மேலும் அறிய

Thadi Balaji: சின்னதுரை சொன்ன பதிலை கேட்டு அதற்காகவே பார்க்க வந்தேன்: தாடி பாலாஜி

பிரபல காமெடி நடிகர் தாடி பாலாஜி நெல்லைக்கு நேரில் சென்று   மாணவர் சின்னதுரை மற்றும் அவரது குடும்பத்தினரை நேரில் அழைத்து பாராட்டினார்.

12 ஆம் வகுப்பு தேர்வில் சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நிலையிலும் சாதித்த மாணவர் சின்னதுரையை நடிகர் தாடி பாலாஜி நேரில் சென்று பாராட்டியுள்ளார். 

 திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 ஆம் வகுப்பு படித்து வந்த சின்னதுரை மற்றும் அவரது தங்கை சக மாணவர்களால் சாதிய வன்முறை காரணமாக அரிவாளால் கொடூரமாக வெட்டப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. மாணவனை அரிவாளால் வெட்டிய சக மாணவர்கள் ஆறு பேர் கைது செய்யப்பட்டு நெல்லை அரசு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர். 

இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த சின்னதுரை திருநெல்வேலி அரசு கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்குப் பின் உடல்நலம் தேறினார். சிகிச்சை பெற்று வந்த சமயத்தில் தான் மருத்துவனையில் இருந்தவாறே சின்னதுரை காலாண்டு தேர்வு எழுதினார். இதனிடையே தமிழகத்தில் 2023 - 24 ஆம் கல்வியாண்டுக்கான 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த மே 6ஆம் தேதி வெளியானது.

அதில் மாணவர் சின்னதுரை 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 469 மதிப்பெண்கள் பெற்று சாதனைப் படைத்தார். இந்தத் தேர்வில் அவர், தமிழ் - 71, ஆங்கிலம் - 93, பொருளியல் - 42, வணிகவியல் - 84, கணக்குப்பதிவியில் - 85, கணினி அறிவியல் - 94 என மொத்தம் 469 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார். இக்கட்டான சூழலுக்கு மத்தியிலும் மிகச்சிறந்த மதிப்பெண்ணை பெற்ற சின்னதுரைக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

அவரின் உயர்கல்விக்கான செலவை தமிழக அரசு ஏற்றுள்ளது. தான் பி.காம் படித்து ஆடிட்டராக வேண்டுமென சின்னதுரை விருப்பம் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் சின்னதுரை மற்றும் அவரது குடும்பத்தினரை நேரில் அழைத்து பாராட்டினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த சின்னதுரையிடம், தன் மீது தாக்குதல் நடத்திய மாணவர்கள் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு அந்த மாணவர்களும் படித்து மேலே வரட்டும் என பதிலளித்ததை தொடர்ந்து சின்னதுரைக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது. இந்நிலையில் பிரபல காமெடி நடிகர் தாடி பாலாஜி நெல்லைக்கு நேரில் சென்று   மாணவர் சின்னதுரை மற்றும் அவரது குடும்பத்தினரை நேரில் அழைத்து பாராட்டினார். அந்த மாணவருக்கு புதிய ஆடையை பரிசாக வழங்கி எந்த உதவி வேண்டுமானாலும் கேள் செய்து கொடுக்கிறேன் என கூறி விட்டு சென்றார். பின் செய்தியாளர்களை சந்தித்த தாடி பாலாஜி தன் மீது தாக்குதல் நடத்திய மாணவர்களும் படித்து உயர வேண்டுமென சொன்ன சின்னதுரையின் அந்த ஒரு வார்த்தைக்காவே அவரை பார்க்க வந்தேன் என நெகிழ்ச்சியாக தெரிவித்தார். 

தலைப்பு செய்திகள்

முல்லைப் பெரியாறு: 142 அடி நீர்மட்டத்தை உயர்த்தினால் நீதிமன்றம் செல்வோம் - கேரளா எச்சரிக்கை!
முல்லைப் பெரியாறு: 142 அடி நீர்மட்டத்தை உயர்த்தினால் நீதிமன்றம் செல்வோம் - கேரளா எச்சரிக்கை!
வாகன ஓட்டிகளே உஷார்! - புதுச்சேரி - கடலூர் சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம்: முழு விவரம் உள்ளே...
வாகன ஓட்டிகளே உஷார்! - புதுச்சேரி - கடலூர் சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம்: முழு விவரம் உள்ளே...
நெல்லை - தாம்பரம் சிறப்பு ரயில்கள்: கூட்ட நெரிசலுக்கு தீர்வு! முன்பதிவு இன்று முதல்!
நெல்லை - தாம்பரம் சிறப்பு ரயில்கள்: கூட்ட நெரிசலுக்கு தீர்வு! முன்பதிவு இன்று முதல்!
Udhayanidhi Stalin: உதயநிதியின் ஆணவம்.. திமுகவுக்கு தனிப்பட்ட வாழ்க்கையை பேசுறதே வேலை.. தமிழிசை அட்டாக்!
Udhayanidhi Stalin: உதயநிதியின் ஆணவம்.. திமுகவுக்கு தனிப்பட்ட வாழ்க்கையை பேசுறதே வேலை.. தமிழிசை அட்டாக்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
Holiday Special Bus : 2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூருக்கு செல்ல போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.?
2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூருக்கு செல்ல போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.?
CM Vijay: தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
Agriculture Budget : வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
Embed widget