மேலும் அறிய

பிரபலப் பள்ளி மீது மதமாற்றப் புகார்: தலைமைச் செயலாளர் ஆஜராகி விளக்கமளிக்க குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் உத்தரவு

தலைமைச் செயலாளர் இறையன்பு ஆன்லைனில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPCR) உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னையில் செயல்பட்டு வரும் பிரபலத் தனியார் பள்ளி மீது மதமாற்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அதுகுறித்து எந்த நடவடிக்கையையும் தமிழக அரசு எடுக்காததாகக் கூறி, வரும் 20-ம் தேதி தலைமைச் செயலாளர் இறையன்பு ஆன்லைனில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPCR) உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னையில் உள்ள முக்கிய பகுதிகளில் ஒன்று ராயப்பேட்டை. இந்த பகுதியில் சி.எஸ்.ஐ. மோனஹன் மகளிர் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்காகவே விடுதி ஒன்றும் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த பள்ளியில் மதமாற்றம் நடைபெறுவதாக, தேசிய குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் ஆணையம் தலைமைச் செயலாளருக்கும், தமிழக டி.ஜி.பி.க்கும் கடிதம் எழுதி இருந்தது.

இதுதொடர்பாகத் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் ஆணையம் எழுதியுள்ள கடிதத்தில், சென்னை, ராயப்பேட்டையில் உள்ள சி.எஸ்.ஐ. மோனஹன் மகளிர் பள்ளியில் கடந்த 6-ம் தேதி சிறப்புக் குழு அதிரடியாக ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வில், ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த சிறுமிகளை விடுதிக்கு அழைத்து வந்து, கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்வது தெரிய வந்துள்ளது என்றும், அந்தப் பள்ளி விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகளுக்கு உடனடியாக உதவி தேவைப்படுவதாகவும், அவர்களை உடனே மீட்க வேண்டும் என்றும் அந்த குற்றச்சாட்டில் கூறியுள்ளனர்.

அந்த சிறுமிகளுக்கு விடுதி வார்டனால் தொல்லை அளிக்கப்பட்டு வருகிறது என்பதால், விடுதியில் தங்கியுள்ள மாணவிகளை 24 மணி நேரத்தில் மீட்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் கூறப்பட்டது. இதனால், அந்த பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. 

பிரபலப் பள்ளி மீது மதமாற்றப் புகார்: தலைமைச் செயலாளர் ஆஜராகி விளக்கமளிக்க குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் உத்தரவு

சென்னையில் பிரபலமான பள்ளி விடுதியில் உள்ள மாணவிகளை 24 மணி நேரத்தில் மீட்க வேண்டும் என்று டி.ஜி.பி.,க்கும், தலைமைச் செயலாளருக்கும் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் ஆணையமே கடிதம் எழுதியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

எனினும் சம்மந்தப்பட்ட ராயப்பேட்டை CSI மோனஹன் பள்ளியில் மதமாற்ற முயற்சி ஏதும் கண்டறியப்படவில்லை என்று தமிழக அரசு விளக்கமளித்தது.

85 பக்கம் கொண்ட அறிக்கை ஆளுநரிடம் நேரில் சமர்ப்பிப்பு

தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி மற்றும் ஆணைய உறுப்பினர் சரண்யா ஜெய்குமார் ஆகிய இருவரும் இன்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்தனர். அப்போது, சமீபத்தில் ஆய்வு செய்யப்பட்ட, பதிவு செய்யப்படாத இல்லம் சம்பந்தப்பட்ட 85 பக்கம் கொண்ட அறிக்கையினை நேரில் வழங்கினர்.

பிரபலப் பள்ளி மீது மதமாற்றப் புகார்: தலைமைச் செயலாளர் ஆஜராகி விளக்கமளிக்க குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் உத்தரவு

ஆளுநருக்கும், அரசுக்கும் இடையில் கருத்து மோதல் நிலவும் சூழலில், மாநில அரசின் கருத்துக்கு எதிராக, ஆளுநரிடமே குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் நேரடியாக அறிக்கையைச் சமர்ப்பித்தது சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தனியார் பள்ளி மீதான மதமாற்ற குற்றச்சாட்டு குறித்து எந்த நடவடிக்கையையும் தமிழக அரசு எடுக்காததாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPCR) கூறியுள்ளது. இதுகுறித்து வரும் 20-ம் தேதி தலைமைச் செயலாளர் இறையன்பு ஆன்லைனில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்றும் குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!
மக்களே உஷார்! காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்றைய வானிலை இதுதான்!
மக்களே உஷார்! காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்றைய வானிலை இதுதான்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Kia Seltos CNG: க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
Rasi Palan Today (09-08-2026): மேஷத்துக்கு வெற்றி.. அப்ப இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன்?
Rasi Palan Today (09-08-2026): மேஷத்துக்கு வெற்றி.. அப்ப இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன்?
Embed widget