(Source: ECI/ABP News/ABP Majha)
"முதல்வர் தான் காப்பாற்ற வேண்டும்" - ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் அண்ணன் தனபால் கதறல்
கொடநாடு வழக்கு குறித்து பின்னர் பேசுவதாகவும் தனபால் தெரிவித்துள்ளார்.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநராக இருந்தவர் கனகராஜ். இவர் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். கனகராஜ் கைது செய்யப்படுவதற்கு முன்பாக சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற சாலை விபத்தில் உயிரிழந்தார். இந்த வழக்கில் சில ஆவணங்களை அழித்ததாக கனகராஜின் அண்ணன் தனபாலன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமினில் வெளியே வந்த தனபால், கடந்த வாரம் நில மோசடி வழக்கில் ஒன்றில் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே சில நாட்களுக்கு முன் தனபாலுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை முடிந்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் சேலம் மத்திய சிறையில் நேற்று காலை உடல்நல பாதிப்பு ஏற்பட்டதால், இரண்டாவது முறையாக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் உயர் சிகிச்சைக்காக கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு தனபால், காவல்துறை பாதுகாப்புடன் ஆம்புலன்ஸ் மூலமாக நேற்று இரவு அழைத்து செல்லப்பட்டார். இதனிடையில் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் இருந்து காவல்துறையினர் அழைத்துச் செல்லும்போது கதறிய தனபால், தனது இரண்டு மகள்களை முதல்வர் தான் காப்பாற்ற வேண்டும் என்றும், மேச்சேரி காவல் ஆய்வாளர் வில்லிங் லெட்டர் கொடுக்கவில்லை காப்பாற்றுங்கள் முதலமைச்சர் என்று கதறி அழுத்தது பரபரப்பு ஏற்படுத்தியது. பின்னர் காவல்துறையினர் தனபாலை அழைத்துச் சென்று ஆம்புலன்ஸில் ஏற்றினர். கொடநாடு வழக்கு குறித்து பின்னர் பேசுவதாகவும் தனபால் தெரிவித்துள்ளார்.