மேலும் அறிய

கருப்பு பூஞ்சை நோய்க்கு மருந்து; ரூ. 25 கோடி ஒதுக்கி முதல்வர் உத்தரவு

தமிழ்நாட்டில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருந்துகள் வாங்க ரூபாய் 25 கோடி ஒதுக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் தினசரி 37 ஆயிரம் என்று தினசரி பாதிப்பு பதிவாகி வந்த நிலையில், ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கொரோனா தினசரி பாதிப்பு தற்போது 20 ஆயிரம் என்ற நிலையில் பதிவாகி வருகிறது.

இந்த சூழலில், கொரோனா பாதிப்பால் மக்கள் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ள நிலையில் கடந்த மாதம் முதல் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு மக்களை மேலும் அச்சப்படுத்தி வருகிறது. இந்த நோய் ஏற்கனவே உள்ள வியாதிதான் என்றாலும், கொரோனாவால் பாதிக்கப்படுவோர்களும், சிறுநீரக பிரச்சினை உள்ளவர்களும் அதிக அளவில் இந்த நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.


கருப்பு பூஞ்சை நோய்க்கு மருந்து; ரூ. 25 கோடி ஒதுக்கி முதல்வர் உத்தரவு

கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு கண் பார்வை இழப்பு ஏற்படுகிறது. ராஜஸ்தான், குஜராத் ஆகிய வட மாநிலங்களில் இந்த வியாதியால் பலரும் பாதிக்கப்பட்டும், உயிரிழந்தும் வருகின்றனர்.  இந்த நோய்க்கு சிகிச்சை அளிக்க ஆம்போடெரிக்சின் பி மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இவற்றின் இருப்பு குறைவாக இருப்பதால், இந்த மருந்துகளை 30 ஆயிரம் குப்பிகள் அளவுக்கு தமிழ்நாட்டிற்கு உடனே ஒதுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே கடிதம் எழுதியிருந்தார்.

இந்த நிலையில், தமிழகத்தில் தற்போது வரை கருப்பு பூஞ்சை நோயால் 938 நபர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்க 35 ஆயிரம் குப்பிகள் மருந்துகள் தேவைப்படுகிற நிலையில் மத்திய அரசு இதுவரை 3 ஆயிரத்து 840 குப்பிகள் மட்டுமே ஒதுக்கியுள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று கூறியுள்ளார்.


கருப்பு பூஞ்சை நோய்க்கு மருந்து; ரூ. 25 கோடி ஒதுக்கி முதல்வர் உத்தரவு

இந்த நிலையில் கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்கு தேவையான மருந்துகளை வாங்குவதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நிதி ஒதுக்கியுள்ளார். அவர் பிறப்பித்த உத்தரவில், கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்கத் தேவைப்படும் ஆம்போடெரிக்சின் பி மருந்துகளை வாங்குவதற்கு ரூபாய் 25 கோடி நிதியை ஒதுக்கியுள்ளதாக கூறியுள்ளார். இந்த நிதி கொரோனா தடுப்பு பணிகளுக்காக பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட நிதியில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ளது.

கொரோனா சிகிச்சைக்காக ஆக்சிஜன் சிலிண்டர்கள் கொள்முதல், ஆக்சிஜன் தயாரிப்பு, படுக்கை வசதிகள் அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு  நிதி அளிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். அவரது வேண்டுகோளை ஏற்று தொழிலதிபர்கள், அரசியல் கட்சியினர், திரைப் பிரபலங்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் நிவாரண நிதி அளித்து வருகின்றனர். இதுவரை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் 280 கோடியே 26 லட்சம் நிவாரணமாக வந்துள்ளதாக மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : 30 நாளில் ஸ்டாலின் எழுதிய 6 கடிதங்கள்; யாருக்கு? எதற்கு? என்கிற முழு விபரம்!

தலைப்பு செய்திகள்

" மனைவியின் Whats app , instagram சாட் " அதிர்ந்து போன கணவன் !! ஏன் எதற்காக ?
TVK vs DMK: மு.க.ஸ்டாலின் மிசாவில்தான் கைது செய்யப்பட்டாரா? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK vs DMK: மு.க.ஸ்டாலின் மிசாவில்தான் கைது செய்யப்பட்டாரா? உதயநிதிக்கு தவெக கேள்வி
Tamil Nadu Top 10 News : 'இன்றைய முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Tamil Nadu Top 10 News : 'இன்றைய முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Top 5 budget cars : ரூ.5 லட்சத்துக்குள் கார் வாங்கணுமா? சூப்பர் மைலேஜ் தரும் டாப் 5 பட்ஜெட் கார்கள் இதோ!
Top 5 budget cars : ரூ.5 லட்சத்துக்குள் கார் வாங்கணுமா? சூப்பர் மைலேஜ் தரும் டாப் 5 பட்ஜெட் கார்கள் இதோ!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Scorpio Lifestyler First Look: மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Embed widget