நீண்ட காலம் உயிர் வாழ ஆசையா? - இதோ ஈஸி டிப்ஸ்!

Published by: பேச்சி ஆவுடையப்பன்

தினமும் சுறுசுறுப்பாக செயல்படுங்கள். உடற்பயிற்சி மூலம் உடல் உறுப்புகளுக்கு வேலை கொடுப்பதால் அவர் முதுமையடையும் அபாயத்தை குறைக்கிறது.

பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், கொழுப்பற்ற புரதங்கள் நிறைந்த, சத்தான மற்றும் சமச்சீரான உணவுகளை உட்கொள்ளுங்கள்.

தூக்கம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. எனவே எக்காரணம் கொண்டு அதனை தவிர்க்காமல் 7 முதல் 9 மணி தூக்கத்தை உறுதி செய்யுங்கள்

பாதாம், வால்நட் மற்றும் பிஸ்தா போன்ற உணவுகளை தவறாமல் உட்கொள்ளுங்கள். வாரத்திற்கு குறைந்தது 3 வேளையாவது இதனை எடுப்பது மரணத்தை தள்ளிப்போடும் என சொல்லப்படுகிறது.

ஒட்டுமொத்த உடல் நலத்திற்கும் நீரேற்றமாக இருப்பது மிகவும் அவசியம். தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது உடல் செயல்பாட்டிற்கு உதவுகிறது.

மன அழுத்தம் மரணத்தை நெருங்கி வரச் செய்யும் ஆபத்தான காரணியாகும். எனவே அதனை குறைக்கும் வழிமுறைகளை கையாள வேண்டும்.

காஃபி அல்லது டீ ஆகியவை நாள்பட்ட நோய்களின் அபாயத்தை குறைக்கும். ஆனால் இதனை அடிக்கடி அருந்துவது ஆபத்தானது.

எப்போதும் நண்பர்கள், குடும்பத்தினர் என மன ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் நபர்களுடன் நேரம் செலவிட பழகுங்கள். இதற்காக நேரம் ஒதுக்குங்கள்.

மகிழ்ச்சியாக இருப்பவர்களுக்கு மரணம் ஏற்படுவதற்கான வாய்ப்பு 3.7% குறைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே உங்கள் மகிழ்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கும் விஷயங்களில் கவனம் செலுத்துங்கள்