மார்கழி மாத ராசி பலன் 2025 - கன்னி ராசி
ஓடிக்கொண்டே இருங்கள் அதே சமயம் கொஞ்சம் ஓய்வு எடுங்கள்...

அன்பார்ந்த கன்னி ராசி வாசகர்களே இந்த மார்கழி மாதத்தில் 2025 முடிவு 2026க்குள் பிரவேசிக்க வருகிறீர்கள் இந்த காலகட்டத்தில் உங்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் நடைபெறும் என்பதை பார்க்கலாம்... கன்னி ராசியை பொறுத்தவரை பத்தாம் இடத்தில் குரு பகவான் அமர்ந்து மிக வலிமையாக நான்காம் இடத்தை பார்த்துக் கொண்டிருக்கிறார்... கனவு வாகனம் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது ஒரு பொற்காலம்... பத்தாம் இடத்தில் இருக்க கூடிய குரு பகவான் உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தை பார்ப்பதால் தனம் தாராளமாக இருக்கும்... சம்பாதிக்கும் பணம் கையில் நிற்கவில்லை என்று இருந்த நபர்களுக்கு கூட தற்பொழுது உங்களுடைய பாக்கெட்டில் பணம் புரளுவதற்கான வாய்ப்புகள் வந்துவிட்டது... ஆறவிடத்தில் ராகு பகவான் வந்து உங்கள் ராசிக்கு எந்த தொந்தரவையும் கொடுக்காமல் அமைதியாக இருக்கிறார்.... சமூக வலைதளங்களை பயன்படுத்தி உங்களுடைய வியாபாரத்தை விரிவுபடுத்திக் கொள்ளுங்கள்.. உங்களைப் பற்றின கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டால் உங்களுக்கு அது புகழைத் தேடித் தரும்... மிகுந்த அலைச்சலால் தூக்கமின்மை ஏற்படும்....
ஓடிக்கொண்டே இருங்கள் அதே சமயம் கொஞ்சம் ஓய்வு எடுங்கள்... சனி பகவான் ஏழாம் வீட்டில் இருந்து ராசியை பார்ப்பதால் கடன்கள் அடைய வாய்ப்பு உண்டு.... வாழ்க்கை துணையின் மூலமாக ஏதோ ஒரு வகையில் உங்களுக்கு பிரச்சனைகளிலிருந்து விடுதலை கிடைக்கும்.... கன்னி ராசியை பொறுத்தவரை கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறீர்கள்... கடந்த ஆண்டு மற்றும் இந்த ஆண்டு துவக்கம் சற்று நண்பர்களிடத்திலும் வாழ்க்கைத் துணை இடத்திலும் சண்டை சச்சரவுகள் போராட்டங்களை கொண்டு வந்தாலும் கூட வருகின்ற 2026 உங்களுக்கு நல்ல காலமாகவே அமையும்... சூரிய பகவான் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் அமர்ந்திருக்கிறார் திடீரென்று பயணங்களால் சற்று அலைச்சல் ஏற்படலாம்....
நீண்டு தூர பிரயானங்களை மேற்கொள்வீர்கள்... நிலம் இடம் தொடர்பான முயற்சிகளில் ஈடுபட்டால் அது வெற்றியை கொண்டு வரும்.... அரசியலில் இருப்பவர்களுக்கு இது ஒரு நல்ல காலகட்டம் பன்னிரண்டாம் வீட்டு அதிபதி நான்காம் வீட்டில் அமரும் பொழுது உங்களுடைய எதிரிகளுக்கு நீங்கள் சிம்ம சொப்பனமாக விளங்குவீர்கள்..... கலை துறையை பொறுத்த வரைக்கும் இரண்டு மற்றும் ஒன்பதாம் அதிபதி சுக்கிர பகவான் நான்கில் அமர்ந்து மிகசௌகரியமான புதிய வாய்ப்புகளை முயற்சிகளையும் உங்களுக்கு கொண்டு வந்து கொடுப்பார்.... வேலையில் பெரிதும் மதிக்கின்ற முதலாளியிடம் இருந்து சில அழுத்தங்கள் ஏற்படலாம்... ஆனால் அவை நிரந்தரமான அழுத்தமாக இருக்காது.... புதிய வாய்ப்புகள் உங்களுக்கு வருவது போன்ற தோற்றம் ஏற்பட்டால் சற்று ஒரு மணிக்கு இரண்டு முறை சிந்தித்து அந்த வேலை எடுத்துக் கொள்ளலாம் அல்லது வேண்டாம் என்று முடிவெடுங்கள்....
நீண்ட தூரத்தில் இருந்து நல்ல செய்திகள் உங்களுக்கு காதுகளுக்கு வரும்... சனி பகவானின் ஏழாம் இடத்து சஞ்சாரம் புதிய தொழில்களுக்கு உங்களை விட்டுச் செல்லும்.... ஆனால் அதே சமயம் பத்தாம் இடத்தில் இருக்க கூடிய குரு பகவானை கருத்தில் கொண்டால் ஒரு முறைக்கு நான்கு ஐந்து முறை யோசித்து புதிய தொழிலில் இறங்குவது நல்லது.... உங்களுடைய பரிகாரம் என்று பார்த்தால் பெருமாள் சன்னதிக்கு சென்று மனுதாரர் அவர் வெளிப்பட்டு வாருங்கள் செல்வம் பெருகும்....




















