இனி ட்ராபிக் இல்லை.. சென்னை அண்ணாசாலைக்கு வருகிறது புதிய திட்டம்.. அமைச்சர் அறிவிப்பு
அதிமுகவை நாங்கள் பகைவராக நினைக்கவில்லை என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு சட்டப்பேரவையில் பேசினார்.
சென்னையில் உயர்மட்ட சாலை அமைக்கப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு பல அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், “சென்னை தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை வரை ரூ.485 கோடியில் உயர்மட்ட சாலை அமைக்கப்படும். அண்ணாசாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் உயர்மட்ட சாலை அமைக்கப்படும். குன்றத்தூர் சாலை சந்திப்பில் ரூ.322 கோடியில் மேம்பாலம் அமைக்கப்படும். பாடி மேம்பாலம் அருகே ரயில்வே மேம்பாலம் ரூ.100 கோடி மதிப்பில் அகலப்படுத்தப்படும். தாம்பரம் சண்முகம் சாலை அருகே ரூ.10 கோடி மதிப்பில் இணைப்பு சாலை அமைக்கப்படும்” என்று கூறினார்.
#BREAKING | தேனாம்பேட்டை-சைதாப்பேட்டை வரை உயர்மட்டசாலை அமைக்கப்படும் - அமைச்சர் எ.வ.வேலுhttps://t.co/wupaoCQKa2 | #TNAssembly #TNGovt #teynampet #saidapet pic.twitter.com/3WWiffXl1z
— ABP Nadu (@abpnadu) April 12, 2022
🔴TN Assembly Live |சட்டப்பேரவையில் நெடுஞ்சாலைத்துறை மானிய கோரிக்கை விவாதம்..அனல் பறக்கும் விவாதம் https://t.co/6dzWiVbfAQ
— ABP Nadu (@abpnadu) April 12, 2022
மேலும், “சென்னை சைதாப்பேட்டை தாடண்டர் நகரில் அரசு ஊழியர்கள் குடியிருப்பு கட்டப்படும். கிண்டியில் பல்நோக்கு மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. உதகமண்டலம் நகருக்கு மாற்று பாதை ரூ.70 கோடி மதிப்பில் அமைக்கப்படும். சென்னை அரசினர் தோட்டத்தில் உள்ள ராஜாஜி ஹால் ரூ.16 கோடியில் புனரமைக்கப்படும். கலங்கரை விளக்கம் முதல் கிண்டி வரை உயர்மட்ட சாலை அமைக்க ரூ.45 கோடி மதிப்பில் திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். குன்றத்தூர் சாலை சந்திப்பில் ரூ.322 கோடி மதிப்பில் மேம்பாலம் அமைக்கப்படும். கொடைக்கானல் மலைப்பகுதியில் வாகன நெரிசலை குறைக்க தேவையான இடங்களில் வாகன நிறுத்தங்கள் அமைக்க ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். பொதுப்பணித்துறையில் 308 உதவிப் பொறியாளர் பணியிடங்கள் நிரப்பப்படும்” என்று கூறினார்.
முன்னதாக, அதிமுகவை நாங்கள் பகைவராக நினைக்கவில்லை என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு சட்டப்பேரவையில் பேசினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்