மேலும் அறிய

மக்கள் கையில் தான் ஊரடங்கு; முதல்வர் ஸ்டாலின் சூசகம்!

தமிழகத்தில் ஊரடங்கிற்கு முற்றுப்புள்ளி வைப்பது மக்களின் கையில்தான் உள்ளது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழக முதல்-அமைச்சர் மு.க,ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் இன்று வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் பேசியிருப்பதாவது,  

“அனைவருக்கும் வணக்கம். அனைவரும் பாதுகாப்பாக உள்ளீர்களா? கொரோனா தொற்று ஒருவரிடம் இருந்துதான் இன்னொருவரிடம் பரவுகிறது, அதனால், தொற்று தங்கள் மேல் பரவாமல் இருப்பதற்கு தங்களை தாங்களே தற்காத்துக் கொள்ள வேண்டும். அதுபோல, நீங்களும் மற்றவருக்கு பரப்பிவிடாமல் கவனமாக இருக்க வேண்டும். ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் கொரோனா சங்கிலியை உடைத்தாலே கொரோனா பரவலை தடுத்திட முடியும். கடந்த 24-ந் தேதி முதல் 7 நாட்களுக்கு தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மேலும் 7 நாட்களுக்கு தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட 24-ந் தேதி முதல் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.

சென்னையில் 7 ஆயிரத்தை எட்டிய கொரோனா பாதிப்பு தற்போது 2 ஆயிரமாக குறைந்துள்ளது. இன்னும் சில நாட்களில் முழுமையாக குறைந்துவிடும். கோவை உள்ளிட்ட மேற்கு மண்டலத்தில் இந்த வாரத்தில் அதிகமாகியது. அதுவும் கடந்த இரு நாட்களாக குறைந்து வருகிறது. எனவே, கொரோனாவை முழுமையாக கட்டுப்படுத்த முழு ஊரடங்கைத் தவிர வேறு வழியில்லை என்பதை அனைவரும் உணர வேண்டும்.

மக்கள் கையில் தான் ஊரடங்கு;  முதல்வர் ஸ்டாலின் சூசகம்!

முழு ஊரடங்கு காரணமாக பொதுமக்களுக்கு ஏற்படும் பல்வேறு பாதிப்புகளை உணர்ந்து அரசு பல்வேறு ஏற்பாடுகளை செய்து கொண்டு வருகிறது. மக்களை நோக்கி காய்கறிகள், மளிகை பொருட்கள் வந்து செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ரேஷன் கடைகள் திறக்கப்பட்டுளளது. பொதுமக்களுக்கு தேவையான 13 பொருட்கள் அடங்கிய மளிகைப்பொருட்கள் தொகுப்பு தரப்பட உள்ளது. இதை பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

முழு ஊரடங்கு காரணமாக குறிப்பிட்ட பிரிவினரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது உண்மையே. இதனால்தான் கொரோனா நிவாரண நிதியாக முதற்கட்டமாக ரூபாய் 2 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. விரைவிலே அடுத்த கட்டமாக ரூபாய் 2 ஆயிரம் வழங்கப்போகிறோம். இதை பொருளாதார நிபுணர் அபிஜித்பானர்ஜிகூட பாராட்டியுள்ளார். இருந்தாலும் ஊரடங்கை நீட்டித்துக்கொண்டே போக முடியாது. அதற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.  அது மக்களின் கையில்தான் உள்ளது.

கட்டுப்பாடுகளை முழுமையாக கடைபிடித்தால்தான் கொரோனா பரவலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஏராளமான உட்கட்டமைப்பு வசதிகளை கடந்த மூன்று வாரமாக தமிழக அரசு செய்து கொண்டு வருகிறது. இதனால், தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற படுக்கை வசதிகள் தட்டுப்பாடு என்ற நிலை தற்போது இல்லை. ஆக்சிஜன் தட்டுப்பாடு என்ற சூழல் இல்லவே இல்லை.

மக்கள் கையில் தான் ஊரடங்கு;  முதல்வர் ஸ்டாலின் சூசகம்!

நிறைய மருத்துவமனைகளில் படுக்கைகள் காலியாக உள்ளது என்பதுதான் உண்மை. ஒரே நாளில் மூன்று லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் போடுகிறோம். இந்த அளவிற்கு வேறு எந்த மாநிலத்திலும் தடுப்பூசிகள் போடப்படவில்லை. ஒரு நாளில் 1 லட்சத்த 72 ஆயிரம் பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை செய்கிறோம். இந்தளவிற்கு பரிசோதனை வேறு எந்த மாநிலத்திலும் செய்யப்படவில்லை.

மக்களை காக்கும் மகத்தான பணியில் என்னை நானே ஒப்படைத்துக் கொண்டுள்ளேன். கோவை இ.எஸ்.ஐ. கொரோனா வார்டில் நலம் பெற்று வருபவர்களை பி.பி.இ. கிட் உடை அணிந்து நேரில் சென்று நலம் விசாரித்தேன். மருத்துவர்களோடு சேர்ந்து மற்றவர்களுக்கு ஊட்டுகிற நம்பிக்கையும், ஆறுதலும் நோயை குணப்படுத்தும்னு சொல்வார்கள்.

தமிழக அரசு நம்பிக்கை ஊட்டும் அரசாக செயல்படும். கொரோனா வார்டுக்குள் போகவேண்டாம்னு அக்கறை மிகுந்த அறிவுரைகள் சொல்லப்பட்டாலும், தான் உயிரையும் பணயம் வைத்து போராடும் மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப்பணியாளர்கள், பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோரின் குடும்பங்களுக்கு நம்பிக்கை ஊட்ட வேண்டும் என்பதற்காகவே நான் உள்ளே போனேன்.

மக்கள் கையில் தான் ஊரடங்கு;  முதல்வர் ஸ்டாலின் சூசகம்!

உங்கள் உயிரைப் பற்றி கவலைப்படாமல் உள்ளே போனீர்களே என்று பாராட்டுக்கள் ஒருபுறம், முதலமைச்சரே உங்களை நீங்கள் தற்காத்துக் கொள்ளனும்னு உரிமையோடு பலர் கண்டிக்கவும் செய்தார்கள். தமிழக மக்களை காப்பாற்றவே என்னை நானே ஒப்படைத்துக் கொண்டுள்ளேன்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களை பார்க்க நான் சென்றதால் பதற்றம் அடைந்த மக்களுக்கு நான் சொல்வது, இந்த எச்சரிக்கை உணர்வு அனைத்து மக்களுக்கும் வர வேண்டும். இந்த தொற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதனால், அரசின் கட்டுப்பாடுகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். ஒரு சிலர் மீறினாலும், அதனால் முழு பயனும் கிடைக்காமல் போய்விடும்.

முதல் அலைக்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைக்கத் தவறியதால்தான், இரண்டாவது அலையை நாம் எதிர்கொள்ள வேண்டியதாகிவிட்டது. இந்த இரண்டாவது அலை தமிழகத்தின் மருத்துவ கட்டமைப்புக்கும் நிதி நிலைமைக்கும் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது இதில் இருந்து விரைவில் நாம் மீள வேண்டும்.

மேலும் படிக்க : Delhi on corona : டெல்லியில் 1 சதவீதத்திற்கும் கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு

தி.மு.க. தலைமையிலான புதிய அரசு அமைந்து மூன்று வாரங்கள்தான் ஆகியுள்ளது. எத்தனையோ புதிய திட்டமிடுதல்கள், பல்வேறு துறைகளில் செய்யப்பட வேன்டியுள்ளது. அதற்கு தடையாக உள்ள இந்த கொரோனா தடுப்புச்சுவரை நாம் விரைவில் உடைத்து நொறுக்க வேண்டும். அதன்பிறகுதான் அனைத்து துறைகளிலும் பல்வேறு மாற்றங்கள், முன்னெடுப்புகள் செய்து வளமான தமிழகத்தை நாம் உருவாக்க முடியும். நிகழ்கால சோகங்களில் இருந்து மீண்டு, எதிர்கால புத்துணர்வை அனைவரும் பெற வேண்டும். கொரோனா தொற்றை வெல்வோம். வளமான தமிழகத்தை அமைப்போம்” இவ்வாறு அவர் பேசினார். டால

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில்  கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில் கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில்  கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில் கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Sabarimala Temple: ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு... சபரிமலையில் ஸ்பாட் புக்கிங் திடீர் நிறுத்தம்
ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு... சபரிமலையில் ஸ்பாட் புக்கிங் திடீர் நிறுத்தம்
Breaking News LIVE: சிசிடிவி காட்சிகளை வெளியிட மறுப்பது ஏன்? மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கேள்வி
Breaking News LIVE: சிசிடிவி காட்சிகளை வெளியிட மறுப்பது ஏன்? மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கேள்வி
TN GOVT Election: என்னாது..!  உள்ளாட்சி தேர்தல் கிடையாது - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
TN GOVT Election: என்னாது..! உள்ளாட்சி தேர்தல் கிடையாது - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
விசாரணைக்கு வந்த ஜெயம் ரவி ஆர்த்தி விவாகரத்து  வழக்கு...என்ன சொன்னாங்க
விசாரணைக்கு வந்த ஜெயம் ரவி ஆர்த்தி விவாகரத்து வழக்கு...என்ன சொன்னாங்க
Embed widget