மேலும் அறிய

’நீங்கள் தான் கடவுள்கள்’ - செவிலியர்கள் கால்களில் விழுந்து கோவை இஎஸ்ஐ முதல்வர் ரவீந்திரன் உருக்கம்

நைட்டிங்கேல் உருவ படத்திற்கு முன்பாக கொரோனா சிகிச்சைப் பிரிவில் பணிபுரியும் செவிலியர்களின் கால்களில் விழுந்து, நீங்கள் தான் தற்போதைய சூழலில் கடவுள்கள் என கூறி கண்ணீர் மல்க உருக்கத்துடன் தெரிவித்தார்.

நவீன தாதியியல் முறையை உருவாக்கிய இங்கிலாந்தைச் சேர்ந்த புளோரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த நாளான மே 12 தேதி, ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச செவிலியர் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு செவிலியர் தினம் கொரோனா பெருந்தொற்றுக்கு இடையே நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போரில் முன் களப்பணியாளர்களான செவிலியர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

’நீங்கள் தான் கடவுள்கள்’ - செவிலியர்கள் கால்களில் விழுந்து கோவை இஎஸ்ஐ முதல்வர் ரவீந்திரன் உருக்கம்

இந்நிலையில் கோவையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் சிறப்பு மருத்துவமனையான இஎஸ்ஐ மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் அனுசரிக்கப்பட்டது. அப்போது புளோரன்ஸ் நைட்டிங்கேலின் உருவப்படத்துக்கு  அம்மருத்துவமனை முதல்வர் ரவீந்தரன் உள்ளிட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மலர் தூவியும் மெழுகுவர்த்தி ஏந்தியும் மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து செவிலியர்களிடையே பேசிய மருத்துவமனை முதல்வர் ரவீந்தரன், மருத்துவர்கள் இடும் கட்டளைகள் மற்றும் அறிவுரைகளை ஏற்று பெருந்தொற்றில் பாதிக்கப்பட்ட நோயாளிகளை அருகில் சென்று அணுகும் செவிலியர்கள் அனைவரும் போற்றுதலுக்கு உரியவர்கள் என புகழாரம் சூட்டினார். தொடர்ந்து உணர்ச்சிவசப்பட்ட மருத்துவமனை முதல்வர் ரவீந்தரன் நைட்டிங்கேல் உருவ படத்திற்கு முன்பாக கொரோனா சிகிச்சைப் பிரிவில் பணிபுரியும் செவிலியர்களின் கால்களில் விழுந்து, நீங்கள் தான் தற்போதைய சூழலில் கடவுள்கள் என கூறி கண்ணீர் மல்க உருக்கத்துடன் தெரிவித்தார். இந்தச் சம்பவம் அங்கிருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

’நீங்கள் தான் கடவுள்கள்’ - செவிலியர்கள் கால்களில் விழுந்து கோவை இஎஸ்ஐ முதல்வர் ரவீந்திரன் உருக்கம்

இதுகுறித்து இஎஸ்ஐ மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் ரவீந்திரனிடம் கேட்ட போது, “நான் கடந்த முறை கொரொனா பாதிப்பால் இம்மருத்துவமனையில் அட்மிட் ஆனேன். அப்போது என்னை இங்கு பணியாற்றும் செவிலியர்கள் நல்ல முறையில் பார்த்துக் கொண்டார்கள். அவர்களது சேவை என்னவென்று எனக்கு தெரியும். வேறு யாரும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. நைட்டிங்கேல் உருவ படத்திற்கு முன்பாக விழுந்து வணங்கினேன். இது அனைத்து செவிலியர்களுக்கும் செய்யப்பட்ட மரியாதை. ஒவ்வொரு மருத்துவமனைகளிலும் முதலில் போற்றப்பட கூடியவர்கள் செவிலியர்கள். அப்புறம் தான் மருத்துவர்கள்” எனத் தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
CM Vijay: முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
CM Vijay: முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Embed widget