மேலும் அறிய

CM MK Stalin: மிக்ஜாம் புயல் - கனமழை.. போர்க்கால அடிப்படையில் மீட்பு நடவடிக்கைகள் நடைபெறுவதாக முதலமைச்சர் தகவல்

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கியுள்ள மக்களை மீட்டு வருவதற்காக 350 படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு அவை தேவையான பல இடங்களில் பயன்படுத்தப்பட்டு மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு வரப்படுகிறார்கள். 

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பான மீட்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கிய பின்னர், கடந்த இரண்டு நாட்களாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக,  சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில், வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக, தொடர்ந்து பெய்துவரும் வரலாறு காணாத மழையின் காரணமாக, தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள், பள்ளிகள், தனியார் நிறுவனங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு இன்று (04.12.2023) மற்றும் நாளை (05.12.2023) ஆகிய இரண்டு நாட்களுக்கு பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

மேலும், பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அமைச்சர் பெருமக்கள் மற்றும் அரசு உயர்அலுவலர்கள் மேற்பார்வையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு உடனடி நிவாரணம் வழங்கப்பட்டு வருவதுடன், சீரமைப்புப் பணிகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  சென்னை மாநகராட்சியில் உள்ள ஒவ்வொரு மண்டலத்திற்கும், ஒரு இந்திய ஆட்சிப் பணி அலுவலரும், தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சிகளுக்கென தலா ஒரு இந்திய ஆட்சிப் பணி அலுவலரும் நியமிக்கப்பட்டு, அவர்கள் அனைவரும் களத்தில் பணியாற்றி வருகின்றனர். 

சென்னை பெருநகர மாநகராட்சியைப் பொறுத்தவரையில், மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின், மாண்புமிகு இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் திரு.சேகர்பாபு, மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத் துறை அமைச்சர் திரு. மா.சுப்பிரமணியன் ஆகியோர் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் களப்பணி ஆற்றி வருகின்றனர். 

மேலும், மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு.கே.என். நேரு அவர்கள் சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறையிலிருந்து நிலைமையைக் கண்காணித்து உரிய மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.  அதேபோன்று, மாண்புமிகு வருவாய்த் துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் அவர்கள் வருவாய் நிர்வாக ஆணையர் கட்டுப்பாட்டு அறையிலிருந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைக் கண்காணித்து, அலுவலர்களுக்கு மீட்புப் பணிகளுக்குத் தேவையான உத்தரவுகளை வழங்கி, தேவையான மீட்பு மற்றும் நிவாரணப் பணி நடவடிக்கைகளை எடுத்துவருகிறார்கள்.

மாண்புமிகு நிதி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள், பெருமழையின் காரணமாக மின் கசிவுகள், மின் கம்பிகள் அறுந்து விழுதல் மற்றும் மின்சாரம் தொடர்பான எந்த விபத்துக்களையும் தவிர்த்திடும் பொருட்டு, தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களை முழுமையாக ஆய்வு செய்து பாதுகாப்பை உறுதி செய்திடுமாறு, களத்திலேயே இருந்து நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். 

இதற்கென சென்னையில் மாத்திரம் மின் வாரியத்தைச் சேர்ந்த 600 பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.  அதே போல் திருவள்ளூர் மாவட்டத்திற்கு 1317 மின் வாரியப் பணியாளர்களும், செங்கல்பட்டிற்கு 2194 பணியாளர்களும், காஞ்சிபுரத்திற்கு 650 பணியாளர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  இராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கும் மொத்தம் 3,831 பணியாளர்களோடு மிக்ஜாம் புயல் பாதிப்பினை எதிர்கொள்ள மேற்படி 8 மாவட்டங்களில்  மொத்தம் 8592 மின் வாரியப் பணியாளர்கள் களப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கியுள்ள மக்களை மீட்டு வருவதற்காக 350 படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு அவை தேவையான பல இடங்களில் பயன்படுத்தப்பட்டு மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு வரப்படுகிறார்கள். 

மழைக்காலங்களில் ஏற்படக் கூடிய நோய்த் தொற்று அபாயத்தை தவிர்க்கவும், தேவையான இடங்களில் மக்களுக்கு சிகிச்சைகள் வழங்கவும், மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 8 மாவட்டங்களில் 4320 மருத்துவர்கள் மருத்துவப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

புயல் மழையினால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, தாம்பரம், ஆவடி மாநகராட்சி பகுதிகளில் தூய்மைப் பணிகளை நாளை முதல் விரைவு படுத்த, தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் இருந்து 1000 தூய்மைப் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். சாலைகளில் மரங்கள் விழுந்து அதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதை தவிர்த்திட 1238 மரம் அறுக்கும் இயந்திரங்கள் இம்மாவட்டங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சென்னையில் மட்டும் 337 இயந்திரங்கள் பயன்பாட்டில் உள்ளன.

மேலும், ஏரிகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுவது மிக கவனமாக  கண்காணிக்கப்படுகிறது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ வாய்ப்புள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.  சென்னையில் மட்டும் 15 இடங்களில் நிவாரண முகாம்கள் துவக்கப்பட்டு, அங்கு தங்கியுள்ளவர்களுக்கு இதுவரை 5022 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளது. 

அதே போல் சமைத்த உணவை பாதிக்கப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கே சென்று வழங்கப்பட்டும் வருகிறது.  அந்த வகையில் நவம்பர் 30ஆம் தேதி துவங்கி இன்று (04.12.2023) காலை வரை 5,35,080 உணவுப் பொட்டலங்கள் சென்னையில் வழங்கப்பட்டுள்ளன.  மாநிலத்தில் 8 இடங்களில்  236 நிவாரண மையங்கள் துவக்கப்பட்டு அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள 9634 நபர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும், மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் மக்களை மீட்க காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகளைச் சேர்ந்த 725 வீரர்கள் மற்றும் கடலோர பாதுகாப்புப் படையினர் தேவைக்கேற்ப மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள்.  பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மட்டும் 250 தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் குழு வீரர்கள் பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.

இதுமட்டுமன்றி,  தாழ்வான பகுதிகளில் சூழ்ந்துள்ள நீரை அகற்றிட சென்னை பெருநகர மாநகராட்சிப் பகுதிகளில் 990 மோட்டார் பம்புகளும், திருவள்ளூர் மாவட்டத்தில் 190, செங்கல்பட்டு மாவட்டத்தில் 243 என முன்னர் குறிப்பிட்ட 8 மாவட்டங்களில் மொத்தம் 1929 மின் மோட்டார்கள் மழை நீர் அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.   இப்பணிகளுக்கு துணையாக 906 JCB இயந்திரங்களும், 154 Hitachi இயந்திரங்களும் இந்த  8 மாவட்டங்களில் களப்பணியில் உள்ளன” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு அரசு திட்டமிட்டு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் காரணமாக, தயார் நிலையில் இருந்த பல்வேறு அரசுத் துறைகளின் பணியாளர்கள் மற்றும் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் ஒருங்கிணைந்த அர்ப்பணிப்பு உணர்வோடு கூடிய செயல்பாட்டின் காரணமாக மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் உடனுக்குடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

அனைத்து அரசுத் துறை அலுவலர்களுக்கும், பணியாளர்களுக்கும், பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் இத்தருணத்தில் என் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மிகச் சவாலான நேரத்தில்  மக்களைத் தேடிச் சென்று அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து இந்த மாபெரும் பணியில் தங்களை தொடர்ந்து ஈடுபடுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
IND Vs SA T20: சொதப்பும் கில், ஸ்கை.. சஞ்சுவிற்கு வாய்ப்பு? தெ.ஆப்., சமாளிக்குமா இந்தியா? இன்று 2வது டி20 போட்டி
IND Vs SA T20: சொதப்பும் கில், ஸ்கை.. சஞ்சுவிற்கு வாய்ப்பு? தெ.ஆப்., சமாளிக்குமா இந்தியா? இன்று 2வது டி20 போட்டி
Amit Shah: SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
Rahul Gandhi: தேர்தல் சீர்திருத்தம்; கேள்விகளுக்கு பதில் இல்லை; அமித் ஷா மீது ராகுல் வைத்த குற்றச்சாட்டு என்ன.?
தேர்தல் சீர்திருத்தம்; கேள்விகளுக்கு பதில் இல்லை; அமித் ஷா மீது ராகுல் வைத்த குற்றச்சாட்டு என்ன.?
ABP Premium

வீடியோ

அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah
ADMK General Council Meeting Food |’’மட்டன் பிரியாணி, சிக்கன் 65..EPS-ன் அறுசுவை விருந்து
Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
IND Vs SA T20: சொதப்பும் கில், ஸ்கை.. சஞ்சுவிற்கு வாய்ப்பு? தெ.ஆப்., சமாளிக்குமா இந்தியா? இன்று 2வது டி20 போட்டி
IND Vs SA T20: சொதப்பும் கில், ஸ்கை.. சஞ்சுவிற்கு வாய்ப்பு? தெ.ஆப்., சமாளிக்குமா இந்தியா? இன்று 2வது டி20 போட்டி
Amit Shah: SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
Rahul Gandhi: தேர்தல் சீர்திருத்தம்; கேள்விகளுக்கு பதில் இல்லை; அமித் ஷா மீது ராகுல் வைத்த குற்றச்சாட்டு என்ன.?
தேர்தல் சீர்திருத்தம்; கேள்விகளுக்கு பதில் இல்லை; அமித் ஷா மீது ராகுல் வைத்த குற்றச்சாட்டு என்ன.?
MK STALIN: எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
TN Power Shutdown: மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
Top 5 Scooters in India: Activa முதல் Access வரை; இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்கள், விலை, அம்சங்கள தெரிஞ்சுக்கோங்க
Activa முதல் Access வரை; இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்கள், விலை, அம்சங்கள தெரிஞ்சுக்கோங்க
Honda Shine 100: குறைந்த விலை.. 65 கிமீ மைலேஜ்.. ஸ்பிளெண்டருக்கு டஃப் கொடுக்கும் பைக் இதுதான்...
குறைந்த விலை.. 65 கிமீ மைலேஜ்.. ஸ்பிளெண்டருக்கு டஃப் கொடுக்கும் பைக் இதுதான்...
Embed widget