மேலும் அறிய

திமுக - அதிமுக கூட்டணி.. பிள்ளையார் சுழி போட்ட தேமுதிக சுதீஷ்.. உண்மையை சொன்ன சண்முகம்

மே 7ம் தேதி மீண்டும் எங்கள் 3 கட்சிகளையும் அழைத்து அதிமுக கூட்டணி  பற்றி திமுக தரப்பிடம் இருந்து கேள்வி கேட்கப்பட்டது. நாங்கள் உடனடியாக அந்த விஷயத்துக்கு பதிலளித்தோம் என சண்முகம் கூறியுள்ளார்.

திமுக - அதிமுக கூட்டணி குறித்த யோசனையை மாநிலங்களவை எம்.பி. எல்.கே.சுதீஷ் தெரிவித்தார் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். இது அரசியல் உலகில் பேசுபொருளாக மாறியுள்ளது. 

நேர்காணல் ஒன்றில் பேசிய  சண்முகம், “மே 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் மாலை நேரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் சிறப்பான ஆளும் கட்சியாக செயல்பட்டோம். இனி சிறப்பான எதிர்க்கட்சியாக செயல்படுவோம் என சொன்னார். மே 5ம் தேதி நாங்கள் எல்லாரும் அவரை சந்தித்தோம். கொளத்தூரில் ஸ்டாலின் தோற்றது வருத்தமளிக்ககூடிய விஷயமாக அமைந்ததால் அந்த சந்திப்பு நடந்தது.

அப்போது திமுக - அதிமுக கூட்டணி குறித்த யோசனையை தேமுதிக பொருளாளரும், மாநிலங்களவை எம்.பி.யுமான எல்.கே.சுதீஷ் தெரிவித்தார். உடனடியாக அதற்கு பதிலளித்த ஸ்டாலின், அதெப்படி நடைமுறையில் சாத்தியமாகும். நான் தான் நேற்று மாலையே திமுகவின் நிலைப்பாட்டை தெளிவாக தெரிவித்து விட்டேன். அப்படியிருக்கும்போது எப்படி உங்களால் இப்படியெல்லாம் யோசிக்க முடிகிறது என மிகச்சரியாக கேட்டார். 

ஆனால் மே 7ம் தேதி மீண்டும் எங்கள் 3 கட்சிகளையும் அழைத்து அதிமுக கூட்டணி  பற்றி திமுக தரப்பிடம் இருந்து கேள்வி கேட்கப்பட்டது. நாங்கள் உடனடியாக அந்த விஷயத்துக்கு பதிலளித்தோம். நடைமுறையில் இது சாத்தியமில்லாதது. 50 ஆண்டுகாலம் எலியும், பூனையுமாக இருந்து விட்டு திடீரென ஒன்று சேர்ந்தால் தமிழ்நாட்டு மக்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள். மிக நீண்ட நேரம் இதுதொடர்பாக ஆலோசனை நடைபெற்றது. 

உடனே எங்கள் தரப்பிடம் இருந்து, நீங்கள் மிகப்பெரிய அரசியல் நகர்வு பற்றி பேசுகிறீர்கள். அதனால் எங்களால் கட்சி நிர்வாகிகளிடம் கலந்து பேசாமல் எந்த முடிவையும் தெரிவிக்க முடியாது என சொல்லி விட்டோம். மே 8ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் குழு கூட்டம் இருந்தது. கடைசியாக நாங்கள் மே 7ம் தேதி சந்திப்பை முடிக்கும்போது எந்த முடிவாக இருந்தாலும் நாம் சேர்ந்து பயணிப்போம் என மு.க.ஸ்டாலின் எங்களிடம் தெரிவித்தார். ஆனால் நாங்கள் 8ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவித்ததால் மேற்கொண்டு இதுபற்றி பேசவில்லை. 

இதையும் படிங்க: Madurai: பேன்ஸி கடைக்குள் புகுந்து சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர்.. தட்டித்தூக்கிய சிங்கப்பெண் அதிரடிப்படை!

திமுகவை எச்சரித்தோம்

தொடர்ந்து பேசிய திருமாவளவன், “திமுக - அதிமுக கூட்டணிக்கு வாய்ப்பிருப்பதாக யாரோ சொல்ல, அதனை திமுக தலைவர் ஸ்டாலின் முதலில் ஏற்கவில்லை. கூட்டணி கட்சிகள் என்ற முறையில் இதுபற்றி கருத்து கேட்கப்பட்டது. ஆனால்  எங்களை நாம் அனைவரும் சேர்ந்து ஆட்சியமைப்போம் என அழைக்கவில்லை. நாங்கள் திமுக இப்படி ஒரு முடிவெடுத்தால் அதன் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என எச்சரித்தோம். அதனால் இந்த மாதிரி பேசுவது கூட வெளியில் போக வேண்டாம் என சொன்னோம். அவர்கள் ஒரு விஷயத்தை பற்றி விவாதிக்க, நாங்கள் எங்கள் கருத்தை தெரிவித்து விட்டு வெளியே வந்து விட்டோம்”  என கூறினார். 

Advertisement

தலைப்பு செய்திகள்

தொழில்துறையினருக்கு செம்ம நியூஸ்! இனி ஒரே நாளில் அப்ரூவல்.. தமிழக அரசு கொண்டுவந்த செம மாற்றம்!
தொழில்துறையினருக்கு செம்ம நியூஸ்! இனி ஒரே நாளில் அப்ரூவல்.. தமிழக அரசு கொண்டுவந்த செம மாற்றம்!
சென்னை விமான நிலையத்தில் ஆசனவாயில் மறைத்த ரூ.3 கோடி தங்கம் சிக்கியது எப்படி?
சென்னை விமான நிலையத்தில் ஆசனவாயில் மறைத்த ரூ.3 கோடி தங்கம் சிக்கியது எப்படி?
Seeman:
Seeman: "கொலை கேஸ் போடுங்க.." தமிழனை வேட்டையாடினால் கேட்பதற்கு நாதி இ்ல்லையா? கொந்தளித்த சீமான்
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
BJP: டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
Seeman:
Seeman: "கொலை கேஸ் போடுங்க.." தமிழனை வேட்டையாடினால் கேட்பதற்கு நாதி இ்ல்லையா? கொந்தளித்த சீமான்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
TN Weather News: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை - சென்னை நிலவரம்..!
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை - சென்னை நிலவரம்..!
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Embed widget