Chennai High Court: வார்டு பாய்க்கு ஹெல்ப் பண்ணனும்.. பைக் ரேசில் ஈடுபட்ட இளைஞருக்கு நூதன தண்டனை!
அவர் ஸ்டான்லி ரவுண்டானாவில் இருந்து மூலக்கொத்தளத்துக்கு பைக் ரேஸ் சென்றதாக கூறப்படுகிறது.
பைக் ரேஸில் ஈடுபட்டதாக கைதான இளைஞர் பிரவீன் என்பவர் ஸ்டான்லி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் ஒரு மாதம் பணியாற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மார்ச் 21ஆம் தேதி பைக் ரேஸில் ஈடுபட்டதாக கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த பிரவீன் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். அவர் ஸ்டான்லி ரவுண்டானாவில் இருந்து மூலக்கொத்தளத்துக்கு பைக் ரேஸ் சென்றதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கைதான இளைஞருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்டான்லி மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் வார்டு பாய்களுக்கு உதவியாக ஒரு மாதம் மாதம் பணியற்ற வேண்டும் என்று உத்தரவை பிறப்பித்து ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
பிரவீன் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை பணியாற்ற வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும், வார்டில் தினசரி அனுபவம் குறித்து மருத்துவமனைக்கு முதல்வருக்கு அறிக்கை சமர்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பைக் ரேசில் ஈடுபட்ட இளைஞருக்கு நூதன தண்டனை வழங்கிய நீதிமன்றம்https://t.co/wupaoCQKa2 | #Chennai #BikeRace #MadrasHighCourt pic.twitter.com/wprNbTSHp3
— ABP Nadu (@abpnadu) March 31, 2022
முன்னதாக, இன்று பைக் ரேஸில் ஈடுபடுவோரின் பெற்றோருக்கு போலீசார் எச்சரிக்கை ஒன்றை விடுத்தனர். அதில், சென்னையில் இருசக்கர வாகன பந்தயத்தில் ஈடுபடும் இளைஞர்களின் பெற்றோர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து பைக் ரேசில் ஈடுபட்டால் கைது நடவடிக்கை பாயும். ரவுடிகளிடம் வாங்குவதுபோல் ரேசில் ஈடுபடுவோரிடம் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 107, 110ன் கீழ் உறுதிமொழி பத்திரம் எழுதி வாங்கப்படும். எதிர்காலம் கருதி முதன்முறையாக சிக்குவோரிடம் நன்னடத்தை உறுதி மொழி பத்திரம் வாங்கி எச்சரித்து அனுப்பப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்