மார்கழி மாத ராசி பலன் - மகர ராசி
மார்கழி மாதத்தில் சூரிய பகவான் உங்களுடைய ராசிக்கு 12 ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்கிறார்.

அன்பார்ந்த மகர ராசி வாசகர்களே மார்கழி மாதத்தில் சூரிய பகவான் உங்களுடைய ராசிக்கு 12 ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்கிறார்.. பிரச்சனைகள் வரவேண்டும் என்றால் பெரிய பெரிய இடத்திலிருந்து தான் பிரச்சனைகள் வரும் என்று அனைத்து பிரச்சினைகளையும் அசால்டாக கையாளும் மகர ராசி அன்பர்களே....
அஷ்டமாதிபதி என்று சொல்லக்கூடிய சூரிய பகவான் உங்கள் ராசிக்கு வரைய ஸ்தானமான 12 ஆம் வீட்டில் இருப்பதால்... நீண்ட தூர பிரயாணங்களின் மூலம் நன்மை உண்டாகும்... நீங்கள் செலவு செய்யும் காரியங்கள் உங்களுக்கு இரட்டிப்பான நன்மையை கொண்டு வரும்... வம்பு வழக்குகளில் சிக்கி இருந்தால் அவைகளில் இருந்து விடுதலை கிடைக்கும்.... வழக்குகளுக்காக அலைய வேண்டிய சூழ்நிலை கூட ஏற்படலாம்....
இரண்டாம் இடத்தில் இருக்கக்கூடிய ராகு பகவான்.... வெளியூர்களில் சம்பாதிக்கும் சக்தி உங்களுக்கு கொண்டு வரும் அவற்றை நீங்கள் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்... சில நேரங்களில் குடும்பத்தை பிரிய வேண்டிய சூழ்நிலை கூட ஏற்படும்... வேலை நிமித்தமாக நீங்கள் தொலைதூர பிராயணங்களை மேற்கொள்வீர்கள்.... குரு பகவான் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் பதிவாவதால் ஒரு சின்ன சிக்கல்கள் இருப்பது போல தோன்றலாம்...
அதிகப்படியான கடன் சுமையால் மனம் அழுத்தத்திற்கு உள்ளாகலாம்... கடன் அடைந்து விட்டதே என்று நினைப்பதற்குள் இவ்வளவு கடன் ஏறிவிட்டதே என்று மனதிற்குள் என்ன ஓட்டங்கள் இருக்கலாம்... கவலை வேண்டாம் உங்கள் வாழ்க்கை துணையின் மூலமாக உங்களுடைய கடன்கள் அடையும்... பெரிய பிரச்சனைகளில் இருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கும்... கால்களில் வலி கஷ்டங்களோடு இருந்த மகர ராசி அன்பர்களே சூரிய பகவானின் பன்னிரெண்டாம் இட சஞ்சாரம் மருத்துவத்தின் மூலமாக பாதங்கள் இருக்கக்கூடிய பிரச்சனைகளை சீர் செய்வார்....
ஆறாம் இடத்தில் இருக்க கூடிய குரு பகவான் உங்களுடைய ராசிக்கு பத்தாம் வீட்டை பார்வையிடுவதால் தொழில் ரீதியான முன்னேற்றங்கள் ஏற்படும்.... அதேபோல வேலையில் சுணக்கமாக இருந்த மகர ராசி அன்பர்களே நல்ல வேலை கிடைத்து அதன் மூலம் வருவாயும் உயரும்... மற்றவரிடத்தில் பேசும்போது சற்று கனிவாக பேசுவது நல்லது நீங்கள் எதார்த்தமாக ஒரு வார்த்தை சொல்லப் போய் அது உங்களுக்கு வாக்குவாதங்களை கொண்டு வரலாம்...
பெரிய மாற்றங்கள் நிகழப் போவதற்கான காலமாகவே இது அமையும்... அஷ்டமத்தில் இருக்கக்கூடிய கேது பகவானின் சஞ்சாரம் எது உண்மை எது பொய் என்பது போன்ற தெளிவுகளை உங்களுக்கு கொண்டு வரும்... மூன்றாம் இடத்தில் சனி பகவான் தைரிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார்... இன்றைக்கு நீங்கள் விதைக்கக்கூடிய உழைப்பின் விதை நாளைக்கு விருட்சமாக மாறி உங்களுக்கு கனிதர ஆரம்பிக்கும்... இன்று நீங்கள் போடுகின்ற ஒவ்வொரு சின்ன வேலைகள் நாளை உங்களுக்கு பெரிய மாற்றங்களை கொண்டு வரும்...
உங்கள் வீட்டின் அருகாமையில் இருக்கக்கூடிய கோவிலுக்கு சென்று ஆஞ்சநேயரை வழிபட்டு வாருங்கள்... சூரிய பகவானின் மூல நட்சத்திர சஞ்சாரம் சிக்கல்களில் இருந்து விடுதலை தரவும் மருத்துவத்தின் மூலம் உடல் சரியாகவும் வாய்ப்பு உள்ளது... சூரிய பகவானின் பூராட நட்சத்திர சஞ்சாரம் உங்களுக்கு புதிய வேலைகளையும் அதன் மூலம் பெரிய லாபத்தையும் கொண்டு வருவார்.... குடும்பங்களில் சில சில சண்டை சச்சரவுகள் வந்தாலும் பெரிய மாற்றங்களை அவை உருவாக்கப் போவதில்லை... இது விட்டுக்கொடுத்து போகும் மாதம்...





















