Watch Video | நடு இரவு..! கொட்டும் மழை! நிற்காத பணி! நெகிழ வைக்கும் சென்னையின் தூய்மை பணியாளர்கள்!
சென்னை விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்து வரும் நிலையில், தூய்மை பணியாளர்கள பணி ஓய்வு எடுத்துக் கொள்ளாமல் வழக்கம் போல் பணியாற்றி வருகின்றனர்.
இன்று அதிகாலை 3 மணியளவில் சென்னையின் முக்கியப் பகுதியான அண்ணா சாலையில் உள்ள தூய்மை பணியாளர்களிடம் ஏபிபி நாடு செய்தி நிறுவனம் நேர்காணல் மேற்கொண்டது.
கனமழை நேரத்தில் வீட்டில் ஓய்வு எடுத்துக் கொல்லாலமே, பணிக்கு வரச் சொல்லி ஏதேனும் அழுத்தம் தரப்படுகிறதா என்ற கேள்விக்குப் பதிலளித்த தூய்மைப் பணியாளார் ஒருவர், " அழுத்தம் தரப்படுவதில்லை. மழைநீர் வடிகால் சீராக இயங்க சாலையில் உள்ள டி-கப் போன்ற குப்பைகளை அகற்றி வருகிறோம். பாதுகாப்புக் கவச உடைகளை அணிந்திருப்பதால் எங்களுக்கு பயமில்லை. அதிக கனமழை பெய்தால் சற்று நேரம் ஒதுங்கிக் கொள்வோம். நாங்கள் இறங்கி பணி செய்தால் சாலைகள் சுத்தமாக இருக்கும்" என்று தெரிவித்தார்.
மழை அடித்தாலோ, அச்சுறுத்தும் வகையில் காற்று வீசினாலோ, பயம் கொடுக்கும் இடி இடித்தாலோ பாதுக்காப்பான இடங்களுக்கு சென்று விடுவோம் என்று மற்றொரு பெண் தூய்மை பணியாளர் தெரிவித்தார்.
இவர்களின் பொறுப்பாளார் பேசுகையில், " சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்புக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளது. அச்சுருத்தும் வகையில் மழை பொழிவு இருந்தால் யாரும் பணி செய்யத் தேவையில்லை என்று கண்டிப்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, வழக்கமான துப்புரவுப் பணிகள் நடைபெறவில்லை.நீரில் தென்படும் குப்பைகளை (Litter Waste)கையால் எடுக்கின்றனர். அதற்குத் தேவையான கையுறைகளும் வழங்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
சென்னை அண்ணா சாலை மண்டல அதிகாரி இது குறித்து கூறுகையில், " பணியாளர்களின் நலன்களில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறோம். தீவிர மழை பெய்து காரணத்தினால், விடுப்பு கேட்கும் பணியாளர்களுக்கு உடனடியாக ஒப்புதல் வழங்கப்படுகிறது. சாலையில் மழைநீர் தேங்காதவாறு கவனம் செலுத்தி வருகிறோம்" என்று தெரிவித்தார்.
தூய்மை பணிக்கு ஒப்பந்ததாரர் மூலமாக சென்னை மாநகராட்சி பணியாளர்களை ஈடுபடுத்தி வருகிறது. சென்னை மாநகராட்சியில் மட்டும் 1000க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளார்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.இதில், பாதிக்கும் மேற்பட்டோர் தினக்கூலிக்கு பணிபுரிபவர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்