கடலூர்: உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம்: முதலமைச்சர் ஸ்டாலின்
கடலூர் கெடிலம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
கடலூர் கெடிலம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். ஆற்றில் குளிக்கச் செல்லும் குழந்தைகளை கண்காணிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், கீழ் அருங்குணம் கெடிலம் ஆற்றில் குளித்தபோது 7 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்ததையடுத்து அவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல் மற்றும் நிவாரண உதவிகளை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் அறிவித்துள்ளார். pic.twitter.com/A3nZSgYSf4
— CMOTamilNadu (@CMOTamilnadu) June 5, 2022
கடலூர் மாவட்டம் அருங்குணம் அருகே கெடிலன் ஆற்றில் குளித்த 6 சிறுமிகள் உள்பட 7 பேர் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த அருங்குணம் ஏ.குச்சிப்பாளையத்தையொட்டி கெடிலம் ஆறு உள்ளது. இன்று காலை அதே பகுதியை சேர்ந்த 6 சிறுமிகள் உள்பட, பிரியா(17), சங்கீதா(17), சுமிதா (16) மோனிகா(15), பிரியதர்ஷினி(14), கவிதா(12), மற்றும் நவநீதா(9) என ஏழுபேர் தடுப்பணையில் குளிக்க சென்றனர். அங்குள்ள தடுப்பணையில் குளித்த போது 7 பேரும் நீரில் மூழ்கினர்.
முதலில் தடுப்பணையில் ஏற்பட்ட சூழலில் 2 பேர் சிக்கியுள்ளனர், அவர்களை காப்பாற்ற முயன்ற 5 பேரும் நீரில் மூழ்கியுள்ளனர். தகவல் அறிந்து அப்பகுதிக்கு வந்த அக்கம் பக்கத்தினர். ஆற்றில் மூழ்கிய 7 பேரையும் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் 7 பேரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஆறு, குளங்களில் குளிக்கச் செல்லும் சிறுவர், சிறுமியர் மற்றும் இளைஞர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். pic.twitter.com/97wkbgPzul
— CMOTamilNadu (@CMOTamilnadu) June 5, 2022
முதல்வர் நிவாரணம் மற்றும் வேண்டுகோள்
கெடிலம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் நீர் நிலைகளில் குளிக்கச் செல்லும் குழந்தைகளை மிகவும் கவனத்துடன் கண்காணிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆறு மற்றும் குளங்களில் குளிக்கச் செல்லும் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் பாதுகாப்பை அனைவரும் சேர்ந்து உறுதிப்படுத்த வேண்டும் எனவும் வேண்டுகோள் வைத்துள்ளார். மேலும் ஆழமான ஆற்றுப் பகுதிகள் இருக்கும் இடங்களில் எச்சரிக்கை மற்றும் அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும் என உள்ளாட்சி அமைப்புகளை வலியுறுத்தியுள்ளார்.