TN Heavy Rain Update: தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்..!
தமிழ்நாடு முழுவதும் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வுமையம் இன்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
"தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு கனமழை தொடர வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் இன்று 14 மாவட்டங்களிலும், நாளை 16 மாவட்டங்களிலும் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது. மாநிலத்தில் இன்று சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை. காஞ்சிபுரம், வேலூர், கிருஷ்ணகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, திருப்பத்தூர், விழுப்புரம், கடலூர் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
நாளை சேலம், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது."
இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.