மேலும் அறிய
Advertisement
Cuddalore: இருவிரல் கன்னித்தன்மை சோதனை விவகாரம்...விசாரணையில் இறங்கிய சென்னை சிறப்பு மருத்துவ குழுவினர்!
இருவிரல் கன்னித்தன்மை சோதனை விவகாரம் தொடர்பாக சென்னை சிறப்பு மருத்துவ குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிதம்பரத்தில் குழந்தை திருமணம் தொடர்பாக சிறுமிகளுக்கு இரு விரல் கன்னித்தன்மை சோதனை நடத்தப்பட்டது என ஆளுநர் தெரிவித்த நிலையில் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சென்னை சிறப்பு மருத்துவக்குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்
கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோயிலில் இருக்கும் தீட்சிதர்கள் சிலர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தங்களது பெண் குழந்தைகளுக்கு குழந்தை திருமணம் செய்து வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன் அடிப்படையில் சிதம்பரம் டவுன் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீட்சிதர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் சிலரை கைது செய்து சிறையில் அடைத்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சமீபத்தில் தனியார் ஊடகத்திற்கு பேட்டியளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, "சமூக நலத்துறை அதிகாரிகள் பழிவாங்கும் நோக்கில் சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் மீது கொடுத்த புகாரில் குழந்தை திருமணம் மற்றும் தீட்சிதர்கள் மீது எடுத்த கைது நடவடிக்கை என்பது முற்றிலும் பொய்யான நடவடிக்கை என்று தெரிவித்திருந்தார். மேலும் குழந்தைகள் துன்புறுத்தபட்டதாக பொய் வழக்கு தீட்சிதர்கள் மீது போடப்பட்டுள்ளதாகவும், அந்த வழக்கின் படி சிறுமிகளை கட்டாயப்படுத்தி இரு விரல் கன்னித்தன்மை சோதனை செய்ததாகவும், இதனால் சிறுமிகள் தற்கொலைக்கு முயன்றதாகவும் தெரிவித்திருந்தார். நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட இருவிரல் கன்னித்தன்மை சோதனையை காவல்துறையினர் மேற்கொண்டது குழந்தைகள் உரிமை மீறல்" என கூறியிருந்தார்.
இது தொடர்பாக தேசிய குழந்தைகள் நல ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தி ஒரு வார காலத்தில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளருக்கு தேசிய குழந்தைகள் நல ஆணையம் உத்தரவு பிறப்பித்தது. ஆளுநரின் இந்த கருத்துக்கு விளக்கமளித்த தமிழக டிஜிபி சைலேந்திரபாபு குழந்தைத் திருமணம் நடந்ததாக புகார்கள் வந்த நிலையில் அதன் உண்மைத்தன்மையை கண்டறிந்த பின்னர், அதற்கான ஆதாரங்களை திரட்டிய பின்பு சிதம்பரம் டவுன் காவல் நிலையம் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 4 வழக்குகள் குழந்தைத் திருமண சட்டப் பிரிவு 9, 10 இன்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டு, குற்றத்தில் தொடர்புடைய 8 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் சிறுமியர்களை இரு விரல் கன்னித்தன்மை பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை. அந்தச் சிறுமியர் தற்கொலை செய்ய முயன்றனர் என்பது உண்மைக்கு புறம்பான தகவல் என கூறினார்.
இதனை தொடர்ந்து சென்னை மருத்துவம் ஊரக நலப்பணிகள் கூடுதல் இயக்குநர் விஸ்வநாதன், கண்காணிப்பாளர் கமலகண்ணன்,மகப்பேறு மருத்துவர் பரமேஷ்வரி ஆகிய சிறப்பு மருத்துவ குழுவினர் சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து தற்போது கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட மருத்துவ மற்றும் சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் ரமேஷ் பாபு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
க்ரைம்
மதுரை
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion