CM stalin Visits Kauvery Hospital | காவேரி மருத்துவமனைக்கு சென்று ரஜினிகாந்த் உடல்நலம் விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின்
காவேரி மருத்துவமனைக்குச் சென்ற முதல்வர் மு.க ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் விசாரித்து அறிந்துகொண்டார்.
இன்று காலை காவேரி மருத்துவமனைக்குச் சென்ற முதல்வர் மு.க ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் விசாரித்து அறிந்துகொண்டார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு முழு உடல் பரிசோதனை மற்றும் உறுப்புகள் செயல்பாடுகள் குறித்து பரிசோதனை செய்யப்பட்டது. இந்தப் பரிசோதனையின் முடிவில் அவருக்கு ரத்த நாள திசு அழிவு பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, ரஜினிக்கு நரம்பியல் மற்றும் இருதய நல மருத்துவர்கள் சிகிச்சை அளித்துவருவதாக தகவல் வெளியானது. ஏற்கனவே சிறுநீரக மாற்று சிகிச்சை செய்துள்ள நிலையில் மருத்துவர்கள் தொடர்ந்து அவரை தொடர்ந்து கண்காணித்தனர். இதற்கிடையே, ரெகுலர் மாஸ்டர் செக்கப்பிற்காகவே காவிரி மருத்துவமனைக்கு ரஜினி வந்திருக்கிறார் என ABP நாடு செய்தி நிறுவனத்திற்கு அவரது மனைவி லதா ரஜினிகாந்த் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்திருந்தார்.
ரஜினியின் உடல்நிலை குறித்து விளக்கமளித்துள்ள மருத்துவமனை, “நடிகர் ரஜினிகாந்த் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்துவந்தனர். அவர் தற்போது நலமுடன் இருக்கிறார். மருத்துவமனையிலிருந்து இன்னும் சில நாள்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்” என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் ரஜினிக்கு அவருக்கு carotid artery revascularisation செய்யப்பட்டிருப்பதாக மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டது.
கரோடிட் ஆர்டரி ரிவாஸ்குலரைசேஷன் என்பது ஒரு கரோடிட் தமனியின் உட்புறத்தில் இருந்து பிளேக்கை அகற்றும் ஒரு அறுவை சிகிச்சை ஆகும். இது தலை மற்றும் கழுத்துக்கு ஆக்ஸிஜனேற்றப்பட்ட இரத்தத்தை வழங்குகிறது. தமனிகளில் கொழுப்புப் பொருட்கள் சேர்ந்தால் இந்த அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. எளிதாக புரிந்துகொள்ள வேண்டுமென்றால், கழுத்துக்கும் மூளைக்கும் செல்லும் ரத்த ஓட்டத்தை சீராக்கும் முறை ஆகும்.
மேலும் படிக்க:
Vairamuthu Wishes Rajini Wellness | "படையப்பா எழுந்து வா.. பாட்ஷாபோல் நடந்து வா.." ரஜினியை வாழ்த்திய வைரமுத்து#Vairamuthu #Rajinikanthhttps://t.co/VvbKgmh2cu
— ABP Nadu (@abpnadu) October 31, 2021
https://t.co/hcSUuH0tNB
— ABP Nadu (@abpnadu) October 31, 2021
NREGA Demand: நிதி நெருக்கடியில் #ஊரக #வேலைவாய்ப்பு திட்டம் - ஊதியம் பெறாமல் மக்கள் தவிப்பு..#MGNREGA #employment #TamilNadu
Quotes By Puneeth Rajkumar | ”காலம் உங்களுக்காக எப்போதும் காத்திருக்காது” : இதனால்தான் புனீத் ராஜ்குமாரை கொண்டாடுகிறார்கள்#Reshare #PuneethRajkumarhttps://t.co/EgerH6tH9I
— ABP Nadu (@abpnadu) October 31, 2021