CM Stalin: ”அப்பா கூட என்னை அடிச்சது இல்லை, ஆனால் அவர் என்னை அடிச்சிட்டாரு“- ஸ்டாலின் ருசிகரம்!
கலைஞர் பெயரில் முத்தமிழ் பேரவை விருது வழங்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் முத்தமிழ் பேரவைக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
கலைஞர் பெயரில் முத்தமிழ் பேரவை விருது வழங்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் முத்தமிழ் பேரவைக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் நடந்த முத்தமிழ் பேரவையின் 42ஆம் ஆண்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் ஸ்டாலின், ”முத்தமிழ் பேரவை இயக்குனர் அமிர்தம் மீது எனக்கு பயம் உண்டு. அப்பா கூட என்னை அடித்தது இல்லை ஆனால் இயக்குனர் அமிர்தம் என்னை அடித்துள்ளார். நான் பள்ளி கட் அடித்து சினிமா பார்க்க செல்லும் போது அமிர்தம் என்னை அடிப்பார் அவருக்கு நான் பயப்படுவதுண்டு“ என்றார்.
விழாவில் தொடர்ந்ந்து பேசிய முதலமைச்சர், ”இந்த ஆண்டு முதல் முத்தமிழ் கலைஞர் பெயரால் முத்தமிழ் பேரவை விருது வழங்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன். பொதுவாக முதலமைச்சர் பங்கேற்கும் விழாவில் முதலமைச்சரிடம் தான் கோரிக்கை வைப்பார்கள். ஆனால் இங்கு முதலமைச்சரான நான் கோரிக்கை வைக்கிறேன். முத்தமிழ் பேரவை இயக்குனர் அமிர்தம் மீது வைத்துள்ள மரியாதையால் இதை கேட்கிறேன். அவர் தட்டாமல் எனது கோரிக்கையை நிறைவேற்றுவார் என நம்புகிறேன்” என்றார்.
”கலைஞர் எழுதாத எழுத்துகள் இல்லை, நாடங்களை எழுதி குவித்தவர் பாடல்களை பாடவில்லை என்றாலும், அதன் ராகங்கள், நுணுக்கங்களை அறிந்தவர். அதனால், முத்தமிழ் பேரவையில் கலைஞர் சிலை உள்ளது. முத்தமிழ் கவிஞராக இருப்பதால் அவரது பேரால் மதுரையில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இயல், இசை, நாடகத்தை காப்பாற்றுவது தமிழையும், தமிழ் இனத்தையும் காப்பாற்றுவதாகவும்.
ஆனால், சிலர் தமிழுக்கும், தமிழர்களுக்கும் விரோதமான செயல்களை செய்துகொண்டு வருகின்றனர். தமிழ் முகமுடி போட்டுகொண்டு தமிழர்களை ஏமாற்றி விடலாம் என்று தப்புக்கணக்கு போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதை புரிய வைக்கும் வகையில் தமிழ்நாடு மட்டும் இல்லாமல் இந்திய மக்கள் தக்கப்பாடம் புகட்டுவார்கள்” என்றார்.