முதலமைச்சர் ஸ்டாலினுக்கு காய்ச்சல்: 2 நாட்கள் அரசு நிகழ்ச்சிகள் ரத்து - தமிழக அரசு அறிவிப்பு
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு காய்ச்சல் காரணமாக 2 நாட்கள் அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அரசு நிகழ்ச்சிகள் ரத்து:
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு லேசான காய்ச்சல் காரணமாக, அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் முதலமைச்சர் பங்கேற்கவிருந்த அரசு நிகழ்ச்சிகள், 2 நாட்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நிகழ்ச்சிகள்:
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நாளை ராணிப்பேட்டை மாவட்டத்தில், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்க இருந்தார். மேலும், நாளை மறுநாள் வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் நடைபெற கூடிய அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்களிலும் கலந்து கொள்ள திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் முதலமைச்சருக்கு லேசான காய்ச்சல் இருப்பதால், இரண்டு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அரசு செய்தி வெளியிட்டுள்ளது.
CM MK Stalin postpones his programmes for today & next two days as he is suffering from mild fever; He was scheduled to attend many programmes today and next 2 days in Chennai, #Ranipet, #Vellore & #Thirupathur districts. #MKStalin #TamilNadu #TNGovt #Chennai #Subash pic.twitter.com/sIAJUheRow
— Sudharsan (@SudharsanSubash) June 19, 2022
மருத்துவர்கள் அறிவுரை:
இந்த சூழ்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் ஓய்வு எடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளார்கள். எனவே முதலமைச்சர் ஓய்வு எடுப்பதன் காராணமாக, அவர் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, இந்நிகழ்ச்சிக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அரசு செய்தி வெளியிட்டுள்ளது.
Also Read: ரேசன் கடை ஊழியர்களுக்கு 28% ஆக அகவிலைப்படி உயர்வு: முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவு
M K STALIN SUFFERS FROM SLIGHT FEVER, CANCELS ALL GOVT PROGRAMMES ON MONDAY & TUESDAY ON DOCTORS ADVICE@ndtv
— J Sam Daniel Stalin (@jsamdaniel) June 19, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்