மேலும் அறிய

திறந்து 1 ஆண்டுகளே ஆன நிலையில் விரிசல்! சிதம்பரம் அருகே தேசிய நெடுஞ்சாலைப் பாலம் மூடல்,,,வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

சிதம்பரம் அருகே உள்ள எருக்கன்காட்டுபடுகை மேம்பாலத்தில் திடீர் விரிசல் ஏற்பட்டுள்ளதால், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

மக்கள் பயன்பாட்டிற்கு வந்து இரண்டே ஆண்டுகளே ஆன நிலையில், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் திடீரென விரிசல் ஏற்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பொதுமக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில், சிதம்பரம் அருகே உள்ள எருக்கன்காட்டுபடுகை மேம்பாலத்தில் திடீர் விரிசல் ஏற்பட்டுள்ளதால், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

பாலத்தில் விரிசல்: என்ன நடந்தது?

சிதம்பரம் வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே எருக்கன்காட்டுபடுகை மேம்பாலம் அமைந்துள்ளது. இந்த மேம்பாலத்தின் மேற்பரப்பை மேம்படுத்தும் நோக்கில், பழைய சாலைப் பகுதிகளை அகற்றிவிட்டு புதிய சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்தப் பணிகளின்போது பாலத்தின் கட்டுமானத்தில் திடீரென விரிசல் ஏற்பட்டது. இதன் விளைவாக, பாலத்தின் ஓரப்பகுதியில் இருந்த மணல் சரிந்துள்ளதால் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

தற்காலிக போக்குவரத்து மாற்றம்

விபத்துகளைத் தவிர்க்கும் நோக்கில், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி பாதுகாப்பு கருதி, மேம்பாலத்தின் மீது வாகனங்கள் செல்வதற்குத் தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேம்பாலத்தைப் பயன்படுத்த வேண்டிய அனைத்து வாகனங்களும், அதன் கீழே அமைக்கப்பட்டுள்ள சர்வீஸ் சாலை வழியாகச் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.

விரைந்து வரும் சீரமைப்புப் பணிகள்

பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசலைத் தொடர்ந்து, நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். பாலத்தின் வலிமையை உறுதி செய்யும் வகையில் சீரமைப்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. பாலம் முழுமையாகப் பாதுகாப்பானது என்று உறுதி செய்யப்பட்ட பின்னரே, மீண்டும் போக்குவரத்து அனுமதிக்கப்படும் எனத் துறை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை

மேம்பாலப் பகுதிக்கு அருகில் தற்போது போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடனும், போக்குவரத்துத் துறையின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றியும் பயணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். தற்காலிக போக்குவரத்து மாற்றத்தால் சர்வீஸ் சாலையில் நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதால், வாகன ஓட்டிகள் கூடுதல் கவனத்துடன் செல்லவும், கூடுதல் பயண நேரத்தைக் கணக்கில் கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

சென்னை ரயில் பயணிகளுக்கு மெகா ஜாக்பாட்! ரூ.2100 கோடி செலவில் வரப்போகும் 4 மாஸ் மாற்றங்கள்!
Chennai Rail Expansion: சென்னை ரயில் பயணிகளுக்கு மெகா ஜாக்பாட்! ரூ.2100 கோடி செலவில் வரப்போகும் 4 மாஸ் மாற்றங்கள்!
ஆஜராகாத அதிகாரி... கடுப்பான தகவல் ஆணையம்! மனுதாரருக்கு இழப்பீடு கொடுக்க அதிரடி உத்தரவு!
ஆஜராகாத அதிகாரி... கடுப்பான தகவல் ஆணையம்! மனுதாரருக்கு இழப்பீடு கொடுக்க அதிரடி உத்தரவு!
ரூ. 45,000 தள்ளுபடி! சாம்சங் S25 எட்ஜ் வாங்க இதுதான் சரியான நேரம் – ஃபிளிப்கார்ட் மாஸ் ஆபரா?
ரூ. 45,000 தள்ளுபடி! சாம்சங் S25 எட்ஜ் வாங்க இதுதான் சரியான நேரம் – ஃபிளிப்கார்ட் மாஸ் ஆபரா?
டிகிரி முடிச்சிருக்கீங்களா? இலவசமாகவே அரசு வேலை வாங்க செம்ம வாய்ப்பு - காஞ்சிபுரம் ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!
டிகிரி முடிச்சிருக்கீங்களா? இலவசமாகவே அரசு வேலை வாங்க செம்ம வாய்ப்பு - அதிரடி அறிவிப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget