வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் : மீனவர்களுக்கு எச்சரிக்கை
தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு சுமார் 13 கிமீ வேகத்தில் வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, இலங்கைக்கு கிழக்கே சுமார் 190 கி.மீ., தெலைவிலும், நாகப்பட்டினத்திலிருந்து கிழக்கு-தென்கிழக்கே 430 கி.மீ., புதுச்சேரிக்கு தென்கிழக்கே 520 கிமீ தூரத்திலும் நிலவி வருகிறது.
இது அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் இலங்கையின் கிழக்குக் கரையோரமாக வட தமிழகக் கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவி வரும்நிலையில், இதன் காரணமாக மீனவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதி, வடதமிழக மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 500 முதல் 6 கிலோமீட்டர் வேகத்திலும் இடை இடையே மணிக்கு 70 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதேபோல், வருகின்ற 5 ம் தேதி மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், வடதமிழக மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரப் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடை இடையே மணிக்கு கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது . இதன் காரணமாக மீனவர்களுக்கான எச்சரிக்கை: pic.twitter.com/I1F1WAiixZ
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) March 4, 2022
இன்றைய மழை நிலவரம் :
கடலோர தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். டெல்டா மாவட்டங்கள் ( தஞ்சாவூர். திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை: புதுக்கோட்டை கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் புதுவை. காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
05.03.202 : கடலோர தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும். உள் மாவட்டங்களில் ஒரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் சில பெய்யக்கூடும் டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை அரியலூர், பெரம்பலூர், திருச்சி பகுதிகளில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்