மேலும் அறிய

Vote Percentage : சென்னையில் ஏன் வாக்குப்பதிவு குறைந்தது? விளக்கம் சொன்ன ராதாகிருஷ்ணன்..

நகர்ப்புற சுணக்கம் மற்றும் மதிய வேளை வெயிலின் தாக்கத்தால் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்துள்ளது என மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நகர்ப்புற சுணக்கம் மற்றும் மதிய வேளை, வெயிலின் தாக்கத்தின் காரணமாக வாக்கு சதவீதம் குறைந்துள்ளது  என சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  

மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கான  வாக்குச்சாவடிகளில் இருந்து வரப்பெற்ற மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் லயோலா கல்லூரியில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கும் பணிகள் முடிந்து அந்த பகுதி சீல் வைக்கப்பட்டது. சென்னை லயோலா கல்லூரியில் உள்ள பாதுகாப்பு அறையில் மத்திய சென்னை பாராளுமன்றத் தொகுதிக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கும் பணிகளையும், அங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார். தொடர்ந்து அந்த பாதுகாப்பு அறைக்கு சீல் வைக்கப்பட்டது.

அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த ராதாகிருஷ்ணன்,  “சென்னையில் 48.60 லட்சம் வாக்கு பதிவாகியுள்ளது. மேலும் சென்னையில் உள்ள 3 நாடாளுமன்றம் தொகுதியையும் சேர்த்து 56.01% வாக்கு பதிவாகி உள்ளது. வட சென்னையில் 60.13% வாக்கும், தென் சென்னையில் 54.27% வாக்கும், மத்திய சென்னையில்  53.91 % வாக்கு பதிவாகி உள்ளது.

சென்னையில் சில பகுதிகளில் 70 சதவீதம் ஆகிவிட்டது ஆனால் ஒட்டுமொத்தமாக கணக்கிட்டு பார்க்கையில் நகர்ப்புறங்களில் ஏற்படும் சுணக்கம்,  மற்றவர்கள் வாக்களிக்கிறார்களே நாங்கள் வாக்களித்தால் என்ன நிகழ்ந்துவிடப் போகிறது? என்று காரணத்தினாலும், மதிய வேளைகளில் ஏற்பட்ட வெயிலின் தாக்கத்தினாலும் வாக்கு சதவீதம் குறைந்துள்ளது.

47 வகையில் வாக்கு சதவீதத்தை அதிகரிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். அதன் அடிப்படையிலேயே தற்போது இந்த வாக்கு சதவீதம் பதிவாகி இருக்கிறது.  இல்லையென்றால் இது மேலும் குறைந்திருக்கக்கூடும்.

லயோலா கல்லூரியில் உள்ள பாதுகாப்பு அறை பகுதியில் 188 கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மேலும் நான்கு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  முதல் அடுக்கில் மத்திய ஆயுதப்படையும், இரண்டாவது அடுக்கில் தமிழ்நாடு சிறப்பு காவல் துறையினரும், மூன்றாவது அடுக்கில் ஆயுதப் படையும், நான்காவது அடுக்கில் தமிழக காவல் துறையினர் இருப்பார்கள். மொத்தமாக 1095 பேர் பணியில் ஈடுபடுவார்கள். ஒருவேளை அந்த அறையை திறக்க வேண்டும் என்றால் தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுடன், பல அடுக்கு அனுமதி வாங்கிய பிறகுதான் உள்ளே செல்ல முடியும். இந்தப் பகுதி ஜூன் நான்கு வரை இந்தப் பகுதி தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தான் இருக்கும். சென்னையில் 2019-ஆம்  தேர்தலை விட இந்த முறை நான்கு விழுக்காடு குறைந்துள்ளது என்று தெரிவித்தார். ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதியில் 52.4% வாக்குகள் தான் பதிவாகியுள்ளது.

பல்வேறு காரணங்களால் சிலரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும். சில நேரங்களில் தவறுதலாக சிலரது பெயர் நீக்கப்பட்டுள்ளது. ஆனால் தேர்தல் ஆணையத்தை பொறுத்தவரையில் அனைத்து வழிக்காட்டு நெறிமுறைகளையும் முடித்த பிறகுதான் சேர்த்தல் நீக்கல் நடக்கும் என்று தெரிவித்தார். மக்களும் வாக்காளர் அடையாள அட்டை இருந்தால் வாக்கு இருக்கும் என்று நினைக்க வேண்டாம் என்று தெரிவித்தார். அதிகாரப் பூர்வ பூத் ஸ்லீப் கொடுக்கப்பட்டு இருந்தால் கண்டிப்பாக அது தவறாது. ஆனால் பழைய தகவல்களை வைத்து பூத் ஸ்லீப் கொடுக்கப்பட்டு இருக்கலாம். அதை தடுக்க கூடுதல் விழிப்புணர்வு உண்டாக்கப்படும்.

தமிழகத்தில் தேர்தல் கட்டுப்பாடுகள் குறித்து படிப்படியாக இந்திய தேர்தல் ஆணையத்தில் இருந்து விதிவிலக்குகள் அறிவிக்கப்படும். ஒரே சின்னத்திற்கு வாக்கு பதிவானதாக வரும் தகவல்கள் முற்றிலும் தவறானது, வியாசர்பாடி மற்றும் மத்திய சென்னையில் உள்ள பூத்தில் டெஸ்ட் ஓட்டு போட்டு, அவர்களுக்கு சுமூகமாக விளக்கம் அளிக்கப்பட்டது. சென்னையில் பெரிய அளவில் எங்கும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பழுதாகவில்லை” என்று தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin Vs Amit Shah: “உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
“உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
MK Stalin: உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
Udhayanidhi:
Udhayanidhi: "எதிரிகள் தப்புக்கணக்கை சுக்கு நூறாக்கும் கொள்கை கூட்டம் இது" ஆர்ப்பரித்த உதயநிதி
Udhayanidhi:
Udhayanidhi: "2026 தேர்தலில் இளைஞர்களுக்கு போட்டியிட அதிக வாய்ப்பு வழங்க வேண்டும்" - மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி கோரிக்கை
ABP Premium

வீடியோ

DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin Vs Amit Shah: “உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
“உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
MK Stalin: உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
Udhayanidhi:
Udhayanidhi: "எதிரிகள் தப்புக்கணக்கை சுக்கு நூறாக்கும் கொள்கை கூட்டம் இது" ஆர்ப்பரித்த உதயநிதி
Udhayanidhi:
Udhayanidhi: "2026 தேர்தலில் இளைஞர்களுக்கு போட்டியிட அதிக வாய்ப்பு வழங்க வேண்டும்" - மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி கோரிக்கை
IND Vs SA 3rd T20: இந்திய பவுலர்கள் ஆதிக்கம்; 3-வது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி; 2-1 என தொடரில் முன்னிலை
இந்திய பவுலர்கள் ஆதிக்கம்; 3-வது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி; 2-1 என தொடரில் முன்னிலை
Hero Vida Dirt.E K3: என்னது, குழந்தைகளுக்கு இ-பைக்கா.?! அசத்தும் ஹீரோ நிறுவனம்; விடா டர்ட் இ பைக்கின் விலை என்ன.?
என்னது, குழந்தைகளுக்கு இ-பைக்கா.?! அசத்தும் ஹீரோ நிறுவனம்; விடா டர்ட் இ பைக்கின் விலை என்ன.?
PM Modi Visit: பொங்கல் கொண்டாட தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாஜக போடும் ஸ்கெட்ச்!
PM Modi Visit: பொங்கல் கொண்டாட தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாஜக போடும் ஸ்கெட்ச்!
New Kia Seltos vs Tata Sierra: புதிய கியா செல்டோஸா.? டாடா சியராவா.? அதிக சிறப்பம்சங்களை கொண்டுள்ள SUV எது.?
புதிய கியா செல்டோஸா.? டாடா சியராவா.? அதிக சிறப்பம்சங்களை கொண்டுள்ள SUV எது.?
Embed widget