மேலும் அறிய

CM Stalin: தஞ்சையில் மரம் விழுந்து 10ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு... ரூ. 5 லட்சம் இழப்பீடு அறிவித்த முதலமைச்சர்..!

தஞ்சாவூர் மாவட்டத்தில் மரம் விழுந்து உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் அளிக்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

CM Stalin: தஞ்சாவூர் மாவட்டத்தில் மரம் விழுந்து உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் அளிக்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சிறுமி உயிரிழப்பு:

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதோடு, ஆங்காங்கே மரங்கள் முறிந்தன. இதற்கிடையில், அய்யம்பேட்டை அருகே கண்டக்கரயம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் குமார். இவருடைய மனைவி பத்மா. இவர்களுக்கு 15 வயதான சுஷ்மிதா என்ற மகள் உள்ளார்.

அதே பகுதியைச் சேர்ந்த கந்தனின் மகள் ராஜேஸ்வரி (15). இவர்கள் இருவரும் அய்யம்பேட்டை பகுதியில் உள்ள புனித கபிரியேல் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலையப்பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தனர். இந்நிலையில், நேற்று மாலை சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. அப்போது, பள்ளி முடிந்ததால் இருவரும் வீட்டிற்கு செல்ல பள்ளி வகுப்பறையில் இருந்து வெளியே வந்தனர். 

அந்த சமயத்தில் பள்ளி வாளகத்தில் இருந்த மரம் ஒன்று திடீரென வேரோடு சாய்ந்து சுஷ்மிதாசென், ராஜேஸ்வரி ஆகியோர் மீது விழுந்தது. இதில் இரண்டு மாணவிகளுக்கு மரத்தின் இடுபாடுகளில் சிக்கிக் கொண்டனர். உடனே இதனை அறிந்த பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் ஆசிரியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இரண்டு பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களை மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் சுஷ்மிதாசென் என்ற மாணவி ஏற்கனவே இறந்துவிட்டதாக  மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும், படுகாயம் அடைந்த ராஜேஸ்வரியை மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், மரம் விழுந்து உயிரிழந்த மாணவி சுஷ்மிதாசென்னின் குடும்பத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

நிவாரணம் அறிவிப்பு:

​இதுகுறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், "தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், பசுபதிகோவில்-1 கிராமத்தில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயின்று வரும் மாணவிகள் பாபநாசம் வட்டம், உள்ளிக்கடை, கண்டகரையத்தைச் சார்ந்த சுஷ்மிதாசென், த/பெ.செந்தில்குமார் (வயது-15) மற்றும் பாபநாசத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி, த/பெ.கந்தன் (வயது-15) ஆகிய இருவர் மீதும் நேற்று (29-8-2023) மாலை பெய்த மழை மற்றும் காற்றின் காரணமாக பள்ளியின் அருகிலுள்ள மரம் வேறோடு சாய்து விழுந்ததில் செல்வி.சுஷ்மிதாசென் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன்.

​மேலும் இவ்விபத்தில் படுகாயமடைந்து தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள செல்வி.இராஜேஸ்வரிக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன். மாணவி செல்வி.சுஷ்மிதாஷென்னை இழந்து வாடும் பெற்றோருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு ஐந்து இலட்சம் ரூபாயும், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ராஜேஸ்வரிக்கு ஒரு இலட்சம் ரூபாயும் நிதியதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

டெல்டாவை கலங்கடிக்கும் கனமழை! விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50,000: தமிழக அரசுக்கு புது சிக்கல்! 
டெல்டாவை கலங்கடிக்கும் கனமழை! விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50,000: தமிழக அரசுக்கு புது சிக்கல்! 
Annamalai:
"பாஜகவுக்கு பயமில்ல.. திராவிட சித்தாந்தத்தையே பேசும் விஜய்" ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!
எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுகளை நான் மதிப்பது இல்லை: முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி
எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுகளை நான் மதிப்பது இல்லை: முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி
TN Rain: விழுப்புரம் மக்களுக்கு ஆறுதல் செய்தி.! வலுவிழந்த புயல்:அடுத்து எங்கு கனமழை?
TN Rain: விழுப்புரம் மக்களுக்கு ஆறுதல் செய்தி.! வலுவிழந்த புயல்:அடுத்து எங்கு கனமழை?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MK Stalin : ’’தூங்கி வழிந்த அதிமுக அரசு தூக்கம் தொலைத்த சென்னை’’விளாசும் ஸ்டாலின்Arvind Kejriwal Attack : கெஜ்ரிவால் மீது மர்ம திரவம் வீச்சு அதிர்ச்சி வீடியோ! பின்னணியில் பாஜகவா?Aadhav Arjuna : ”விஜய் வருவது உறுதி..”அடம்பிடிக்கும் ஆதவ் அர்ஜூனா?தலைவலியில் திருமா..கடுப்பில் திமுகPawan Kalyan Controversy : CM Vs DEPUTY CM ”துறைமுகமா? கடத்தல் கூடாரமா?” பவன் கல்யாண் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
டெல்டாவை கலங்கடிக்கும் கனமழை! விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50,000: தமிழக அரசுக்கு புது சிக்கல்! 
டெல்டாவை கலங்கடிக்கும் கனமழை! விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50,000: தமிழக அரசுக்கு புது சிக்கல்! 
Annamalai:
"பாஜகவுக்கு பயமில்ல.. திராவிட சித்தாந்தத்தையே பேசும் விஜய்" ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!
எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுகளை நான் மதிப்பது இல்லை: முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி
எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுகளை நான் மதிப்பது இல்லை: முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி
TN Rain: விழுப்புரம் மக்களுக்கு ஆறுதல் செய்தி.! வலுவிழந்த புயல்:அடுத்து எங்கு கனமழை?
TN Rain: விழுப்புரம் மக்களுக்கு ஆறுதல் செய்தி.! வலுவிழந்த புயல்:அடுத்து எங்கு கனமழை?
Sekar Babu : ”முதல்வரை பற்றி பேச அருகதை இல்லை” ஜெயக்குமாரை விளாசிய சேகர்பாபு
Sekar Babu : ”முதல்வரை பற்றி பேச அருகதை இல்லை” ஜெயக்குமாரை விளாசிய சேகர்பாபு
களத்தில் இந்திய ராணுவம்.. புதுச்சேரியில் 2 மணி நேரத்தில் 100 பேர் மீட்பு!
சென்னை டூ புதுச்சேரி.. 2 மணி நேரத்தில் களத்திற்கு சென்ற ராணுவம்.. புயலால் பாதிக்கப்பட்ட 100 பேர் மீட்பு
Sabarimalai :  சபரிமலை செல்வோர் கவனத்திற்கு..  கனமழை எச்சரிக்கை! உஷார் நிலையில் பேரிடர் குழுவினர்
Sabarimalai : சபரிமலை செல்வோர் கவனத்திற்கு.. கனமழை எச்சரிக்கை! உஷார் நிலையில் பேரிடர் குழுவினர்
Puducherry Leave:புதுச்சேரியில் பள்ளி - கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.! அங்கு நிலைமை எப்படி?
Puducherry Leave:புதுச்சேரியில் பள்ளி - கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.! அங்கு நிலைமை எப்படி?
Embed widget