மேலும் அறிய
தைப்பூச இருமுடி திருவிழா: மேல்மருவத்தூரில் நின்று செல்லும் விரைவு ரயில்கள்.. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!
மேல்வருவத்தூர் செல்லும் பக்தர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி, ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு.

ரயில்
Source : Other
இருமுடி திருவிழாவிற்கு விரைவு ரயில்கள் மேல்மருவத்தூரில் நின்று செல்லும். - ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு.
மதுரை வைகை எக்ஸ்பிரஸ்
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் டிசம்பர் 15 முதல் பிப்ரவரி 2 வரை தைப்பூச இருமுடி திருவிழா நடைபெற இருக்கிறது. எனவே பயணிகள் வசதிக்காக டிசம்பர் 15 முதல் டிசம்பர் 31 வரை புறப்பட வேண்டிய மதுரை - சென்னை - மதுரை வைகை எக்ஸ்பிரஸ் (12636/12635), சென்னை - மதுரை பாண்டியன் எக்ஸ்பிரஸ் (12637), டெல்லி ஹஜ்ரத் நிஜாமுதீன் - கன்னியாகுமரி திருக்குறள் எக்ஸ்பிரஸ் (12642), சென்னை - செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் (12661), சென்னை - கொல்லம் எக்ஸ்பிரஸ் (16101), தாம்பரம் - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் (16103), செங்கோட்டை - தாம்பரம் சிலம்பு எக்ஸ்பிரஸ் (20684), தாம்பரம் - நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் (20691), தாம்பரம் நாகர்கோவில் தாம்பரம் விரைவு ரயில் (22657/22658) ஆகிய ரயில்கள் மேல்மருவத்தூரில் நின்று செல்லும்.
மறு மார்க்கம்
அதேபோல மறு மார்க்கத்தில் டிசம்பர் 14 முதல் டிசம்பர் 31 வரை புறப்பட வேண்டிய மதுரை - சென்னை பாண்டியன் எக்ஸ்பிரஸ் (12638) செங்கோட்டை - சென்னை பொதிகை எக்ஸ்பிரஸ் (12662), கொல்லம் - சென்னை எக்ஸ்பிரஸ் (16102), ராமேஸ்வரம் - தாம்பரம் எக்ஸ்பிரஸ் (16104), பனாரஸ் - கன்னியாகுமரி காசி தமிழ்ச் சங்கம் எக்ஸ்பிரஸ் (16368), செங்கோட்டை - சென்னை சிலம்பு எக்ஸ்பிரஸ் (20682), நாகர்கோவில் - தாம்பரம் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் (20692), ராமேஸ்வரம் - புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ் (20850), ராமேஸ்வரம் - பனாரஸ் எக்ஸ்பிரஸ் (22536), ராமேஸ்வரம் - அயோத்தியா கண்டோன்மெண்ட் எக்ஸ்பிரஸ் (22613), தஞ்சாவூர் வழி சென்னை - மதுரை எக்ஸ்பிரஸ் (22623), பிகானேர் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களும் மேல்மருவத்தூர் நின்று செல்லும்.
மேலும் எந்த ரயில்களும் மேல்மருவத்தூரில் நின்று செல்லும்
டிசம்பர் 18 முதல் 31 வரை புறப்பட வேண்டிய மதுரை - பிகானேர் எக்ஸ்பிரஸ் (22631), தஞ்சாவூர் வழி மதுரை - சென்னை எக்ஸ்பிரஸ் (22624), கன்னியாகுமரி பனாரஸ் தமிழ் சங்கம் எக்ஸ்பிரஸ் (16367), சென்னை நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் (12667), டிசம்பர் 17 முதல் 31 வரை புறப்பட வேண்டிய அயோத்தியா கண்டோன்மென்ட் - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் (22614), ராமேஸ்வரம் - பனாரஸ் எக்ஸ்பிரஸ் (22535), மும்பை லோக மான்ய திலக் - மதுரை எக்ஸ்பிரஸ் (22101), கன்னியாகுமரி - டெல்லி ஹஸ்ரத் நிசாமுதீன் திருக்குறள் எக்ஸ்பிரஸ் (12641), டிசம்பர் 19 முதல் 31 வரை புறப்பட வேண்டிய மதுரை - லோக மான்ய திலக் எக்ஸ்பிரஸ் (22102), புவனேஸ்வர் - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் (20849), நாகர்கோவில் - சென்னை விரைவு ரயில் (12668), டிசம்பர் 16 முதல் 31 வரை புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் - பிரோஸ்பூர் எக்ஸ்பிரஸ் (20497), மதுரை - டெல்லி ஹஸ்ரத் நிஜாமுதீன் மதுரை எக்ஸ்பிரஸ் (12651/12652), டிசம்பர் 13 முதல் 31 வரை புறப்பட வேண்டிய பிரோஸ்பூர் - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் (20498) ஆகிய ரயில்களும் மேல்மருவத்தூரில் நின்று செல்லும்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















