மேலும் அறிய

BSC Data Science IIT Chennai: வாவ் தகவல்.. சென்னை ஐஐடியில் பிஎஸ்சி தரவு அறிவியல் படிப்பு; விண்ணப்பிப்பது எப்படி?

ஐஐடி சென்னையில் பிஎஸ்சி தரவு அறிவியல் படிப்பைப் படிக்க விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐஐடி சென்னையில் பிஎஸ்சி தரவு அறிவியல் படிப்பைப் படிக்க விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 2023 பருவத்திற்கு விண்ணப்பிக்க ஜனவரி 16ஆம் தேதி கடைசித் தேதி ஆகும். ஓராண்டில் வெளியேறினாலும் சான்றிதழ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உலகின் முதல் இளங்கலை தரவு அறிவியல் பட்டப்படிப்பு திட்டம் சென்னை ஐஐடியால் தொடங்கப்பட்டது. இதில் பன்னிரெண்டாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பு (டிப்ளமோ) முடித்த மாணவர்கள் அனைவரும் விண்ணப்பித்து நான்கு ஆண்டு பட்டப்படிப்பு பயிலலாம். 2023 ஆம் ஆண்டிற்கான வகுப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இத்திட்டத்தில் சேர்ந்து படிப்பதற்கு ஐ.ஐ.டி, மெட்ராஸ் மூலம் நடத்தப்படும் நுழைவுத் தேர்வில் (JEE) பங்கு பெறத் தேவையில்லை. இத்திட்டத்தில் பயில அறிவியல், மனிதவியல் , வணிகவியல் போன்ற அனைத்து பாடப்பிரிவு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். 

இத்திட்டத்தின் ஒவ்வொரு நிலையின் முடிவிலும் வெளியேறும் வழிகள் உள்ளன. மேலும் மாணவர்கள் ஒரு அடிப்படைச் சான்றிதழ், ஒன்று அல்லது இரண்டு டிப்ளமோக்கள், அல்லது பட்டப்படிப்புடன் வெளியேறலாம். இத்திட்டத்தில் வகுப்புகள் இணையதளம் வழியாகவே நடத்தப்படும். நாடு முழுவதும் உள்ள தேர்வு மையங்களில் தேர்வுகள் நேரில் நடத்தப்படுகின்றன. 

16,000 பேர் படிக்கும் மாணவர்கள்

மாணவர்கள் ஒரே நேரத்தில் தங்களது விருப்ப பட்டப்படிப்பினை (Degree Course)படித்துக் கொண்டே ஐ.ஐ.டி, மெட்ராஸ் வழங்கும் Bachelor of Science in Data Science & Applications பட்டப்படிப்பையும் பயிலலாம். தற்போது டிப்ளமோவில்‌ 4,500-க்கும்‌ மேற்பட்ட மாணவர்கள்‌, பட்டப்படிப்பில்‌ 60 பேரைக்‌ கொண்ட முதல்‌ பேட்ச்‌ மாணவர்கள்‌ உள்பட 16,000-க்கும்‌ மேற்பட்ட மாணவர்கள்‌ தற்போது இத்திட்டத்தில்‌ படித்து வருகின்றனர்‌.

BSC Data Science IIT Chennai: வாவ் தகவல்.. சென்னை ஐஐடியில் பிஎஸ்சி தரவு அறிவியல் படிப்பு; விண்ணப்பிப்பது எப்படி?

பத்தாம்‌ வகுப்பில்‌ கணிதம்‌, ஆங்கிலம்‌ ஆகிய பாடங்களைப்‌ படித்து முடித்தவர்கள்‌ இதில்‌ விண்ணப்பிக்கத்‌ தகுதி உடையவர்கள்‌. பன்னிரண்டாம்‌ வகுப்பில்‌ படித்துவரும்‌ மாணவர்கள்‌ தகுதித்‌ தேர்வு எழுதி பள்ளியில்‌ படிக்கும்போதே ஐஐடி சென்னையில்‌ மாணவர்‌ சேர்க்கைக்கான கடிதத்தைப்‌ பெற்றுக்‌ கொள்ளலாம்‌. இந்த மாணவர்‌ சேர்க்கை நடைமுறை இந்தியாவிலேயே தனித்துவமான ஒன்றாகும்‌. 

எந்த வயதை உடையவர்களும்‌, எந்தப்‌ பின்னணி அல்லது பிரிவைச்‌ சேர்ந்தவர்களும்‌ இப்படிப்பிற்கு விண்ணப்பித்து பாடங்களைக்‌ கற்கலாம்‌. கலை, அறிவியல்‌, வணிகவியல்‌, பொருளாதாரம்‌, மருத்துவம்‌, சட்டம்‌, பொறியியல்‌ போன்ற பாடப்பிரிவுகளுடன்‌ தொடர்புடைய 18 முதல்‌ 75 வரை வயதுடையோர்‌ தற்போது மாணவர்களாக இருந்து வருகின்றனர்‌.

ஐஐடி மெட்ராஸ்‌ நடத்தும்‌ நான்கு அடிப்படையான பாடங்களை நான்கு வாரங்கள்‌ கற்றுக்‌ கொண்டு மாணவர்கள்‌ தேர்வு எழுதி தகுதிபெறும்‌ விதமாக இப்பாடத்‌ திட்டம்‌ வடிவமைக்கப்பட்டு உள்ளது. குறைந்தபட்சம்‌ 50-க்கும்‌ மேற்பட்ட மதிப்பெண்‌ எடுத்து தேர்ச்சி பெறுவோர்‌ இதில்‌ சேர்த்துக்‌ கொள்ளப்படுவார்கள்‌. இடங்களின்‌ எண்ணிக்கை இவ்வளவுதான்‌ என வரையறை ஏதும்‌ இல்லாததால்‌, தகுதிபெறும்‌ அனைத்து மாணவர்களும்‌
இப்படிப்பில்‌ கல்வி கற்க முடியும்‌.

மாணவர்கள் https://onlinedegree.iitm.ac.in என்ற இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிக்கக் கடைசித் தேதி-  ஜனவரி 16ஆம் தேதி 2023. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pongal 2025: பிறந்தது தை! தமிழ்நாடு முழுவதும் களைகட்டியது பொங்கல் - உற்சாகத்தில் தமிழர்கள்
Pongal 2025: பிறந்தது தை! தமிழ்நாடு முழுவதும் களைகட்டியது பொங்கல் - உற்சாகத்தில் தமிழர்கள்
Jallikattu 2025: ஆரம்பித்தது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு! சீறும் காளைகளும், காளையர்களும்!
Jallikattu 2025: ஆரம்பித்தது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு! சீறும் காளைகளும், காளையர்களும்!
"தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்" பொங்கலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் போட்ட பதிவு!
Pongal 2025 Nalla Neram: மக்களே! பொங்கல் வைக்க நல்ல நேரம் எது? இந்த டைம்ல வைங்க
Pongal 2025 Nalla Neram: மக்களே! பொங்கல் வைக்க நல்ல நேரம் எது? இந்த டைம்ல வைங்க
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP state executive: மாணவிக்கு பாலியல் தொல்லை.. தலைமறைவான BJP  நிர்வாகி! தட்டித்தூக்கிய காவல் துறை!Velumani Vs Munusamy | கே.பி.முனுசாமி Vs எஸ்.பி.வேலுமணி.. பிரிந்து நிற்கும் MLA-க்கள்! தலைவலியில் EPSVijay Vs Ajith : அஜித்தை கண்டுக்காத விஜய் TN BJP New Leader : சென்னை வரும் கிஷன் ரெட்டி தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்? பரபரக்கும் சீனியர்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal 2025: பிறந்தது தை! தமிழ்நாடு முழுவதும் களைகட்டியது பொங்கல் - உற்சாகத்தில் தமிழர்கள்
Pongal 2025: பிறந்தது தை! தமிழ்நாடு முழுவதும் களைகட்டியது பொங்கல் - உற்சாகத்தில் தமிழர்கள்
Jallikattu 2025: ஆரம்பித்தது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு! சீறும் காளைகளும், காளையர்களும்!
Jallikattu 2025: ஆரம்பித்தது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு! சீறும் காளைகளும், காளையர்களும்!
"தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்" பொங்கலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் போட்ட பதிவு!
Pongal 2025 Nalla Neram: மக்களே! பொங்கல் வைக்க நல்ல நேரம் எது? இந்த டைம்ல வைங்க
Pongal 2025 Nalla Neram: மக்களே! பொங்கல் வைக்க நல்ல நேரம் எது? இந்த டைம்ல வைங்க
Happy Pongal 2025 Wishes: பொங்கல் வாழ்த்துகள் சொல்லிட்டிங்களா.! உங்களுக்காக டாப் 8 வாழ்த்து புகைப்படங்கள்...
Happy Pongal 2025 Wishes: பொங்கல் வாழ்த்துகள் சொல்லிட்டிங்களா.! உங்களுக்காக டாப் 8 வாழ்த்து புகைப்படங்கள்...
UGC NET: ஜன.15ம் தேதி தேர்வு இல்லை; நெட் தேர்வு ஒத்திவைப்பு - NTA அறிவிப்பு!
UGC NET: ஜன.15ம் தேதி தேர்வு இல்லை; நெட் தேர்வு ஒத்திவைப்பு - NTA அறிவிப்பு!
அதிக நேரம் ரீல்ஸ் பார்க்கும் பழக்கம் இருக்கா? ஆரோக்கியமானது இல்லை - எச்சரிக்கும் ஆய்வு!
அதிக நேரம் ரீல்ஸ் பார்க்கும் பழக்கம் இருக்கா? ஆரோக்கியமானது இல்லை - எச்சரிக்கும் ஆய்வு!
"ரூ 1,000 கோடி நிலுவைத்தொகையை விடுவிங்க" உரிமையுடன் கேட்ட முதல்வர்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
Embed widget