மேலும் அறிய

Michaung Cyclone: அடுத்த 4 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக கடக்கும் மிக்ஜாம் - எங்கு கடக்கிறது தெரியுமா?

மிக்ஜாம் புயல் அடுத்த 4 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று வெளியான வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது,

மிக்ஜாம் புயல்:

”நேற்று (04-12-2023) மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திரா- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய  மிக்ஜாம்’ தீவிர புயல்’  வடக்கு  திசையில் நகர்ந்து இன்று (05-12-2023) காலை 08.30 மணி அளவில் மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரா  கடலோரப்பகுதிகளில் காவாலிக்கு (ஆந்திரா) வடகிழக்கே சுமார் 40 கிலோமீட்டர் தொலைவிலும், நெல்லூருக்கு (ஆந்திரா) வடக்கு-வடகிழக்கே சுமார் 80 கிலோமீட்டர் தொலைவிலும், பாபட்லாவிற்கு (ஆந்திரா) தெற்கு-தென்மேற்கே சுமார் 80  கிலோமீட்டர் தொலைவிலும், மசூலிபட்டினத்திற்கு (ஆந்திரா) தெற்கு-தென்மேற்கே சுமார் 140 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. 

அடுத்த 4 மணி நேரம்:

இது தெற்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளை ஒட்டி வடக்கு திசையில் நகர்ந்து இன்று (05-12-2023) தெற்கு ஆந்திரா கடற்கரையை பாபட்லாவிற்கு அருகே அடுத்த 4 மணி நேரத்தில் தீவிர புயலாக கடக்கக்கூடும். அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 110  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

இன்று தமிழகத்தில் ஓரிரு  இடங்களிலும்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். திருவள்ளூர் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

மழை வாய்ப்பு:

06.12.2023 மற்றும் 07.12.2023: தமிழகத்தில் ஓரிரு  இடங்களிலும்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

08.12.2023: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். 

09.12.2023: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

10.12.2023 மற்றும் 11.12.2023: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.  நகரின் ஒருசில  பகுதிகளில்  இடி மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை  பெய்யக்கூடும்.  அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸாகவும்  இருக்கக்கூடும். 

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.  நகரின் ஒருசில  பகுதிகளில் லேசானது / மிதமான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும்  இருக்கக்கூடும். 

மீனவர்களுக்கான எச்சரிக்கை:  

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும்  வடதமிழக கடலோரப்பகுதிகள்: 
05.12.2023: சூறாவளிக்காற்று  மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 50  கிலோ மீட்டர்  வேகத்தில் வீசக்கூடும். அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக  குறையக்கூடும். மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள் &  தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள்:
05.12.2023 மத்தியமேற்கு வங்கக்கடல்  பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 110  கிலோ மீட்டர் வேகத்தில் அடுத்த 6 மணி நேரத்திற்கு வீசக்கூடும். அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக  குறையக்கூடும்.
தெற்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 110  கிலோ மீட்டர் வேகத்தில் அடுத்த 6 மணி நேரத்திற்கு வீசக்கூடும். அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக  குறையக்கூடும்.

வட ஆந்திர கடலோரப்பகுதிகள்:

05.12.2023:  சூறாவளிக்காற்று  மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வீசக்கூடும். அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக  குறையக்கூடும்.

ஒரிசா கடலோரப் பகுதிகள்:

05.12.2023: சூறாவளிக்காற்று  மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும், அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக உயர்ந்து மாலை முதல் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60  கிலோ மீட்டர் வேகத்தில் அடுத்த 12 மணி நேரத்திற்கு வீசக்கூடும். அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக  குறையக்கூடும். 

அரபிக்கடல் பகுதிகள்: 


07.12.2023 முதல் 09.12.2023 வரை: லட்சதீவு பகுதிகள் மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில்  சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்”. இவ்வாறு வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தலைப்பு செய்திகள்

ஆட்டம் போட முயற்சித்த அமைச்சர்கள்... தூக்கி வீச ரெடியான விஜய்! அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?
ஆட்டம் போட முயற்சித்த அமைச்சர்கள்... தூக்கி வீச ரெடியான விஜய்! அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?
100% தேர்ச்சி தான் டார்கெட்; லீவு போடும் மாணவர்களைக் கண்காணியுங்கள்! - கல்வித்துறையினருக்கு கலெக்டர் போட்ட அதிரடி உத்தரவு!
100% தேர்ச்சி தான் டார்கெட்; லீவு போடும் மாணவர்களைக் கண்காணியுங்கள்! - கல்வித்துறையினருக்கு கலெக்டர் போட்ட அதிரடி உத்தரவு!
மேட்டூர் அருகே மெய்சிலிர்க்க வைக்கும் வரலாற்று பொக்கிஷம்! காவிரி கரையில் பூமிக்கு அடியில் 3,600 ஆண்டுகால மர்மம் உடைந்தது!
மேட்டூர் அருகே மெய்சிலிர்க்க வைக்கும் வரலாற்று பொக்கிஷம்! காவிரி கரையில் பூமிக்கு அடியில் 3,600 ஆண்டுகால மர்மம் உடைந்தது!
தஞ்சாவூரில் வெப்பம் தீவிரம்... மேகமூட்டம் நீடித்தாலும் மழைக்கு வாய்ப்பு இல்லை
தஞ்சாவூரில் வெப்பம் தீவிரம்... மேகமூட்டம் நீடித்தாலும் மழைக்கு வாய்ப்பு இல்லை

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆட்டம் போட முயற்சித்த அமைச்சர்கள்... தூக்கி வீச ரெடியான விஜய்! அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?
ஆட்டம் போட முயற்சித்த அமைச்சர்கள்... தூக்கி வீச ரெடியான விஜய்! அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?
ADMK: செங்கோட்டையனைச் சந்தித்த லீமாரோஸ்.. ஆடிப்போன அதிமுக! கட்டுப்படுத்துவாரா எடப்பாடி பழனிசாமி?
ADMK: செங்கோட்டையனைச் சந்தித்த லீமாரோஸ்.. ஆடிப்போன அதிமுக! கட்டுப்படுத்துவாரா எடப்பாடி பழனிசாமி?
Weather Update: தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை! 3 நாட்களுக்கு வறுத்தெடுக்கப் போகும் வெயில் - என்னென்ன பாதிப்புகள் வரும்?
தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை! 3 நாட்களுக்கு வறுத்தெடுக்கப் போகும் வெயில் - என்னென்ன பாதிப்புகள் வரும்?
E.V. Velu lookout notice : அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
திமுகவின் சதிவலை... பழிவாங்குறாங்க! லஞ்சம் வாங்கல.. கடன் வாங்கினேன்.. தலைவர் பரபரப்பு பேட்டி!
திமுகவின் சதிவலை... பழிவாங்குறாங்க! லஞ்சம் வாங்கல.. கடன் வாங்கினேன்.. தலைவர் பரபரப்பு பேட்டி!
ஒரே சார்ஜில் 104 கி.மீட்டர் மைலேஜ்.. சீனியர் சிட்டிசன் கெத்து காட்ட Kinetic Green Zulu இ ஸ்கூட்டர்! விலை இவ்ளோ கம்மியா?
ஒரே சார்ஜில் 104 கி.மீட்டர் மைலேஜ்.. சீனியர் சிட்டிசன் கெத்து காட்ட Kinetic Green Zulu இ ஸ்கூட்டர்! விலை இவ்ளோ கம்மியா?
Chennai Power Cut: சென்னைல ஜூலை 16-ம் தேதி எங்கெங்க மின்சார தடை பண்ணப் போறாங்கன்னு தெரிஞ்சுக்கோங்க...
சென்னைல ஜூலை 16-ம் தேதி எங்கெங்க மின்சார தடை பண்ணப் போறாங்கன்னு தெரிஞ்சுக்கோங்க...
Hector Hawk Vs Innova Hycross: இன்னோவா ஹைக்ராஸை தூக்கி சாப்பிடுமா எம்ஜி-யின் பிரமிக்க வைக்கும் பிளக்-இன் ஹைப்ரிட்.? என்ன வித்தியாசம்.?
இன்னோவா ஹைக்ராஸை தூக்கி சாப்பிடுமா எம்ஜி-யின் பிரமிக்க வைக்கும் பிளக்-இன் ஹைப்ரிட்.? என்ன வித்தியாசம்.?
Embed widget