மேலும் அறிய

புதுச்சேரியை கலக்கும் மலபார் கோல்டு.. புதிய ஷோரூமை திறந்து வைத்த முதலமைச்சர் ரங்கசாமி!

மலபார் குழுமத்தின் முன்னோடி நிறுவனமான மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனம் தனது  புதிய ஷோரூமை இன்று புதுச்சேரியில்  திறந்துள்ளது.

உலகின் சில்லறை நகை விற்பனையில் வேகமாக வளர்ந்து வரும் முன்னணி நிறுவனமும் இந்தியாவில் பல்வேறு துறைகளில் கால் பதித்து தனது வர்த்தகத்தை விரிவாக்கி கொண்டுள்ள மலபார் குழுமத்தின் முன்னோடி நிறுவனமான மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனம் தனது  புதிய ஷோரூமை இன்று புதுச்சேரியில்  திறந்துள்ளது.

புதுச்சேரியை கலக்கும் மலபார் கோல்டு: 

இந்த ஷோரூமில் அதிகமான இடவசதி, மாடல்கள், டிசைன்கள், தங்கம், வைரம், மற்றும் வெள்ளி, நகைகளின் தொகுப்புகள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. இந்த புதிய ஷோரூமை புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமி திறந்து வைத்தார். 

இந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம்,  பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், அரசு கொறடா ஆறுமுகம், மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் தமிழ்நாடு மண்டல தலைவர் யாசர், மலபார் கோல்டு தமிழ்நாடு வடக்கு மண்டல தலைவர் அமீர் பாபு, மலபார் கோல்டு  தமிழ்நாடு கிழக்கு மண்டல தலைவர் சுதீர் முகமது, மலபார் கோல்டு தமிழ்நாடு மண்டல வணிக தலைவர் திரு.சபீர் அலி, மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் புதுச்சேரி கிளை  தலைவர் அமல்நாத் மற்றும் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் மேலாண்மை உறுப்பினர்கள் மற்றும் கிளை ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் தற்போது 13 நாடுகளில் 340-க்கும் மேற்பட்ட  சில்லறை விற்பனை நிலையங்களுடன் உலகில் மிகப்பெரிய நகை விற்பனை நிறுவனமாக உருவெடுத்துள்ளது, தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, நாகர்கோயில், திருநெல்வேலி, சேலம், ஈரோடு, தஞ்சாவூர், இராமநாதபுரம், தர்மபுரி, வேலூர், திருச்சி, கும்பகோணம், திருப்பூர், காரைக்குடி, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, மார்த்தாண்டம், புதுச்சேரி  ஆகிய நகரங்களில் 26 கிளைகளை கொண்டுள்ளது.

மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் விற்பனையகத்தில் கலைநயமிக்க அணி கலன்கள்  கிடைப்பது சிறப்பம்சமாகும். அணிந்தாலே ஜொலிக்கும் வைர நகைகளான ‘மைன்’பிரம்மாண்டமான வடிவமைப்புகளை கொண்டுள்ள வெட்டாத வைரத்தால் செய்யப்பட்ட ‘எரா’ மிகவும் பொக்கிஷமாக கருதப்படும் விலை உயர்ந்தகற்களால் செய்யப்பட்ட நகை தொகுப்பான ‘பிரீசியா’ நகைகள், கைவினை கலைஞர்களால் கையால் செய்யப்பட்ட நகைகளின் தொகுப்பான ‘எத்தினிக்’ நமது கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பாரம்பரிய இந்திய நகை வடிமைப்புகளில் உருவான ‘டிவைன்’ குழந்தைகளுக்கான நகை தொகுப்பான ‘ஸ்டார்லெட்’ஆகியவை இந்த ஷோரூமில் இடம்பெற்றுள்ளன.

மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனம் பற்றி:

நாட்டில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் வர்த்தக குழுமங்களில் ஒன்றான மலபார் குழும நிறுவனங்களின் முன்னணி பிரிவு தான் மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் நிறுவனம் ஆகும். இந்தியா, சிங்கப்பூர், வளைகுடா நாடுகளில் சில்லறை விற்பனை பிரிவில் உள்ள இந்த நிறுவனம் பிஐஎஸ் சான்று பெற்ற 916 தங்க நகைகளையும் ஐஜிஐ சான்று பெற்ற வைர நகைகளையும் பிஜிஐ சான்று பெற்ற பிளாட்டிண நகைகளையும் ஹால் மார்க் சான்று பெற்ற வெள்ளி நகை களையும் மட்டுமே விற்பனை செய்கிறது.

அனைத்து நகைகளும் வெளிப்படையான விலை, நிகர எடை, கற்களின் எடை, சேதாரம், கற்களுக்கான விலை, அதன் நிகர எடை ஆகியவற்றை தெளிவாக குறிப்பிடும் பட்டியலுடன் வைக்கப்பட்டுள்ளன. இதனால் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு நகையின் தயாரிப்பு குறித்தும் விலையையும் எளிதாக புரிந்து கொண்டு வாங்குவதற்கு திட்டமிடலாம்.

வாடிக்கையாளர்கள் வாங்கும் அனைத்து நகைகளுக்கும் ஆயுள் முழுவதும் இலவச பராமரிப்பு, அனைத்து நகைகளையும் எப்போது வேண்டுமானலும் திரும்ப பெற்றுக்கொள்ளும் உத்தரவாதம் உள்ளிட்டவற்றை வழங்குகிறது. இவை தவிர மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனத்தின் வெற்றிகரமான வணிகத்திற்கு அதன் சமூகப்பொறுப்பு முன் முயற்சிகள் இதர காரணங்கள் ஆகும். தனது லாபத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை சுகாதாரம், கல்வி, வீட்டுவசதி, சுற்றுச்சுழல் பாதுகாப்பு, மற்றும் மகளிரை அதிகார மயமாக்குதல் என சமூக பொறுப்பு திட்டங்களுக்கு செலவு செய்கிறது.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Thiruvananthapuram Mayor: கேரளாவின் முதல் பெண் ஐபிஎஸ் - திருவனந்தபுரத்தின் முதல் பாஜக மேயர்? யார் இந்த ஸ்ரீலேகா?
Thiruvananthapuram Mayor: கேரளாவின் முதல் பெண் ஐபிஎஸ் - திருவனந்தபுரத்தின் முதல் பாஜக மேயர்? யார் இந்த ஸ்ரீலேகா?
US Gun Fire: கல்லூரி தேர்வின்போது கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு.. 2 பேர் பலி, ஆபத்தான நிலையில் 8 பேர்
US Gun Fire: கல்லூரி தேர்வின்போது கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு.. 2 பேர் பலி, ஆபத்தான நிலையில் 8 பேர்
IND Vs SA T20: முன்னிலை பெறப்போவது யார்? தெ.ஆப்., பதிலடி தருமா இந்தியா? சாம்சனிற்கு வாய்ப்பு? இன்று 3வது டி20
IND Vs SA T20: முன்னிலை பெறப்போவது யார்? தெ.ஆப்., பதிலடி தருமா இந்தியா? சாம்சனிற்கு வாய்ப்பு? இன்று 3வது டி20
தவெக-விற்கு தாவுகிறாரா வைத்திலிங்கம்? ஓ.பி.எஸ்.சிற்கு விரைவில் டாடா? பறிபோகும் ஆதரவாளர்கள்!
தவெக-விற்கு தாவுகிறாரா வைத்திலிங்கம்? ஓ.பி.எஸ்.சிற்கு விரைவில் டாடா? பறிபோகும் ஆதரவாளர்கள்!
ABP Premium

வீடியோ

கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest
Kaliyammal Joins TVK | காளியம்மாளுக்கு மகளிரணி? டிக் அடித்த விஜய்! குஷியில் தவெகவினர்! | NTK | Vijay
Minister CV Ganesan Controversial Speech ”ஏய்யா எதுக்கு இப்ப கத்துற?”அமைச்சர் கணேசன் சர்ச்சை பேச்சு
Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thiruvananthapuram Mayor: கேரளாவின் முதல் பெண் ஐபிஎஸ் - திருவனந்தபுரத்தின் முதல் பாஜக மேயர்? யார் இந்த ஸ்ரீலேகா?
Thiruvananthapuram Mayor: கேரளாவின் முதல் பெண் ஐபிஎஸ் - திருவனந்தபுரத்தின் முதல் பாஜக மேயர்? யார் இந்த ஸ்ரீலேகா?
US Gun Fire: கல்லூரி தேர்வின்போது கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு.. 2 பேர் பலி, ஆபத்தான நிலையில் 8 பேர்
US Gun Fire: கல்லூரி தேர்வின்போது கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு.. 2 பேர் பலி, ஆபத்தான நிலையில் 8 பேர்
IND Vs SA T20: முன்னிலை பெறப்போவது யார்? தெ.ஆப்., பதிலடி தருமா இந்தியா? சாம்சனிற்கு வாய்ப்பு? இன்று 3வது டி20
IND Vs SA T20: முன்னிலை பெறப்போவது யார்? தெ.ஆப்., பதிலடி தருமா இந்தியா? சாம்சனிற்கு வாய்ப்பு? இன்று 3வது டி20
தவெக-விற்கு தாவுகிறாரா வைத்திலிங்கம்? ஓ.பி.எஸ்.சிற்கு விரைவில் டாடா? பறிபோகும் ஆதரவாளர்கள்!
தவெக-விற்கு தாவுகிறாரா வைத்திலிங்கம்? ஓ.பி.எஸ்.சிற்கு விரைவில் டாடா? பறிபோகும் ஆதரவாளர்கள்!
Maruti Electric MPV: இ-விட்டாராவிற்கு நெக்ஸ்ட்.. குடும்ப காரை மின்சார எடிஷனில் களமிறக்கும் மாருதி - எப்போது? எப்படி?
Maruti Electric MPV: இ-விட்டாராவிற்கு நெக்ஸ்ட்.. குடும்ப காரை மின்சார எடிஷனில் களமிறக்கும் மாருதி - எப்போது? எப்படி?
Kerala Election Results: கேரளாவில் காலூன்றிய பாஜக.. திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி சாதனை!
Kerala Election Results: கேரளாவில் காலூன்றிய பாஜக.. திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி சாதனை!
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
தனியார் பள்ளிகளுக்கு தனி பாடத்திட்டம்; கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு எதிராக நீதிமன்றம்: தனியார் பள்ளிகள் சங்கம் அதிரடி!
தனியார் பள்ளிகளுக்கு தனி பாடத்திட்டம்; கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு எதிராக நீதிமன்றம்: தனியார் பள்ளிகள் சங்கம் அதிரடி!
Embed widget