Ooty Plans: மொத்தமாக மாறப்போகும் நீலகிரி - ஊட்டிக்கான 6 முத்தான திட்டங்களை அறிவித்த முதலமைச்சர் - என்னென்ன தெரியுமா?
Ooty Plans CM Stalin: நீலகிரி மாவட்டத்தின் வளர்ச்சிக்காக உதைகையில் அமல்படுத்தப்பட உள்ள, 6 புதிய திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Ooty Plans CM Stalin: நீலகிரி மாவட்டம் உதகையில் கட்டப்பட்ட புதிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
உதகைக்கான 6 திட்டங்கள்:
சிம்லாவிற்கு அடுத்தபடியாக இந்திய மலைப்பகுதியில் கட்டப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை என்ற புகழை பெற்றுள்ள, உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், உதைக்கான 6 புதிய வளர்ச்சி திட்டங்களையும் அறிவித்தார். அதன்படி,
- நீலகிரி மாவட்டத்தில் சொந்தமாக வீடு இல்லாத ஏழை, எளிய மக்களுக்கு ரூ.26 கோடி செலவில் 300 வீடுகள் கொண்ட கலைஞர் நகர் அமைக்கப்படும்.
- ரூ.10 கோடி செலவில் பழங்குடியினர் அருங்காட்சியகம் மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படும்
- நீலகிரி மாவட்டத்தில் உள்ள இயற்கை அழகை கண்டு களிக்கும் வகையில் எங்கும் ஏறி இறங்கும் என்ற சுற்றுலா முறை ரூ.5 கோடி செலவில் 10 புதிய பேருந்துகளுடன் அறிமுகப்படுத்தப்படும்
- உதகையில் சுற்றுலா காலங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சுற்றுலா பயணிகளுக்கு ஏதுவாக ரூ.20 கோடியில் பன்னடுக்கு கார் நிறுத்துமிடம் அமைக்கப்படும்
- பழங்குடியின மக்களுக்கு ரூ.5.75 கோடியில் 23 சமுதாய கூடங்களும், நகர்ப்புறங்களில் வாழக்கூடிய பழங்குடியின மக்களுக்கு 10 கோடி ரூபாய் செலவில் 200 வீடுகளும் கட்டித் தரப்படும்
- ஊட்டியில் உள்ள சூழலில் இயற்கை சுற்றுலா மையம் ரூ.3 கோடி செலவில் மேம்படுத்தப்படும்
நீலகிரி மாவட்டத்தில் மினி டைடல் பூங்கா அமைக்கப்பட உள்ளது, குன்னூரில் புதிய கலைக்கல்லூரி அமைக்கப்பட உள்ளது போன்ற தகவல்களையும் உறுதிப்படுத்தினார்.
சுற்றுலாத்துறைக்கு முக்கியத்துவம்:
மலைவாசஸ்தலமான நீலகிரி மாவட்ட மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக சுற்றுலாத்துறை உள்ளது. இதன் காரணமாகவே சுற்றுலாத்துறையை மேலும் மேம்படுத்தும் விதமாக, முதலமைச்சர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன்படி, ஹாப்-இன் ஹாப்-ஆஃப் என்ற புதிய பேருந்து சேவையையும், பன்னெடுங்காலமாக நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக பன்னடுக்கு கார் நிறுத்துமிடம், சூழலில் இயற்கை சுற்றுலா மையத்தை மேம்படுத்துவது போன்ற அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இதன் மூலம் சுற்றுலாத்துறை மேம்பட்டு அமாவட்ட மக்களின் வாழ்வாதாரமும் உயரும் என நம்பப்படுகிறது.
பழங்குடியின மக்களுக்கு வீடுகள்:
நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் தான் பெரும்பான்மையாக உள்ளனர். அவர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் விதமாக தான் கலைஞர் நகர் மற்றும் நகர்ப்புற பழங்குடியின மக்களுக்கான வீடுகளை கட்டி வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளார். மலைப்பகுதிகளில் வீடு கட்டுவதும், அதற்கு அனுமதி வாங்குவதும் சிரமான மற்றும் செலவு நிறைந்த பணியாகும். இந்நிலையில் தான் அரசே அவர்களுக்கு வீடு கட்டி தருவாதாக அறிவித்துள்ளது.
அதோடு, நீலகிரி மாவட்டத்தில் தொழில்துறை வளர்ச்சியை மேம்படுத்தும் விதமாக டைடல் பார்க்கும் அமையும் என அறிவித்துள்ளார். இதன் மூலம் சுமார் 2 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.





















