மேலும் அறிய
Advertisement
அரசின் சார்பில் கரும்பு கொள்முதல் செய்வதில் ஊழல் ? - 33 ரூபாய் கரும்பை 13 ரூபாய்க்கு விற்க கட்டாயப்படுத்துவதாக புகார்
’’விவசாயிகளிடம் இருந்து 33 ரூபாய்க்கு கரும்பை கொள்முதல் செய்ய அரசு உத்தரவிட்ட நிலையில், அதிகாரிகள் கரும்பை 13 ரூபாய்க்கு தர கட்டாயப்படுத்துவதாக விவசாயிகள் வேதனை’’
பொங்கல் திருநாளையொட்டி தமிழ்நாடு அரசு மூலம் ரேஷன் கடைகள் மூலம் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதில், பன்னீர் கரும்பு வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக கூட்டுறவு சங்கங்கள் மூலம் அரசு நிர்ணயம் செய்யும் விலைகளுக்கு ஏற்ப விவசாயிகளிடம் இருந்து ஆண்டுதோறும் கரும்பு கொள்முதல் செய்யப்படும். கூட்டுறவு சங்கங்களுக்கு போக, மீதமுள்ள கரும்புகளை விவசாயிகள், தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா உள்ளிட்ட பிற மாநில பகுதிகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பொங்கல் திருநாளையொட்டி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் முழு கரும்பு வழங்கப்படும் என்று அண்மையில் அறிவித்தார். கடலூர் மாவட்டத்தில் சத்திரம், பத்திரகோட்டை, குள்ளஞ் சாவடி, பெலாந்தோப்பு, மதனகோபாலபு ரம், கோரனப்பேட்டை, சிவாந்தபுரம் உள்ளிட்ட 100க்கு மேற்பபட்ட கிராமங்களில் சுமார் 20 ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கரில் பொங்கல் கரும்பு சாகுபடி செய்துள்ளனர். இந்த விவசாயிகள் முழுக்க முழுக்க அரசுக்கொள்முதலை நம்பியே கரும்பை சாகுபடி செய்கின்றனர்.
வழக்கமாக இக்கிராமத்தில் சாகுபடி செய்யப்படும் கரும்புகளை வியாபாரிகள் விவசாயிகளின் கரும்புத் தோட்டத்திற்கே சென்று வெட்டி, ஏற்றிச் சென்றுவிடுவார்கள் . தற்போது , அரசே கொள்முதல் செய்வதால், கரும்புகளை வெட்டி டிராக்டர்கள் மூலம் கொண்டு சென்று லாரிகளில் ஏற்றும் வரையிலான பணிகள் அனைத்தும் விவசாயிகளை சேருகிறது. பொங்கல் கரும்புகளை விளைவித்துவிட்டு பண்டிகைக்கு சில நாள்களுக்கு முன்புவரை வியாபாரிகளின் வருகைக்காக காத்துக்கொண்டிருந்த நிலை மாறி, அரசு முன்கூட்டியே கொள்முதல் செய்வதால் இத்திட்டத்திற்கு ஒட்டுமொத்த விவசாயிகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர். சுமார் 20 சதவீத கரும்புகளை அரசு முன்கூட்டியே கொள்முதல் செய்துவிட்டதால், மீதமுள்ள கரும்புகளை எளிதில் தனியாரிடம் விற்றுவிடலாம் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
இந்த ஆண்டு தமிழக அரசு கரும்பு ஒன்றுக்கு 33 ரூபாய் அரசு விலை நிர்ணயம் செய்திருக்கிறது. குறிப்பாக வெளியிட்ட அரசாணையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குடும்பங்களுக்கும் ஆக மொத்தம் 2 கோடியே 15 லட்சத்து 48 ஆயிரத்து 60 குடும்ப அட்டைதாரர்களுக்கும் 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்புடன் கூடுதலாக கரும்பும் சேர்த்து வழங்க கரும்பு ஒன்றுக்கு 33 ரூபாய் வீதம் (போக்குவரத்து செலவு உட்பட) கரும்பினை கொள்முதல் செய்து குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் விநியோகம் செய்வதற்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் மாவட்ட வேளாண்மை துறை இணை இயக்குனர் மற்றும் தமிழ்நாடு நுகப்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் ஆகியோர் உள்ளடக்கிய குழு விநியோகம் செய்யவும் அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.
10 மாதங்களில் விளையக்கூடிய இந்த பன்னீர் கரும்பு சாகுபடிக்கு, ஒரு ஏக்கருக்கு 1.25 லட்சம் முதல் 1.50 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. இந்த ஆண்டு தமிழக அரசு கரும்பு ஒன்றுக்கு ரூ 33 அரசு விலை நிர்ணயம் செய்திருக்கிறது. ஆனால் கூட்டுறவுதுறை அலுவலர்கள் மூலம் செயல்படும் இடைதகர்கள் கிராமபகுதி விவசாயிகளிடம் கரும்பு ஓன்றுக்கு 9 ரூபாய் முதல் 13 ரூபாய் விலை கொடுத்து அடிமாட்டு விலைக்கு கொள்முதல் செய்வதோடு, 13 ரூபாய்க்கு மேல் கொடுக்கமாட்டோம் அவ்வளவுதான் என பேரம் பேசி விவசாயிகளிடம் ஒப்புதல் பெற முயற்சிக்கிறார்கள்.
இதனால் தமிழக அரசு கரும்பு விவசாயகளிடம் இருந்து ஒரு கரும்பு 33 ரூபாய்க்கு எடுக்க உத்தரவிட்டார் கடலூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு அதிகாரிகள் இடைத்தரகர்களை மூலம் விவசாயிகளிம் குறைந்த விலைக்கு கரும்பை கொள்முதல் செய்வதோடு பல கோடி ரூ மோசடியில் ஈடுபடுகிறார்கள் முதல்வர் 33 ரூபாய்க்கு எடுக்க கூறியுள்ளார் என கேள்வி எழுப்பினார் மேல்இடத்திலே அவ்வளவுதான் வாங்க கூறியுள்ளார்கள் விருப்பம் இருந்தால் கூறுங்கள் இல்லை எனில் நீங்கள் வேறு இடத்திற்ககு சென்று கொள்முதல் செய்து கொள்கிறோம் என கூறுகிறார்கள். இதுகுறித்து இடைதரகர் கட்டியங்குப்பம் கூட்டறவு சங்க தலைவர் ரவிசந்திரன் என்பவர் பேசும் வீடியோ தற்பொழுது வெளியாகி உள்ளது.இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கூறுகையில் இடைத்தரகர்கள் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion