மேலும் அறிய

மக்களை கொன்றுவிட்டு பணத்தைக் கொடுத்தால் போதுமா? - ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி..!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில், மக்களை கொன்றுவிட்டு பணத்தை விட்டு எறிந்தால் போதுமா? என்று சென்னை உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 2018-ஆம் ஆண்டு மே மாதம் 22-ஆம் தேதி நடைபெற்ற பொதுமக்கள் பேரணியின்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பெண்கள் உள்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 100க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் அப்போது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல இடங்களில் போலீசாருக்கு எதிராகவும், அப்போதைய தமிழக அரசுக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.

மேலும், இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி சிவஞானம் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, “ நாங்கள் மக்களை கொன்று அவர்கள் மீது பணத்தை எறிந்துவிட்டு, எங்கள் வேலை முடிந்துவிட்டது என்று சொல்ல முடியுமா? இதுதான் நாம் கட்டி எழுப்ப ஆசைப்பட்ட சமூகமா? சிலரிடம் பணத்தை எறிந்துவிட்டு இங்கு எல்லாம் தள்ளப்படுகிறது.”என்று தனது ஆதங்கமாக கூறினார்.

மேலும், நீதிபதி கூறும்போது, “அரசு தனது போலீஸ் மூலம் நிராயுதபாணியான எதிர்ப்பாளர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது ஆபத்தானது. இந்த சம்பவம் நடந்து மூன்று ஆண்டுகள் ஆகியும் இதுவரை யார் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.

இந்த விவகாரத்தில் உண்மைகள் வௌிச்சத்திற்கு வருவதற்கு முன்னர் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஆனால், இந்த வழக்கில் உண்மைகளை பகிரங்கப்படுத்தப்பட வேண்டியது அவசியம் என்று கூறினார்.

மேலும் தேசிய மனித உரிமை ஆணையத்தின் புலனாய்வு பிரிவு அறிக்கை மற்றும் தமிழக முதன்மை செயலர் அறிக்கை இரண்டையும் சீல் ஈட்ட கவரில் தாக்கல் செய்யவேண்டும். வழக்கு குறித்து தேசிய மனித உரிமை ஆணையம், தமிழக அரசு ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 9-ஆம் தேதி ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

ரூ.1,037 கோடியில் சாலைகள் தரம் உயர்த்த முதல்வர் விஜய் போட்ட கையெழுத்து - எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா? முழு லிஸ்ட் இதோ!
ரூ.1,037 கோடியில் சாலைகள் தரம் உயர்த்த முதல்வர் விஜய் போட்ட கையெழுத்து - எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா? முழு லிஸ்ட் இதோ!
"திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அப்பட்டமாக தோல்வியடைந்த தவெக அரசு" - சரமாரியாக சாடிய ஸ்டாலின்!
திருப்பரங்குன்றம் நோக்கி புறப்பட்ட CRPF... முதற்கட்டமாக 107 ரிசர்வ் காவல் படையினர் புறப்பட்டனர் !
திருப்பரங்குன்றம் நோக்கி புறப்பட்ட CRPF... முதற்கட்டமாக 107 ரிசர்வ் காவல் படையினர் புறப்பட்டனர் !
தவெக எம்.எல்.ஏ கைது விவகாரம் தொடர்பாக காவல்துறை எச்சரிக்கை: விவரம் தெரியுமா?
தவெக எம்.எல்.ஏ கைது விவகாரம் தொடர்பாக காவல்துறை எச்சரிக்கை: விவரம் தெரியுமா?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kallakurichi MLA: ஆபாசக்குறுஞ்செய்தி அனுப்பிய வழக்கில் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ கைது - பறிபோகுமா எம்.எல்.ஏ பதவி?
Kallakurichi MLA: ஆபாசக்குறுஞ்செய்தி அனுப்பிய வழக்கில் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ கைது - பறிபோகுமா எம்.எல்.ஏ பதவி?
"திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அப்பட்டமாக தோல்வியடைந்த தவெக அரசு" - சரமாரியாக சாடிய ஸ்டாலின்!
தவெக எம்.எல்.ஏ கைது விவகாரம் தொடர்பாக காவல்துறை எச்சரிக்கை: விவரம் தெரியுமா?
தவெக எம்.எல்.ஏ கைது விவகாரம் தொடர்பாக காவல்துறை எச்சரிக்கை: விவரம் தெரியுமா?
Thiruparankundram Case: திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: 100 ஆண்டுகால போராட்டம் முதல் உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு வரை - முழு பின்னணி
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: 100 ஆண்டுகால போராட்டம் முதல் உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு வரை - முழு பின்னணி
திருப்பரங்குன்றம் மலைத்தூணில் நாளை தீபம் ஏற்ற ஆணை - அதிரடி உத்தரவை பிறப்பித்த உச்சநீதிமன்றம்!
திருப்பரங்குன்றம் மலைத்தூணில் நாளை தீபம் ஏற்ற ஆணை - அதிரடி உத்தரவை பிறப்பித்த உச்சநீதிமன்றம்!
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் - செய்யப்பட்ட மாற்றம் என்ன?
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் - செய்யப்பட்ட மாற்றம் என்ன?
சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் வெளியான தீர்ப்பு - முழு விவரம் தெரியுமா?
சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் வெளியான தீர்ப்பு - முழு விவரம் தெரியுமா?
"இறை உணர்வோடு விளையாடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்" - தமிழக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!
Embed widget