மேலும் அறிய

TN Rain Alert: மக்களே உஷார்..! அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழை...! எங்கெங்கு தெரியுமா..?

தமிழகத்தில் அடுத்த ஒரு மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் அடுத்த ஒரு மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இன்று காற்றழுத்த தாழ்வுப்பகுதி:

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் டிசம்பர் 5 ஆம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தது. மேலும்  இது அதற்கடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வலுவடையக்கூடும் என்றும், பிறகு மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 8 ஆம் தேதி வடதமிழகம்- புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளின் அருகில் நிலவக்கூடும் என்றும் கூறப்பட்டிருந்தது

அதேசமயம் குமரிக்கடல் பகுதிகளிலிருந்து வடக்கு கேரளா வரை நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, டிசம்பர் 6 ஆம் தேதி வரை இலேசானது முதல் மிதமானது வரை மழை செய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இன்று காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாவதால் தமிழகத்தில் டிசம்பர் 7 ஆம் தேதி கனமழைக்கும், 8 ஆம் தேதி மிக கன மழைக்கும் வாய்ப்புள்ளது. 

இதற்கிடையில் சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக  தெரிவித்துள்ளது. அதன்படி  நாகப்பட்டினம், திருவாரூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தஞ்சாவூர்,சிவகங்கை,இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யலாம் என கணிக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் மழை பெய்யுமா? 

வானிலை மைய அறிக்கைப்படி, சென்னை மற்றும் புறநகர் பகுதியில்  அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில்  லேசானது /  மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26  டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை 

05.12.2022: அந்தமான் கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

06.12.2022: அந்தமான் கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு மற்றும் மத்திய வங்க கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

07.12.2022: தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 

மன்னார் வளைகுடா மற்றும் தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

08.12.2022: தென்மேற்கு மற்றும் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள்,  ஆந்திர – தமிழக கடலோரப்பகுதிகள், வடக்கு இலங்கை கடலோரப்பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள்  மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70   கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு  செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தலைப்பு செய்திகள்

CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
வெட்கம், சொரணை இருந்தால் விஜய்க்கு இனி ஓட்டு போடாதீங்க.. திமுக MP ஆ.ராசா ஆவேசம்!
வெட்கம், சொரணை இருந்தால் விஜய்க்கு இனி ஓட்டு போடாதீங்க.. திமுக MP ஆ.ராசா ஆவேசம்!
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Nainar Nagendran: வாண்டட் ஆக வந்து சிக்கிய நயினார்.. அரசியல் பழி தீர்க்கும் அண்ணாமலை ஆதரவாளர்கள்!
Nainar Nagendran: வாண்டட் ஆக வந்து சிக்கிய நயினார்.. அரசியல் பழி தீர்க்கும் அண்ணாமலை ஆதரவாளர்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Embed widget