CM MK Stalin Meeting: சென்னைக்கு செக் வைக்கும் மிக்ஜாம் புயல்! அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
மழை பாதிப்புகள் மற்றும் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
மழை பாதிப்புகள் மற்றும் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். நேற்று முன்தினம் பெய்த கனமழை மற்றும் நாளை மற்றும் நாளை மறுதினம் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை தொடர்பான நடவடிக்கைகள் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மேற்கொண்டுள்ளார்.
ஆலோசனையில் வருவாய் துறை, நகராட்சி நிர்வாகத்துறை, சென்னை மாநகராட்சி மற்றும் காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.
வங்க கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது இன்று காலை 5 மணி அளவில் சென்னைக்கு தென்கிழக்கு சுமார் 800 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது இது தொடர்ந்து மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் பின்னர் 3 தேதி வாக்கில் புயலாக வலுப்பெறக்கூடும் அதன் பின்னர் வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டி உள்ள வட தமிழக கடலோர பகுதிகள் சென்னைக்கும் மசூலிபட்டினத்திற்கும் இடையே 4 தேதி மாலை புயலாக கரையை கடக்க கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்ந்து மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, 2-ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், டிசம்பர் 3-ஆம் தேதி தென்மேற்கு வங்கக்கடலில் ஒரு சூறாவளி புயலாகவும் மாறும். அதன்பிறகு, இது வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் அதை ஒட்டிய வட தமிழகக் கடற்கரையை சென்னைக்கும் மச்சிலிப்பட்டினத்திற்கும் இடையே டிசம்பர் 4 ஆம் தேதி மாலையில் சூறாவளி புயலாகக் கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை ஒட்டி புயல் கரையை கடக்கும் என கூறப்படும் நிலையில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மழை நீர் தேங்குவது, கடலோர பகுதிகளில் இருக்கும் மக்களை முகாம்களுக்கு மாற்றுவது, அவசர எண்கள் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதே போல் நேற்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கட்டுப்பாட்டு அறைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். ரிப்பன் மாளிகையில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், மேயர் பிரியா, அமைச்சர் சேகர்பாபு ஆகியோரிடம் நிலைமையை கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டனர்.