மேலும் அறிய

”தலைமைத் தொண்டனின் வாழ்த்துகள்..” முதலமைச்சர் ஸ்டாலின் திமுகவினருக்கு தெரிவித்த வாழ்த்து..

”கலைஞர் கட்டிக்காத்த இந்த இயக்கத்தில் பாடுபடும் அத்தனை பேருக்கும் இந்தத் தலைமைத் தொண்டனின் வாழ்த்துகள்! இன்று மாலை பவள விழா - முப்பெரும் விழாவில் உங்களைக் காணக் காத்திருக்கிறேன்”: முதல்வர் ஸ்டாலின்

“நான்தான் திராவிடன் என்று நவில்கையில் தேன்தான் நாவெலாம்! வான்தான் என்புகழ்!” : எனப் பாவேந்தர் பாடிய உணர்ச்சி தமிழ்நிலமெங்கும் வீச, தமிழ்த்தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணா உருவாக்கிய திராவிட முன்னேற்றக் கழகம் 75 ஆண்டுகளை நிறைவு செய்கிறது!

தமிழுக்கு ஒரு இன்னலென்றால் தடுத்து நிறுத்தத் தம்பிமார் படை உள்ளதென்று தமிழ் மக்கள் நம்பிக்கை கொள்ள உடன்பிறப்புகளானோம் நாம்! ஆயிரமாண்டு மடமைகளைக் களையெடுத்த அறிவியக்கம்! இன்னும் ஆயிரமாண்டுகளுக்கான பாதையைச் செப்பனிடும் தொண்டியக்கம்! தமிழினத் தலைவர் கலைஞர் கட்டிக்காத்த இந்த இயக்கத்தில் பாடுபடும் அத்தனை பேருக்கும் இந்தத் தலைமைத் தொண்டனின் வாழ்த்துகள்! இன்று மாலை பவள விழா - முப்பெரும் விழாவில் உங்களைக் காணக் காத்திருக்கிறேன் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

திமுக பவள விழா கொண்டாட்டம்: தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் அண்ணாவால் தொடங்கப்பட்ட, திராவிட முன்னேற்ற கழகம் 75 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளது. ஒரு மாநில கட்சியாக மட்டுமின்றி, தேசிய அரசியலிலும் முக்கிய பங்கு வகித்து வரும் திமுக, தோன்றி 75 ஆண்டுகள் பூர்த்தி அடைந்துள்ளது. இதையடுத்து, செப்.15ம் தேதி அண்ணா பிறந்த தினம், 17ம் தேதி பெரியார் பிறந்த தினம், மற்றும் திமுக தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் ஆனது ஆகியவற்றை இணைத்து முப்பெரும் விழாவாக இன்று கொண்டாடப்படுகிறது. இதற்காக சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற உள்ள முப்பெரும் விழாவுக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் இந்த விழா நடைபெற உள்ளது. கோட்டை வடிவில் முகப்பு: விழாவிற்காக, “ நந்தனம் மைதானத்தில் செஞ்சி கோட்டைக்கு இணையாக கோட்டை வடிவில் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. 18 இடங்களில் எல்இடி ஸ்க்ரீன்கள் வைக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 10,000 சதுர அடியில் எல்இடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 170 அடி நீளத்திற்கு கோட்டை வடிவிலான முகப்பு அமைக்கப்பட்டுள்ளது. பசுமையான காட்சி அமைப்புடன் வரவேற்க 5000 வாழை மரங்கள் கட்டப்பட்டுள்ளன. நந்தனம் கலைக் கல்லூரி மைதானம், டீச்சர் காலேஜ் மைதானம் உள்ளிட்ட 11 வாகன நிறுத்துமிடங்கள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 15 ஆயிரம் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் கழிவறைகள், ஓய்வறைகள் என பல்வேறு வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. செயற்கை தொழில்நுட்பம் மூலம் கருணாநிதி உரை: திமுக 75 வருடங்களாக கடந்து வந்த சாதனைகள், சோதனைகள் என அனைத்தயும் விளக்கும் விதமாக, 500க்கும் மேற்பட்ட வண்ண பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினால் தொடங்கப்பட்ட கலைஞர் பதிப்பகத்தின் சார்பில் விற்பனை கூடம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மருத்துவ முகாம்களும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பவள விழாவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (AI) மூலம் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தமிழ்நாடு முதலமைச்சரை நேரில் வந்து வாழ்த்தி உரையாற்றவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விருது வழங்கும் நிகழ்வு: விழாவில் பல்வேறு விருதுகளும் வழங்கப்பட உள்ளன. அதன்படி, பெரியார் விருது - பாப்பம்மாள், அண்ணா விருது - அறந்தாங்கி மிசா ராமநாதன், கலைஞர் விருது - ஜெகத்ரட்சகன் எம்பி.,, பாவேந்தர் விருது - கவிஞர் தமிழ்தாசன், பேராசிரியர் விருது - வி.பி.ராஜன் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. இந்தாண்டு புதிதாக மு.க.ஸ்டாலின் விருது அறிவிக்கப்பட்டு, அது எஸ்.எஸ்.பழனி மாணிக்கத்திற்கு வழங்கப்படுகிறது. இதுபோக, கட்சியில் சிறப்பாகப் பணியாற்றியவர்கள் கவுரவிக்கும் விதமாக, மண்டல அளவில் 4 பேர் வீதம் 16 பேருக்கு ரூ.1 லட்சத்திற்கான பண முடிப்பு வழங்கப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"இனி இரவு 11 மணிக்கு மேல் தியேட்டர்களில் குழந்தைகளுக்கு அனுமதி இல்ல" ஐகோர்ட் அதிரடி!
விஸ்வரூபம் எடுக்கும் வேங்கை வயல்! 389 சாட்சிகள்; 196 செல்போன்கள்;  87 டவர் – அரசு முன் வைக்கும் வாதங்கள்!
விஸ்வரூபம் எடுக்கும் வேங்கை வயல்! 389 சாட்சிகள்; 196 செல்போன்கள்;  87 டவர் – அரசு முன் வைக்கும் வாதங்கள்!
BJP TN Leader Annamalai?: பாஜக தமிழ்நாடு தலைவராக மீண்டும் அண்ணாமலையா.? ஓரிரு நாட்களில் வெளியாகும் அறிவிப்பு...
பாஜக தமிழ்நாடு தலைவராக மீண்டும் அண்ணாமலையா.? ஓரிரு நாட்களில் வெளியாகும் அறிவிப்பு...
CBSE Board Exams 2025: சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ஹால்டிக்கெட் எப்போது? வெளியான முக்கியத் தகவல்!
CBSE Board Exams 2025: சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ஹால்டிக்கெட் எப்போது? வெளியான முக்கியத் தகவல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vellore Ibrahim Arrest : திருப்பரங்குன்றம் சர்ச்சைவேலூர் இப்ராஹிம் கைது!பரபரக்கும் மதுரைMadurai Accident CCTV : மின்கம்பத்தில் மோதிய ஆட்டோதுடிதுடிக்க பிரிந்த உயிர்..பகீர் சிசிடிவி காட்சிகள்Accident News | குறுக்கே ஓடிய குதிரை வரிசையாக மோதிய வாகனங்கள் ஸ்ரீபெரும்புதூரில் அதிர்ச்சி! | ChennaiSrirangam Murder | ஸ்ரீரங்கத்தில் கொடூர கொலைதுடி துடிக்க வெறிச்செயல் பதைபதைக்க வைக்கும் காட்சி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"இனி இரவு 11 மணிக்கு மேல் தியேட்டர்களில் குழந்தைகளுக்கு அனுமதி இல்ல" ஐகோர்ட் அதிரடி!
விஸ்வரூபம் எடுக்கும் வேங்கை வயல்! 389 சாட்சிகள்; 196 செல்போன்கள்;  87 டவர் – அரசு முன் வைக்கும் வாதங்கள்!
விஸ்வரூபம் எடுக்கும் வேங்கை வயல்! 389 சாட்சிகள்; 196 செல்போன்கள்;  87 டவர் – அரசு முன் வைக்கும் வாதங்கள்!
BJP TN Leader Annamalai?: பாஜக தமிழ்நாடு தலைவராக மீண்டும் அண்ணாமலையா.? ஓரிரு நாட்களில் வெளியாகும் அறிவிப்பு...
பாஜக தமிழ்நாடு தலைவராக மீண்டும் அண்ணாமலையா.? ஓரிரு நாட்களில் வெளியாகும் அறிவிப்பு...
CBSE Board Exams 2025: சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ஹால்டிக்கெட் எப்போது? வெளியான முக்கியத் தகவல்!
CBSE Board Exams 2025: சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ஹால்டிக்கெட் எப்போது? வெளியான முக்கியத் தகவல்!
Mk Stalin: விழுப்புரத்தில் சமூகநீதி போராளிகள் மணிமண்டபத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
விழுப்புரத்தில் சமூகநீதி போராளிகள் மணிமண்டபத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
Teachers Protest: ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாத அரசு; பிப். முதல் அடுத்தகட்டப் போராட்டம்- ஜாக்டோ ஜியோ அறிவிப்பு
Teachers Protest: ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாத அரசு; பிப். முதல் அடுத்தகட்டப் போராட்டம்- ஜாக்டோ ஜியோ அறிவிப்பு
திருவண்ணாமலை கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் தர்காவா? தமிழக அரசு பரபரப்பு பதில்
திருவண்ணாமலை கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் தர்காவா? தமிழக அரசு பரபரப்பு பதில்
UP Laddu Fest: அச்சச்சோ..!  லட்டு திருவிழாவில் கோர விபத்து, பக்தர்கள் 7 பேர் உயிரிழப்பு, 50 பேர் காயம்
UP Laddu Fest: அச்சச்சோ..! லட்டு திருவிழாவில் கோர விபத்து, பக்தர்கள் 7 பேர் உயிரிழப்பு, 50 பேர் காயம்
Embed widget