வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இந்த வழக்கை முடித்துவைத்துள்ளது.

முன்னதாக, கடந்த 2015ம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தனது சொகுசுகாரான ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவுவரி ரூ.60.66 லட்சம் செலுத்த வணிகவரித்துறை உத்தரவிட்டதை எதிர்த்து நடிகர் தனுஷ் நீதினம்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 50 சதவீதம் வரி செலுத்தினால் காரை பதிவு செய்ய ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு 2015ம் ஆண்டு அக்டோபரில் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ரூ.30.33 லட்சம் வரி செலுத்தியதாக தனுஷ் கூறியதால் விதிகளை பின்பற்றி பதிவு செய்ய 2016ம் ஆண்டு ஏப்ரலில் உத்தரவிடப்பட்டது. 

Dhanush Rolls Royce Car: ரோல்ஸ் ராய்ஸ் கார் வரி பாக்கியை 48 மணிநேரத்திற்குள் செலுத்த வேண்டும் - நடிகர் தனுஷிற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

இறக்குமதி வாகனங்களுக்கு நுழைவு வரி விதிக்க தடை விதித்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் போடப்பட்டுள்ளன. கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்த வழக்கில் உச்சநீதிமன்றம், நுழைவு வரி வசூலிக்க மாநில அரசுகளுக்கு  அதிகாரம் உள்ளது என்று கடந்த 2019ஆம் ஆண்டு தீர்ப்பளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு விதிக்கப்பட்ட நுழைவு வரியை எதிர்த்து நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கில் இன்று (05/08/2021) தீர்ப்பளிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் நடிகர் தனுஷ் தொடர்ந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்க உள்ளதாக நீதிபதி எஸ்.சுப்ரமணியம் தலைமையிலான அமர்வு தெரிவித்திருந்தது. 

Dhanush Rolls Royce Car: ரோல்ஸ் ராய்ஸ் கார் வரி பாக்கியை 48 மணிநேரத்திற்குள் செலுத்த வேண்டும் - நடிகர் தனுஷிற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

ஏற்கனவே நடிகர் விஜய் இதே காருக்கு வரி விலக்கு கேட்டு தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.சுப்பிரமணியம்,அவரது விபரங்களை மறைத்து மனு தாக்கல் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தததுடன், 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தார். மேலும் படத்தில் கருத்து பேசும் நடிகர்கள், வரி செலுத்துவதில் நேர்மையாக இருக்க வேண்டும் என்பது மாதிரியான கறார் கருத்துக்களையும் தெரிவித்திருந்தார். அதை எதிர்த்து விஜய் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ள நிலையில், அதே நீதிபதி முன்பு இன்று தனுஷ் வழக்கு வந்தது. 50 சதவீதம் வரி செலுத்திய நிலையில் எஞ்சியுள்ள வரியை செலுத்துவதாக தனுஷ் தரப்பில் கூறி, வழக்கை வாபஸ் பெற கோரிக்கை வைக்கப்பட்டது. 

அப்போது விஜய்க்கு வழங்கியது போலவே தனுஷிற்கும் கறாரான சில கருத்துக்களை நீதிபதி தெரிவித்தார், ரூ.50க்கு பெட்ரோல் போடும் பால்காரர் கூட ஜிஎஸ்டி வரி செலுத்தும் போது, நீங்கள் கட்டக்கூடாதா என கேள்வி எழுப்பிய நீதிபதி, அவர் என்றாவது நீதிமன்றத்தை நாடினாரா? நீங்கள் எத்தனை கார் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளுங்கள். ஆனால் அதற்கான வரியை செலுத்துங்கள். மக்கள் வரிபணத்தில் போடப்படும் சாலையில் பயணிக்கும் போது, அதற்கான வரிசை செலுத்த வேண்டியது தானே? என்ன பணி செய்கிறீர்கள் என்பதை ஏன் மனுவில் குறிப்பிடவில்லை? அது குறிப்பிட வேண்டிய கட்டாயமல்லவா என்று கடிந்து கொண்ட நீதிபதி, நுழைவு வரியில் இருந்து விலக்கு கேட்டு வழக்கு தொடர்ந்த பின், எதற்கு வாபஸ் பெற வேண்டும்? என்றும் கேள்வி எழுப்பினார்.  எவ்வளவு வரி செலுத்த வேண்டும் என மதியம் 2:30 மணிக்குள் வணிகவரித்துறையினர் தகவல் தெரிவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget