மேலும் அறிய

Vande Bharat: விரைவில் சென்னை-ராமேஸ்வரம் வந்தே பாரத் ரயில்! 7 மணி நேரத்தில் பயணம், கட்டணம் எவ்வளவு? முழு விபரம் இதோ!

தமிழக எம்பிக்களும் ரயில்வே அமைச்சகத்திடம் கோரிக்கை வைத்த நிலையில் புதிய வந்தே பாரத் இயக்கத்துக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. 

 சென்னை எழும்பூர் மற்றும் ராமேஸ்வரம் இடையே புதிய வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி துவக்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

ராமேஸ்வரம் ரயில்கள்: 

பாம்பன் புதிய பாலம் திறப்புக்கு பின்னர் மண்டபம் வரை இயக்கப்பட்ட ரயில்கள் அனைத்தும் தற்போது ராமேஸ்வரம் வரை இயக்கப்படுகிறது. அதில் ராமேஸ்வரம்-மதுரை பயணிகள் ரயில், ராமேஸ்வரம் திருச்சி பயணிகள் ரயில், ராமேஸ்வரம் புவனேஷ்வர் எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம்-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில்கள், ராமேஸ்வரம்-திருப்பதி எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம் அயோத்தியா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட அனைத்து ரயில்களும் அங்கு இருந்து புறப்படுகின்றன. 

இதுமட்டுமில்லாமல் தாம்பரம்-ராமேஸ்வரம் இடையே பாம்பன் எக்ஸ்பிரஸ் என்கிற புதிய ரயில் சேவையும் துவக்கி வைக்கப்பட்டது, ராமேஸ்வரத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவதாலும்  ராமேஸ்வரம் வழித்தடத்தில் மின்மயமாக்கல் பணிகள்  முடியும் தருவாயில் உள்ளதால்  பகல் நேரத்தில் வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது.

மேலும்  தற்போது இந்த பாதை மின்மயமாக்கப்பட்டுள்ளது, இதனால் தற்போது மின்சார இன்ஜினில் ரயில்கள் இயக்கப்படுகிறது. இதனால் இந்த வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட நாட்களாக உள்ளது

புதிய வந்தே பாரத்:

தமிழக எம்பிக்களும் ரயில்வே அமைச்சகத்திடம் கோரிக்கை வைத்த நிலையில் புதிய வந்தே பாரத் இயக்கத்துக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னை-ராமேஸ்வரம் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் 600 கி.மீ தூரத்தை 7 மணி நேரம் 45 நிமிடங்களுக்குள்  செல்லும். தற்போது சேது சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் இந்த தூரத்தை 10 மணி நேரம் 25 நிமிடங்கள் எடுத்துக்கொள்கிறது.

நிறுத்தங்கள் விவரம்:

சென்னை-ராமேஸ்வரம் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் முக்கிய நிலையங்களில் நின்று செல்லும், மேலும் இந்த ரயில் கார்டு லைனான சென்னை-விழுப்புரம்-அரியலூர்-திருச்சி வழித்தடத்தில் செல்லும். இந்த ரயிலுக்கான நிறுத்தங்கள் பின்வருமாறு: 

  • தாம்பரம்
  • செங்கல்பட்டு சந்திப்பு
  • விழுப்புரம் சந்திப்பு
  • விருத்தாசலம் சந்திப்பு
  • திருச்சிராப்பள்ளி
  • புதுக்கோட்டை
  • காரைக்குடி
  • சிவகங்கை
  • மானாமதுரை சந்திப்பு
  • ராமநாதபுரம்

புறப்படும் நேரம்:

சென்னையிலிருந்து ராமேஸ்வரம் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சென்னையில் இருந்து அதிகாலை 5:30 மணிக்குப் புறப்பட்டு பிற்பகல் 01:15 மணிக்கு ராமேஸ்வரத்தை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திரும்பும் பயணத்தில், ராமேஸ்வரத்தில் பிற்பகல் 2:30 மணிக்குப் புறப்பட்டு இரவு 22:20 மணிக்கு சென்னையை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ரயிலானது வாரத்தில் 6 நாட்கள் இயங்கும் என்றும் கூறப்படுகிறது. 

சென்னை எழும்பூர் – ராமேஸ்வரம் இடையேயான இந்தப் பயணம் சுமார் 7 மணி 45 நிமிடங்களில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகாரப்பூர்வ தகவல்: இது தற்போது உத்தேசமாகப் பரவும் தகவல் மட்டுமே. மேலும் தெற்கு ரயில்வே அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் போது இந்த அட்டவணையில் மாற்றங்கள் இருக்க வாய்ப்புள்ளது.

9வது வந்தே பாரத் ரயில்:

இந்த ரயில் பயன்பாட்டுக்கு வந்தால் தமிழ்நாட்டின் ஒன்பதாவது வந்தே பாரத் ரயிலாக இது இருக்கும்.தற்போது தமிழ்நாட்டில் ஓடும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் விவரம் பின்வருமாறு:

  • எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - மைசூரு: ரயில் எண்கள் 20607/08.
  • கோயம்புத்தூர் - பெங்களூரு: ரயில் எண்கள் 20641/42.
  • எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - கோயம்புத்தூர்: ரயில் எண்கள் 20643/44.
  • மைசூரு - எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல்: ரயில் எண்கள் 20663/64.
  • திருநெல்வேலி - எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல்: ரயில் எண்கள் 20665/66.
  • எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - விஜயவாடா: ரயில் எண்கள் 20677/78.
  • சென்னை எழும்பூர் முதல் நாகர்கோவில்: ரயில் எண்கள் 20627/28.
  • மதுரை - பெங்களூரு கண்டோன்மென்ட்: ரயில் எண்கள் 20671/72. 

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
சுதந்திர தினத்தன்று (ஆகஸ்ட் 15) தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழை பெய்யும்? - வானிலை வெளியிட்ட லிஸ்ட்
சுதந்திர தினத்தன்று (ஆகஸ்ட் 15) தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழை பெய்யும்? - வானிலை வெளியிட்ட லிஸ்ட்
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
Brezza vs Venue EMI Comparison: மாருதி பிரெஸ்ஸா - ஹூண்டாய் வென்யூ கார்களுக்கான EMI-களுக்கு இடையே உள்ள வேறுபாடு என்ன.? எது பெஸ்ட்.?
மாருதி பிரெஸ்ஸா - ஹூண்டாய் வென்யூ கார்களுக்கான EMI-களுக்கு இடையே உள்ள வேறுபாடு என்ன.? எது பெஸ்ட்.?
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
Embed widget