மேலும் அறிய

TN Rain Alert: சில்லென்ற வானிலை.. காலையிலேயே சென்னையை குளிர்வித்த மழை.. எந்தெந்த பகுதிகளில்?

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் திருவள்ளூர், நாகை, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 40-41 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் வெப்பசலனம் காரணமாக நேற்று மாலை முதல் சென்னையில் அவ்வப்போது பலத்த காற்றுடன் ஓரிரு இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. நேற்று தமிழ்நாட்டில் சென்னையில் அதிகபட்சமாக 42 டிகிரி செல்சியஸ் கடந்து வெப்பநிலை பதிவானது. காலை நேரங்களில் வெயில் சுட்டெரிக்க, மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. ஆயிரம் விளக்கு, தேனாம்பேட்டை, நந்தனம், சைதாப்பேட்டை, கிண்டி, மடிப்பாக்கம், ஆலந்துர், மீனம்பாக்கம், மேடவாக்கம், அடையாறு, ராஜா அண்ணாமலைபுரம், எம்.ஆர்.சி நகர், காமராஜர் சாலை, ராஜாஜி சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நல்ல மழை பதிவானது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அடுத்த 3 மணி நேரத்திற்கு நகரின் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வழக்கமாக மே மாதம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு மேற்கு திசை காற்றின் மாறுபாட்டின் காரணமாக பல மாவட்டங்களில் மழை பதிவானது. குறிப்பாக நீலகிரி, கோவை, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட இடங்களில் மழை பதிவானது. மே மாதம் முடிந்து வெயில் சற்று தணியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜூன் மாதம் தொடங்கியது முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளில் இல்லாத வகையில் ஜூன் மாதத்தில் இரண்டாவது முறையாக 42 டிகிரி செல்சியஸ் கடந்து வெப்பநிலை பதிவானது. இதன் காரணமாக மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். ஆனால் கடந்த இரண்டு நாளாக மழை பெய்து வருகிறது. மேலும் இன்று காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. 

அதிகபட்ச வெப்பநிலை : 

06.06.2023 மற்றும் 07.06.2023: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்; ஒருசில இடங்களில் இயல்பிலிருந்து 2 – 4  டிகிரி செல்சியஸ்  அதிகமாக இருக்கக்கூடும். 

அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது  வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம்.
வெப்பஅலை எச்சரிக்கை: தமிழக உட்பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை நிலவக்கூடும்.

தலைப்பு செய்திகள்

CM Vijay Amit Shah: ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
மேகதாது விவகாரம் ; மாணிக்கம் தாகூரை சாடிய அன்புமணி ராமதாஸ் !!
மேகதாது விவகாரம் ; மாணிக்கம் தாகூரை சாடிய அன்புமணி ராமதாஸ் !!
காரைக்குடி ITI: புதிய படிப்புகள், மாதம் ரூ.25,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு; சேர்க்கை வாய்ப்பு!
காரைக்குடி ITI: புதிய படிப்புகள், மாதம் ரூ.25,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு; சேர்க்கை வாய்ப்பு!
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் நாளை ( 20.08.26 ) மின்தடை - உங்கள் பகுதி உள்ளதா ?
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் நாளை ( 20.08.26 ) மின்தடை - உங்கள் பகுதி உள்ளதா ?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Amit Shah: ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Skoda Comeback Cars: ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Embed widget