Chess Olympiad 2022: செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பட்டு வேட்டி சட்டையுடன் வந்த முதலமைச்சர் ஸ்டாலின்
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா இன்று நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா இன்று நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று தொடங்கி வைக்க உள்ளார். இந்நிலையில் இந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பட்டு வேட்டி சட்டையுடன் பங்கேற்றுள்ளார்.
இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அணிந்துள்ள பாரம்பரிய உடை தொடர்பான படங்கள் இணையத்தில் வேகமாக வைரலாகி வருகின்றன.
#JUSTIN | செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா: பட்டு வேட்டி சட்டையில் அசத்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின்https://t.co/wupaoCQKa2 | #chessolympiad #ChessOlympiad #ChessChennai2022 #ChennaiChessOlympiad #ChessOlympiad2022 #ChessOlympiad #chessolympiad #openingceremony #MKStalin pic.twitter.com/MLAJRx2Ipx
— ABP Nadu (@abpnadu) July 28, 2022
முன்னதாக இந்த பிரம்மாண்ட கலைநிகழ்ச்சியில் 900க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர். அவர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 4 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
செஸ் ஒலிம்பியாட்டி இந்திய அணி:
சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா சார்பில் 5 அணிகள் பங்கேற்க உள்ளன. ஆடவர் பிரிவில் 3 அணிகளும் மகளிர் பிரிவில் 2 அணிகளும் இடம்பெற்றுள்ளன.
ஆடவர் அணி:
டீம் ஏ: விதித் குஜராத்தி, ஹரிகிருஷ்ணா, அர்ஜூன் எரிகியாசி, நாராயணன், சசிகிரண்.
டீம் பி: அதிபன், பிரக்ஞானந்தா,நிஹல் சரின், குகேஷ்,ரௌனக் சத்வானி
டீம் சி: சூர்ய சேகர் கங்குலி, கார்த்திகேயன் முரளி, சேதுராமன், அபிஜித் குப்தா
மகளிர் அணி:
டீம் ஏ: கோனேரு ஹம்பி, ஹரிகா திரோனாவள்ளி, ஆர் வைஷாலி, தானியா சச்தேவ், பக்தி குல்கர்னி
டீம் பி: வந்திகா அகர்வால், சௌமியா சாமிநாதன், மேரி கோம்ஸ், பத்மினி ரௌத், திவ்யா தேஷ்முக்
செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறும் முறை?
செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் கிளாசிக்கல் முறையில் போட்டிகள் நடைபெறும். இந்த முறையில் முதல் 40 நகர்த்தல்களை 90 நிமிடங்களுக்குள் முடிக்க வேண்டும். அதன்பின்னர் கூடுதலாக 30 நிமிடங்கள் வழங்கப்படும். இந்தப் போட்டியில் எப்போது வேண்டுமென்றாலும் வீரர்கள் டிரா செய்யலாம். மொத்தம் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் 12 சுற்று போட்டிகள் நடைபெற உள்ளன. போட்டிகள் அனைத்தும் தினமும் பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகின்றன.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்