மேலும் அறிய
CM Stalin: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, ஈட்டிய விடுப்பு பலன்.. முதல்வரின் 9 அறிவிப்புகள்...
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட 9 அறிவிப்புகளை இன்று சட்டப்பேரவையில் வெளியிட்டார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். அந்த அறிவிப்புகள் குறித்து காணலாம்.

அரசு ஊழியர்களுக்கு 9 அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர்
Source : ABP Nadu Spl Arrangement
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, ஈட்டிய விடுப்பு சரண் உள்ளிட்ட 9 அறிவிப்புகளை இன்று சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் வெளியிட்டார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். அந்த அறிவிப்புகள் குறித்து விரிவாக காணலாம்.
முதலமைச்சரின் 9 அறிவிப்புகள் என்னென்ன.?
சட்டப்பேரவையில் இன்று விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அரசு ஊழியர்களுக்கான 9 அறிவிப்புகளை வெளியிட்டார். அவை,
- அரசு ஊழியர்களுக்கு நலன் பயக்கும் வகையில் 2% அகவிலைப்படி உயர்வு 2025 ஜனவரி 1-ம் தேதியிலிருந்து வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
- அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று, ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணப்பலன் பெறும் நடைமுறை இந்த ஆண்டே, அக்டோபர் 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என அறிவிப்பு.
- ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பண்டிகை பரிசுத் தொகை ரூ.500-லிருந்து ரூ.1000-ஆக உயர்த்தப்படும் என அறிவிப்பு.
- பெண் ஊழியர்களின் மகப்பேறு விடுப்பின்போது தகுதிகாண்(Probation) பருவத்தையும் கணக்கில் எடுக்கலாம்.
- பெண் ஊழிர்கள் பதவி உயர்வு உள்ளிட்ட பலன்களை பெற மகப்பேறு விடுப்பு காலமும் தகுதியாக எடுத்துக்கொள்ளப்படும் என அறிவிப்பு.
- அரசு பணியாளர்கள் பணி காலத்தில் திருமண முன் பணம் ரூ.5 லட்சமாக உயர்வு.
- அரசு ஊழியர்களின் பிள்ளைகள் தொழிற்கல்வி பயில ரூ.1 லட்சம் முன்பணம் வழங்கப்படும்.
- அரசு ஊழியர்களின் பிள்ளைகள் கலை மற்றும் பாலிடெக்னிக் பயில ரூ.50,000 முன்பணம் வழங்கப்படும்.
- ஓய்வூதியதாரர்களுக்கு பண்டிகை கால முன்பணம் ரூ.4,000-லிருந்து ரூ.6,000-ஆக உயர்வு.
இதோடு, பழைய ஓய்வூதியத் திட்டம், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை ஆராய அமைக்கப்பட்டுள்ள குழு, செப்டம்பரில் அறிக்கை அளிக்கும் எனவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















